சிரியா சிக்கல் நீண்டது

இரு நாட்களாக உலகளவில் அடிபடும் செய்தி சிரியாவில் நடக்கும் துருக்கிய தாக்குதல் , கிட்டதட்ட 100 பேர் பலி, 1லட்சம் பேர் பாதிப்பு என மனுகுல நெருக்கடி ஏற்பட்டாயிற்று, ஐரோப்பா எங்கும் கண்டன ஆர்ப்பாட்டம், இந்தியாவும் தன் கண்டனத்தை துருக்கிக்கு தெரிவித்துவிட்டதுசிரியா சிக்கல் நீண்டது என்பதும், நாம் நிறைய எழுதியாயிற்று என்றாலும் முன்கதை சுருக்கம் இதுதான்அதாவது டுனிசியா, எகிப்து புரட்சிகளை தொடர்ந்து சிரியாவிலும் புரட்சி வரும் என எதிர்பார்த்தார்கள் வரவே இல்லை, காரணம் அந்த அதிபர் அல் அசாத் மேல் மக்களுக்கு அதிருப்தி இல்லை, அதிபர் ஷியா இஸ்லாமியர்ஆனால் அமெரிக்க இஸ்ரேலிய கணக்கு வேறாய் இருந்தது, இஸ்ரேலிய கணக்குபடி தன் அண்டை நாடு அமைதியாய் இருப்பதும் அது ஈரானின் கைப்பாவையாய் இருப்பதும் இஸ்ரேலிய கண்ணை உறுத்தின, சிரியாவும் அணு ஆலைகளை அமைத்தது அதை இஸ்ரேல் நொறுக்கியது எல்லாம் திரைமறைவு சண்டைகள்ஆனால் ஹமாஸுக்கும் ஹெஸ்புல்லாவுக்கும் சிரியா ஈரானோடு சேர்ந்து உதவியது , சிரியாவின் பகுதிகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் இருப்பதால் எந்நாளும் உரசல் உண்டுஅமெரிக்காவுக்கு சிரியாவின் அரசை அகற்றி ஈராக் போல பொம்மை அரசை வைத்தால் சிரியா வழியாக குழாய் பதித்து ஈராக் சவுதி எண்ணெயினை ஐரோப்பாவுக்கு கொண்டு செல்லும் திட்டம் உண்டுஇந்நிலையில்தான் 2012 வாக்கில் ஐ.எஸ் இயக்கம் உருவாகி அரேபியாவினை அலறவிட்டது, அந்த குட்டிசாத்தானை யார் உருவாக்கினார் என தெரியாது ஆனால் இஸ்ரேல் அமெரிக்காவினை விடுத்து ஷியா நாட்டை மட்டும் குறிவைத்த ஐ.எஸ் பலத்த சந்தேகத்துக்கு ஆளானதுஐ.எஸ் எனும் கழுத்தறுப்பு இயக்கம் ஈராக் மற்றும் சிரியாவில் ருத்ரதாண்டவம் ஆடியது, இதனிடையே சிரிய அரசை எதிர்த்து அரை டஜன் போராளி குழுக்கள் வந்தன யார் உருவாக்கினார் என்றால் அதே அமெரிக்காஇதில் குர்துகள் படையும் இருந்தது, அதாவது பல போராளி குழுக்கள் ஆட்சி மாற போராடின, குர்து இனம் தனிநாடு அடைய போராடியதுகுர்திஸ்தான் என்பது அவர்கள் கனவு, முன்பு அப்படி ஒரு நாடு உண்டு பின் காணாமல் போனது அதன்பின் துருக்கி ஈராக் சிரியா என பிரிந்து இடக்கும் இனம் அது, இப்பொழுது சிரியாவில் அவர்கள் ஆயுதம் தூக்கி போராட வந்தனர், அமெரிக்கா அணைத்ததுஇந்த போர்களம் சிரிய அரசுக்கும் சிரிய போராளிகளுக்கு எதிராக ஒருபக்கம் நடந்தது, இந்த இருவருக்கும் ஐ.எஸ் இயக்கம் பொது எதிரிஆக ஐ.எஸ் இயக்கம் சிரிய அரசையும் சிரிய போராளிகளையும் எதிர்த்து அடிக்கும்சிரிய போராளிகள் சிரிய அரசையும் ஐ.