சித்திரை விசு, மலையாளிகள் கொண்டாடும் பண்டிகை

நாளை சித்திரை விசு, மலையாளிகள் கொண்டாடும் பண்டிகை, நல்லது. ஆனால் நயன் தாராவும் மலையாளி என்பதுதான் அடிநெஞ்சினை தாக்குகின்றது

டெல்லியில் அழிச்சாட்டியம் செய்யும் மிஞ்சும் வகையில் நாளை முகநூலில் நண்பர Babu Rao அந்த நல்லி எலும்பு நயன் படத்துடன் அகதளம் செய்வார் என்பதால் நாளை முகநூல் பக்கம் வரகூடாது

புனித வெள்ளி எனும்பெயரில் எம்பெருமான் காப்பாற்றினார், அந்த துக்கம் எனும்பெயரில் , இந்த துக்கம் பக்கம் வராமல் ஓடிவிடலாம்

இன்று பஞ்சாபியரின் பைசாகி பண்டிகை, ஆனால் சிம்ரனுக்கு வாழ்த்து சொல்ல ஒருவனும் இல்லை. சிம்ரன் ரசிகர்படை என அடிக்கடி சொல்லிகொண்டிருந்தவனிடம் இருந்து ஒரு சத்தமுமில்லை, கையில் கிடைத்தால் அந்த துரோகியினை சிம்ரனிடம் ஒப்படைத்துவிடலாம்

துரதிருஷ்டசாலி அந்த சிம்ரன், அவரை போல எல்லோரயும் மறந்துவிடும இந்த தமிழகம் குஷ்பூவிற்கு மட்டும் நன்றிகடனை செய்துகொண்டிருக்கின்றது.

எனினும் நண்பர்கள் Babu Rao Chandran Kannann பற்றி தெரிந்தவர்கள் முகநூல் பக்கம் வராமல் இருப்பது நல்லது, வந்தால் உங்களுக்கு வரும் தாங்க முடியாத எரிச்சலுக்கும், அழுகைக்கும் யாரும் பொறுப்பல்ல..

“குவலயத்து பேரழகி குஷ்பூ” ரசிகர் மன்றம் சார்பாக முகநூல் வாசிகளுக்கு இந்த அபாய எச்சரிக்கையினை செய்தாயிற்று