சிவசேனாவுக்கும் பாஜகவுக்குமான மோதல் முற்றுகின்றது

சிவசேனாவுக்கும் பாஜகவுக்குமான மோதல் முற்றுகின்றது, இனி சரத்பவார் மற்றும் காங்கிரஸுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்கும் போல் தெரிகின்றது

ஆனால் அதுவும் நிலைக்குமா என்றால் சிக்கலே, மத்தியில் பாஜகவினை வைத்துகொண்டு இங்கு ஆட்சி நடத்துவது சிரமம் அதுவும் ராமர்கோவில் உட்பட பல தீர்ப்புகள் வரும் நிலையில் சிவசேனா கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதும் சிரமம்

இந்த கணக்கில் தவிக்கின்றது சிவசேனா

பாஜகவோ நாம் ஆளும் இரும்பு கட்சி, எக்கு கட்சி நம்மிடம் இவர்கள் பணிந்து போனால் என்ன? என்ற ஒருவித இறுக்கம் தெரிகின்றது, சிவசேனாவுக்கோ பாஜக நம்மை விழுங்கிவிடுமொ என்ற எச்சரிக்கை வந்திருக்கின்றது

சிவசேனா தேசிய கட்சி அல்ல, மராட்டியம் மராட்டியருக்கே எனும் பிரிவினைவாத கட்சி, மும்பையில் அதுகாட்டி அட்டகாச இனவெறி அதிகம்

ஆனால் இந்துத்வா ஆதரவு எனும் அடிப்படையில் இரு கட்சிகளும் பெரும்பாலும் இணைந்தே பயணிக்கும்

நாம் ஒரு இந்துத்வா கட்சி இருக்கும் பொழுது மாநிலத்தில் இவர்கள் ஏன் என்பது போல பாஜக சாயல் செல்கின்றது, அவர்கள் வளர்ந்துவிட்டார்கள் இனி நம்மை வளரவிடமாட்டார்கள் என அஞ்சுகின்றது சிவசேனா

இந்த மோதலில் நமக்கு ஏதும் ஆதாயமா என சரத்பவாரும் காங்கிரசும் கடும் ஆலோசனையில் இருக்கின்றன‌

ஆக யாரையாவது பிடித்து ஆட்சிக்கு வரவேண்டும் என்பது சிவசேனா கணக்கு, நம்மை விட்டால் வழியில்லை அதையும் மீறி அவர்கள் ஆண்டுவிடுவதை பார்க்கலாம் என்பது பாஜக கணக்கு

கிட்டதட்ட இது கூட்டாளி சண்டை. சமாதனமும் ஆகலாம் இல்லை வெடித்தால் ஈகோ சிக்கலில் பெரிதாகவும் வெடிக்கலாம்

கர்நாடகத்தை அடுத்து இருப்பதால் என்னமோ கன்னட அரசியலின் நிலையற்ற தன்மை மகராஷ்டிரத்தையும் தொற்றிகொண்டது..