எஸ் இயக்கத்தையும் எதிர்ப்பார்கள்சிரிய போராளிகளில் குர்துக்கள் சிரிய அரசையும் எதிர்ப்பார்கள் போராளி குழுக்களையும் முறைப்பார்கள்புரிய கொஞ்சம் சிக்கல்தான், இடியாப்ப கதைதான் ஆனால் உண்மையில் அங்கு இந்த குழப்பம்தான் உண்டு, யார் யாரை அடிப்பார்கள் என்றே தெரியாதுஒரு கட்டத்தில் அமெரிக்க படைகள் உள்ளே வந்தன, யார் அழைத்தார்கள் என்றால் ஒருவரும் இல்லை ஆனால் பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் கூடும் என்பது பைபிள் வாக்குஅமெரிக்கா வந்தபின் ரஷ்யாவுக்கு பொறிதட்டிற்று, ஆம் சதாம் பாணியில், லிபிய கடாபி பாணியில் அதிபர் அசாத்தை தொங்கவிட்டுவிட்டு சிரியா வழியாக எண்ணெயினை கொண்டு செல்வார்கள், அப்படி கொண்டு சென்றால் ரஷ்ய எண்ணெய்க்கு ஐரோப்பாவில் மார்கெட் காலி ரஷ்ய பொருளாதாரமும் காலிவிடுவாரா புட்டீன், உலகில் அமெரிக்காவுக்கு அவர்கள் நாட்டுக்கு வெளியே 100க்கு மேற்பட்ட ராணுவமுகாம் உண்டு, ரஷ்யாவுக்கு உலகில் ஒரே ஒரு தளம் உண்டு அது சிரியாவில் உண்டுஅங்கு கால்பதித்தது ரஷ்யா தன் அதிநவீன எஸ் 400 ரகம் வரை வந்து அதன் போக்கில் நின்றது, அது வந்தபின் காட்சிகள் மாறின‌ரஷ்யா அடித்த அடியில் ஐ.எஸ் இயக்கம் அலறி அடித்து ஓடியது, சிரிய போராளிகள் அடங்கினர், அமெரிக்கா நாம் கிளம்புகின்றோம் என சொன்னது, சிரியாவில் அமைதி திரும்ப ஆரம்பித்ததுஈரானும் ரஷ்யாவும் சிரிய அரசை காத்தன‌ஈரானுக்கு இஸ்ரேலை நொறுக்க சிரியா வேண்டும், ஷியா உறவுவேறு. ரஷ்யாவுக்கு சிரியா வழியாக எண்ணெய் செல்ல கூடாது அதற்கு எந்த விலை கொடுக்கவும் தயார்இந்நிலையில் அமெரிக்கா தந்திரமாக ஆடியது, சிரிய அதிபரை அசைக்கமுடியவில்லை சண்டாளன் புட்டீன் கெடுத்தான், சரி சிரியாவினை இரண்டாக உடைத்தால்? வடக்கு சிரியாவில் குர்தோ இல்லை வேறு இனமோ நாடு அடைந்தால் போதாதா அது வழியாக எண்ணெய் செல்லும் அது போதும், டமாஸ்கஸ்ஸை எவனும் வைத்து அழட்டும்குர்துகளுக்கு ஆயுதங்களை அள்ளிகொடுத்தது அமெரிக்கா வட சிரியாவில் அமெரிக்க முகாம் அருகே குர்துக்கள் முகாம் அமைத்து கடும் பலம் பெற்றனர்குர்துக்கள் நாடு அடைந்தாலோ இல்லை சிரியாவில் பலம் பெற்றாலோ அது தன் நாட்டில் சலசலப்பை எற்படுத்தும் என அஞ்சியது துருக்கிஈழம் அமைந்தால் இந்திய தமிழகத்தில் சலசலப்பு வரும் என டெல்லி நினைத்ததல்லவா? அதே காட்சிஇந்நிலையில் அமெரிக்கா சிரியாவினை விட்டு வெளியேறும் என டிரம்ப் அறிவித்த உடனே நெட்டி முறித்த துருக்கி குர்துகளை அடக்க சிரியா உள்ளே வந்து அடிக்கின்றதுஇது நிச்சயம் அத்துமீறிய செயல், இறையாண்மை உள்ள நாட்டை இப்படி அடிப்பது அநீதி ஆனால் துருக்கி கேட்பதாக இல்லை, குர்துகளை ஒழிக்க கடும் மூர்க்கத்தில் இறங்கிவிட்டதுகுர்துகளோ அமெரிக்கா தங்களை கைவிடாது என நம்பினர், ஆனால் அமெரிக்கா ஒருமாதிரி குழப்புகின்றது, குர்துகளுக்கு இப்பொழுது அமெரிக்கா மேல் கடும் கோபம்புலிகளுக்கு பிரேமதாச‌ மேல் வந்த கோபம் அல்லது புலிகளை அமெரிக்கா 2009ல் கைவிட்டபொழுது வந்த ஆத்திரம் போன்றது அதுஆம் ஐ.