சிறு குறு செய்திகள் ….

Image may contain: 1 person, sittingரஜினி-கமல் செய்த சேவை என்ன? அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி

அன்னார் நாட்டிற்காக பல வருடம் சிறைசென்றவரும், தன் சேவை தொண்டால் ஐ.நா விருது பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது

மிஸ்டர் ராஜூ, ராமசந்திரனும் ஜெயலலிதாவும் கேமரா முன் என்ன தொண்டு செய்தார்களோ, அதற்கு சற்றும் குறையாதது ரஜினி, கமல் செய்த தொண்டுகள்

ராமசந்திரன் ஜெயா, மஞ்சுளா போன்றோரோடு சேர்ந்து எப்படி அளப்பரிய தொண்டு செய்தாரோ அதனையே ஶ்ரீதேவி, ஶ்ரீபிரியாவுடன் சேர்ந்து இவர்களும் மாபெரும் சேவை செய்தனர் போதுமா?

Image may contain: 2 people, outdoor
 

மணிரத்னம் படத்தில் என்னை நடிக்க விடாமல் தடுக்கிறார்கள் – நடிகர் சிம்பு குற்றச்சாட்டு

நிச்சயம் அது மணிரத்னம் நலம் விரும்பிகள் செய்யும் வேலையாகத்தான் இருக்கும், மணிரத்னம் சினிமா விட்டு ஓடபோவது யாருக்கு பிடிக்கும்?

மணிரத்னம் அண்ணனின் முடிவு யாரை பயமுறுத்தாது?


ஐஐடி வளாகத்தில் ஏன் சமஸ்கிருத பாடல்?

ஒரு விஞ்ஞான பீடம் சங்கரமடமாக மாறிகொண்டிருக்கின்றது


ஜெயலலிதா உருவச்சிலையில் குறைபாடு இருக்கிறது : தம்பித்துரை

திருத்திகொள்ளுங்கள் தம்பிதுரை, அது சிலை அவ்வளவுதான். ஜெயலலிதா சிலை என திரும்ப திரும்ப சொன்னால் தமிழகம் பொறுக்காது

ஜெயாவின் காலிலே விழுந்து கிடந்ததால் அந்த கும்பலுக்கு ஜெயா முகம் எப்படி இருக்கும் என தெரியாமலே இருந்திருக்கின்றது என்பதுதான் மிகப்பெரிய பரிதாபம்