சிரியாவில் ஏவுகனை யுத்தம்

Image may contain: ocean and sky

எங்கள் ஏவுகனைகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என சிரியாவில் ரஷ்யாவினை நேரடியாகவே எச்சரிக்கின்றார் டிரம்ப்

அதன் பொருள் அமெரிக்கா விமானங்களை பயன்படுத்தாது, தன் ஏவுகனைகளை வீசி தாக்கபோகின்றது.

எல்லா வகை ஏவுகனைகளும் அவர்களிடம் இருந்தாலும் டொமஹாக் ரக ஏவுகனைகளும், ஹார்ப்புன் ரகங்களும் சவால் விட கூடியவை

அதிலும் ஹாக் ரகம் நேரத்திற்கு தக்கவாறு வேகம், திசை எல்லாம் மாற்றி பறக்கும் கில்லாடி வகை

இதனை அடுத்து நீர்மூழ்கியில் இருந்து கடலுக்குள் இருந்து வரும் டர்பிடோ ரகமும் உண்டு

இவ்வகை ஏவுகனைகள் ஆதிக்கம் செலுத்தலாம்.

ரஷ்யாவிடம் S 400 எனும் தடுப்பு சாதனம் உண்டு. நிலம் நீர், கடல் என பலவகையிலிருந்து வரும் விமானம் ஏவுகனைகளை அது தடுக்கும் , இந்தியா கூட வாங்க இருக்கின்றது

ஆனால் S 400 இன்னும் சோதிக்கபடவில்லை

சிரியாவில் அதனை ரஷ்யா சோதிக்கலாம், அதன் முடிவுகள் உலகிற்கு தெரியலாம்

அமெரிக்க போர்கப்பல்கள்தான் ஏவுகனைகள் ஏவும் பிரதான இலக்காக இருக்கலாம், அதனால் ரஷ்யா கப்பல்களை தகர்க்கும் ஏவுகனைகளுடன் சுற்றி வருகின்றது

எப்படியோ ஏவுகனை யுத்தம் சிரியாவில் தொடங்க இருப்பது மட்டும் புரிகின்றது