சிறு குறு துணுக்ஸ்…..

சேக்கிழார் இங்கு நடந்த சண்டையில் மனம் வெறுத்து கப்பல் ஏறி லண்டன் சென்று சேக்ஸ்பியர் ஆனார் என்பதை வரலாறு மறைக்கின்றது

இந்த இலுமினாட்டி சதிகளை உடைத்து சேக்கிழார் பெருமையினை எனும் தமிழனின் பெருமையினை உலகறிய செய்யும் தமிழக எழுச்சி வாழ்க, வெல்க


கந்துவட்டி தொடர்பாக எனது கருத்துக்களை ஜி.ராமகிருஷ்ணன் போன்றவர்களே திரித்துக்கூறி இட்டுக்கட்டுவது வேதனை அளிக்கிறது: சீமான்

பின்னே, உங்களை விட குறைவான வாக்குகளை பெற்றால் கட்சியினை கலைத்துவிட்டு உங்கள் கட்சியில் இணைவேன் என பகிரங்கமாக சவால்விட்டுவிட்டு, பின் இணையாமல் ஏமாற்றினால் அவருக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும்???


இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடைவிதித்ததை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு : செய்தி

குஜராத்தில் மட்டும் சறுக்கினால் பாபர் மசூதி திரும்ப கட்டபடுவதும் மகா நிச்சயம்

அவர்கள் அப்படித்தான், இதனால்தான் சொன்னோம் பாஜக என்பது யாரும் பயப்படவேண்டிய கட்சியே அல்ல‌ சசிகலா குடும்பத்தை தவிர‌ ,


 

தமிழ் சினிமா உலகத்தில் கந்து வட்டி கிடையாது : சரத்குமார்

மூளை சாவு என்பது இதுதான்,

ஆனால் மூளை சாவு அடைந்த நபர் பேசும் “மெடிக்கல் மிராக்கிள்” என்பதும் இதுதான்.


குமரி அருகே புயல் ‘ஓகி’ புயல் உருவாகின்றது : செய்தி

இது என்ன குமரியிலிருந்து புது புயல்?

ஏற்கனவே தமிழிசை என்றொரு புயல் உருவாகி தமிழகத்தை போட்டு அடிக்கும்பொழுது இன்னொரு புயலா?


நியூட்ரினோ திட்டத்தால் முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்து: வைகோ கண்டனம்

ஏன்? அப்படியே இலங்கையில் இருக்கும் மாவிலாறு அணைகட்டுக்கும் ஆபத்து என சொன்னால் என்ன?

கொஞ்ச நாளாக வசூல் ரஜா MBBS படத்து “ஆனந்த் சார்” லெவலில் இருந்த வைகோவிற்கு திடீரென நினைவு திரும்பிவிட்டது போலும்

எது இங்கு அமைந்தாலும் அது ஆபத்து என அலறிகொண்டே இருப்பது ஒருவகை வியாதி.