சிறுவர் ஆபாசபடத்தை பதிவேற்றம் செய்த திருச்சிக்காரன்

சிறுவர் ஆபாசபடத்தை பதிவேற்றம் செய்த திருச்சிக்காரனை பிடித்து உள்ளே போட்டுவிட்டது காவல்துறை, அவனோடு தொடர்பில் இருந்த 150 பேர் மகா கலக்கத்தில் இருக்கின்றார்கள்

இந்த விவகாரத்தை அரசு மிக கடுமையாக கருதுகின்றது, சமூக ஊடகங்களில் யாரெல்லாம் இதை பரப்புகின்றார்களோ அவர்களை எல்லாம் பிடித்து 5 வருடம் உள்ளே தள்ள சட்டம் வழிவகை செய்கின்றது

இது குறித்து காவல்துறை ஆணையாளர் வாத்ஸாயணரின் பக்த கோடிகளுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியினை சொல்லியிருக்கின்றார்

“அதாவது அம்மாதிரி படங்களை பார்ப்பதை தடுக்கமுடியாது, பார்ப்பவன் பார்த்துவிட்டு போகட்டும், ஆனால் சிறுவர் ஆபாசபடம் என்றாலோ அதை பரப்பினாலோ காவல்துறை சும்மா விடாது”

ஆக சன்னிலியோன் வாலிபர் இயக்கம், மியா கலிபா மக்கள் இயக்கம் போன்றவற்றுக்கெல்லாம் இப்போதைக்கு ஆபத்து இல்லை