சிரியாவுக்கு வந்து இறங்கியிருக்கின்றார் ரஷ்ய புட்டீன்
அரேபியாவின் கிழக்கே அமெரிக்காவும் ஈரானும் முட்டிகொண்டு நிற்க, கொஞ்சமும் பதற்றமின்றி சிரியாவுக்கு வந்து இறங்கியிருக்கின்றார் ரஷ்ய புட்டீன்
இவர் கொஞ்சமல்ல நிறையவே அதிரடியான ஆசாமி
ஒரு குழப்பமான நாட்டுக்குள் அதுவும் அண்டை நாடு பற்றி எரியும் பொழுது செல்ல தனி தைரியம் வேண்டும், புட்டீன் அசால்ட்டாக சென்று சிரிய அதிபர் அல் பசாத்தை சந்தித்துவிட்டு வாருங்களேன் நம் படைகள் காவல்காக்கும் இடத்தை சுற்றி பார்த்துவிட்டு வரலாம் என கிளம்பிவிட்டார்
தன் சுற்றுபயணத்தில் சிரிய ரஷ்ய உறவு இன்னும் முன்னேறும் என்றும் இன்னும் பல விஷயங்களை சொன்ன புட்டீன் , ஈரான் விவகாரம் பற்றி சொன்னதுதான் ஹைலைட்
ஆம், இது அணு ஆயுத யுத்தத்தில் முடியும் அதனால் எல்லோரும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்
இது கொஞ்சம் கவனிக்கதக்கது
ஆம், ஈரானிடம் அணுகுண்டு இருப்பதாக இதுவரை உறுதிபடுத்தபடா நிலையில் புட்டீன் இப்படி சொல்லியிருப்பது பல கேள்விகளை எழுப்புகின்றது
ஈரானிடம் அணுகுண்டு இருப்பதை அவர் ஒப்புகொள்கின்றாரா? இல்லை அணுகுண்டு மர்மமாக வரும் என சொல்கின்றாரா? இல்லை அணுஆயுத யுத்தம் வெடிக்கும் அளவு ரஷ்யா களமிறங்கும் என எச்சரிக்கின்றாரா? என தலையினை பிய்த்து கொண்டிருக்கின்றது உலகம்
“அட பார்ரா, வந்துட்டார்டா நம்ம சிங்கம். அவர் சிரியாவுக்கு வந்தால் என்ன? ஈரானுக்குள் வந்தால் என்ன நாங்கெல்லாம் ஒண்ணுக்குள் ஒண்ணு” என கள்ளசிரிப்பு சிரிகின்றது ஈரான்
ஆம், விஷயம் அந்தமாதிரிதான்
ஆக ரஷ்யா ஈரான் ஈராக் சிரியா ஆகிய 4 நாடுகளும் ஒரு அணியில் வந்தாயிற்று, எதிரணியில் அமெரிக்கா இருக்கின்றது, அவர்களுடன் இந்த களத்தில் கூட்டணி யாருமில்லை
மிக மிக பதற்றமான நேரத்தில், இப்பக்கம் அமெரிக்க படைகள் நொறுக்கபடும் பொழுது அதை சுவரின் அந்த பக்கத்தில் நின்று பார்த்து கொண்டிருக்கும் புட்டீன் உலகை அலறவிடுகின்றார்
இதே மர்ம பயணத்தை அவர் டெஹ்ரானுக்கும் மேற்கொள்ளலாம், சொல்லமுடியாது
ஆக உலகத்தாரே, டிரம்ப் வெட்டி டிவிட்டுகளை விட்டுகொண்டிருக்கும் நிலையில் களத்துக்கு நேரடியாக வந்து நின்று “அங்கே என்ன சத்தம் மேன்?” என கேட்பது மகா சுவாரஸ்யம்
இப்பொழுது அமெரிக்காவில் இரவு, டிரம்ப் தூங்கிகொண்டிருக்கின்றார், கதவை தட்டி அவருக்கு புட்டீன் செய்தியினை சொல்ல பெண்டகன் அதிகாரிகள் காத்துகொண்டிருக்கின்றார்கள், இனி விடிந்து விஷயத்தை சொன்னவுடன் டிவிட்டர் அக்கவுண்டை கொஞ்ச நாளைக்கு டி ஆக்டிவேட் செய்துவிடுவார்
என்ன சொல்லுங்கள், சிரியாவினை காத்த புட்டீன் இப்பொழுது ஈரானையும் காக்க வந்துவிட்டார்
அவர்களுக்கும் இவர்களுக்கும் பங்காளி உறவா? இல்லை சம்பந்தி உறவா?

ஒரு மண்ணாங்கட்டியுமில்லை எல்லாம் எண்ணெய் படுத்தும்பாடு. எப்படியோ நல்லது நடந்தால் சரி.