எஸ் இயக்கத்தை எதிர்க்கவும் சிரிய அரசை மிரட்டவும் இதே குர்துகளுக்கு ஆசைகாட்டி ஆயுதம்காட்டி வளர்த்த அமெரிக்கா இப்பொழுது அவர்களை கைவிட்டது குர்து அநீதிதுருக்கி படைகள் வடக்கு சிரியாவில் இருந்து தாக்குதலை நிறுத்திவிட்டு வெளியேறவேண்டும் என ஐரோப்பா அமெரிக்காவில் ஆர்பாட்டம்தொடங்கிவிட்டதுரஷ்யா பெரிதாக ஏதும் சொல்லவில்லை காரணம் துருக்கியினை பகைக்க அவர்கள் விரும்பவில்லை, எண்ணெய் குழாய் பதிக்கபட்டாதவரை நல்லது என அதன் போக்கில் இருக்கின்றது ரஷ்யாகாரணம் அமெரிக்க ஆதரவுடன் குர்திஸ்தான் அமையுமானால் அதே எண்ணெய்குழாயும் அமையும் ரஷ்யாவுக்கு சிக்கல், இதனால் ரஷ்யா கனத்த அமைதிஆனால் ரஷ்யம் சிரிய, ஈரானிய‌ ஆதரவு ஊடகங்கள் இப்படி சொல்ல ஆரம்பித்துவிட்டன அது உண்மையும் கூட‌”ஆம் அமெரிக்க ராணுவத்தை சிரியாவுக்குள் யார் அழைத்தார்கள்? அவர்களை முதலில் வெளியேற சொல்லுங்கள் அதன் பின் துருக்கி வெளியேறும்..”இது ஒருவகையில் ஈரான் ரஷ்யா கூட்டணியில் வந்த செய்திஎது எப்படியாயினும் அமெரிக்காவுக்கு அப்பிராந்தியத்தில் இரண்டாம் தோல்விமுதல் தோல்வி இந்த தர்கிஸ்தான், குர்திஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து எரிவாயு பெட்ரோல் போன்றவற்றை ஆப்கன் வழியாக குழாய் பதித்து பாகிஸ்தான் வழியாக கொண்டுவந்து கப்பல் கப்பலாக ஏற்றும் திட்டம் இருந்தது, அது சொதப்பியது உபயம் தாலிபான்கள்இப்பொழுது கெஞ்சி பார்த்தும் தாலிபான் அசையவில்லை, அமெரிக்காவுக்கு அது தோல்விசிரியா வழியாக குழாய் பதிப்பதும் முடியாத நிலையில் அது கப்பல் ஏறுகின்றதுஇந்த விவகாரத்தில் ரஷ்யாவுக்கு மாபெரும் வெற்றி மற்றும் அனுகூலம் சிரியாவில் குழாய் பதிப்பதை, சிரியா உடைவதை அவர்கள்தடுத்தார்கள். போக அமெரிக்காவின் அதிநவீன விமானம் மற்றும் ஆயுதங்களை எல்லாம் மிக அழகாக நேரில் சந்தித்து பயிற்சி எடுத்தார்கள்அமெரிக்காவும் அதையே செய்துவிட்டு ஓடிவிட்டதுஇன்னும் துருக்கி தாக்குதல் ஓயவில்லை, சிரிய அரசு குர்துகளை அவர்களே ஒழிக்கட்டும் என அமைதிபடை புலிகள் மோதலை ரசித்த இலங்கை அரசு போல் பார்த்து கொண்டிருக்கின்றதுதுருக்கி குர்துகளை அடக்காமல் ஓயபோவதில்லை, வாழ்வா சாவா என்ற நிலைக்கு வந்துவிட்ட , அமெரிக்க ஆயுதம் குவிந்துவிட்ட குர்துகளும் திருப்பி அடிக்கின்றார்கள்இது புதிய போர்களத்தை திறக்குமா இல்லை துருக்கி திரும்புமா என்பது வேறு, ஆனால் கிட்டதட்ட 3 லட்சம் மக்கள் இவர்களுக்கு இடையில் சிக்கியுள்ளனர், அந்த மனுகுல நெருக்கடிதான் இப்பொழுது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றதுதுருக்கி தன் நிலைக்கு திரும்பட்டும், குர்துகளும் அமெரிக்காவினை நம்பி கெடாமல் உருப்பட பார்க்கட்டும்சிரியா மக்கள் வாழ்வில் இனியும் காயம்பட ஒன்றுமில்லை அழ கண்ணீர் இல்லை எனும் நிலையில் இனியாவது அமைதி திரும்பட்டும்இந்தியா துருக்கியினை கண்டித்திருப்பது வரவேற்கதக்க விஷயம், துருக்கியின் அடாவடியினை உலகத்தோடு சேர்ந்து நாமும் கண்டிப்போம்துருக்கி இஸ்லாமிய நாடு, சிரியா மக்களும் இஸ்லாமியர்கள். ஆயினும் இஸ்லாமிய சகோதரத்துவம் பேசும் ஒரு நாடும் வாய்திறக்க காணோம்அரேபியாவினை தவிர உலகில் வேறு எல்லா இடத்திலும் பேசுவார்கள் போல…