சிரிய விவகாரம் தொடர்பாக ஐ.நா அவசர கூட்டம்
சிரிய விவகாரம் தொடர்பாக ஐ.நா அவசர கூட்டத்தை கூட்டியுள்ளது ரஷ்யா, இதில் சிரியா ரசாயாண ஆயுதங்களை கைவிடாதவரை தாக்குவொம் என்கின்றது அமெரிக்க தரப்பு
தாக்கினால் உங்கள் ஏவுகனை மட்டுமல்ல அது கிளம்பும் கப்பலும் இருக்காது என்கின்றது ரஷ்யா
இதில் திடீர் திருப்பமாக பிரிட்டன் எதிர்கட்சி எதிர்ப்பு கிளப்பிவிட்டது
முன்பு இப்படித்தான் அணுகுண்டு இருப்பதாக சதாமினை கொல்ல டோனிபிளேர் உடன்சென்றார், ஆனால் அரைபிளேடு கூட இல்லை. அசாத் விஷயத்திலும் பிரிட்டன் அந்த தவறை செய்ய கூடாது என அது எதிர்க்கின்றது
அதில் உண்மை இல்லாமல் இல்லை என்பதால் பிரிட்டனில் பிரிட்டனின் சிரிய நடவடிக்கைக்கு எதிர்ப்பு வலுக்கின்றது
ஒருபுறம் அமெரிக்கா போரில் தீவிரமாக இருந்தாலும், வெடிகுண்டு அமைதிதராது. வெடிகுண்டு உயிர்களை விட்டுவைக்காது என்ற கோஷங்கள் எழுகின்றன
அமெரிக்க நடவடிக்கைகளுக்கு உலகளாவிய எதிர்ப்புகுரல் ஆங்காங்கு கிளம்புகின்றன