சினி மினிகள்…
நான் போகும்பொழுது எதனையும் கொண்டு போகபோவது இல்லை : தனுஷ் பேட்டி
ஆனால் மாமனார் போகும்பொழுது பாதி சொத்து இவருக்கு வரும், அதனை இவர் வேன்டாம் என்றேல்லாம் சொல்ல மாட்டார்.
புதுகட்சி தொடங்கும் பணியில் ரஜினி : செய்தி
விரைவில் அவர் படம் ரிலீசாக போகின்றது என்பதுதான் அர்த்தம், வேறோன்றுமேயில்லை.
வேலைக்காரன் படத்தில் சிவகார்திகேயனோடு நடிக்கின்றார் நயன் தாரா
இவ்வளவுதான் நயனின் நிலை, அடுத்து பரோட்டா சூரியின் நாயகியாவார், அப்படி மலிந்துவிட்டது அவர் மார்க்கெட்
ஆனால் 100 கோடி கொடுத்தாலும் எங்கள் தலைவி குஷ்பூ சிவகார்த்திகேயனோடு நடிப்பாரா? நெவர்
அதுதான் உயர்ந்த கௌரவம்.
வானத்தில் தெரிவதெலாம் நிலா ஆகிவிட முடியாது.