சிறப்பான தரமான சம்பவங்கள் இனிதான் நடக்கலாம்

தான் ஆடாவிட்டாலும் உலகெல்லாம் இருக்கும் ஈழதமிழருக்கு சதை ஆடுகின்றது

கொழும்பில் தாக்குதல் என்பது தங்கள் சொந்த நாட்டு தாக்குதல் என்பதால் கூடுதலாக துடிக்கின்றார்கள், அலறுகின்றார்கள்

அப்படித்தான் இருக்க வேண்டும் அதுதான் சரி

ஆனால் இதை எல்லாம் காணும் தும்பிகளுக்கும் அவர்களின் தலைவன் குளவிக்கும் கண்கள் சிவந்து வயிறு எரிகின்றது

லட்சகணக்கான தமிழரை கொல்ல உத்தரவு பிறப்பித்த கொழும்பு எரியும் பொழுது அழுபவன் எப்படி தமிழனாக இருக்க முடியும்? என தும்பிகளில் சிலது கத்த ஆரம்பித்துவிட்டது

அவர்கள் அப்படித்தான் என்பது நமக்கு தெரியும், ஈழதமிழனுக்கு இப்பொழுதுதான் தெரிகின்றது

என்ன இருந்தாலும் அது எங்கள் நாடு என ஈழதமிழர் சொல்ல, அடேய் அது சிங்கள ஊர் அது நாசமாகட்டும் என தும்பிகள் சொல்ல , கடும் காமெடி நடக்கின்றது

பாவம் தும்பிகளுக்கு கொழும்பில் நிறைய தமிழர் இருப்பதும் தமிழக தமிழர் ஏராளம்பேர் தொழில் நடத்துவதும் தெரியாது பாவம்.

இதுவரை தமிழன் தமிழ் தேசியம் அதன் தலைவர் சைமன் என சொல்லிகொண்டிருந்த கூட்டம் இப்பொழுது ஒன்றை ஒன்று முறைத்து நிற்கின்றது

அநேகமாக ஈழதமிழர் போலி விசாவில் வந்து தும்பிகளை போட்டு சாத்தலாம் எனும் அளவுக்கு நிலமை செல்கின்றது

அங்கிள் சைமன் தலைமேல் கை வைத்து அமர்ந்துவிட்டார்

சிறப்பான தரமான சம்பவங்கள் இனிதான் நடக்கலாம்