சிறு குறு செய்திகள்…
ஓஎன்ஜிசி வெளியேறாவிட்டால் எந்திரங்கள் அடித்து உடைக்கப்படும்: வைகோ எச்சரிக்கை
என்னதான் சொல்லுங்கள், சீரியசாக காமெடி செய்யும் வித்தை வை.கோவினை தவிர யாருக்கு வரும்?
அப்பொழுதும் தமிழக அரசை பற்றி, அதிமுக பற்றி மூச் விடுகின்றாரா?
இதுதான் கண்டெய்னர் மீதான சத்தியம் என்பது.
சிக்கிம் மாநிலம், டோக்லாம் எல்லைப் பகுதியில் இருந்து ஓர் அங்குலம்கூட பின்வாங்க மாட்டோம் : சீனா
எவண்டா அவன்??? மோடி முறைத்தவுடன் சீனா 100 மீட்டருக்கு அப்பால் ஓடிவிட்டது என கதைகட்டியவன்?
எங்கே போய் தொலைந்தாய்? இப்பொழுது வந்து பேசு..
சக்தியை கடுமையாக கலாய்த்த கமல் : செய்தி
கமலஹாசனால் அவ்வளவுதான் செய்யமுடியும்?, காயத்திரி பக்கம் செல்லவா முடியும்?
ஆனால் காயத்திரியினை காக்க கமல் படும்பாட்டினை கண்டு அவரை உலகமே கலாய்ப்பது கமலஹாசனுக்கு தெரியவில்லை போல..
பா.ஜ., வில் இணைகிறார் ‘மாஜி’ நயினார் நாகேந்திரன்
இந்த செய்தி உண்மையா? என தெரியவில்லை, செய்தி உண்மையாயின் நாகர்கோவிலை தொடர்ந்து, நெல்லையிலும் பாஜக வலுவாக காலூன்றிற்று என்றே அர்த்தம்.