சீனநாட்டு ஜிமிக்கி கப்பல்…..

ஒரு வழியாக இலங்கை ஹம்பாந்தோட்டா துறைமுகத்தில் இருந்து கிளம்பியிருக்கின்றது சீனாவின் உளவு கப்பலான “யுவான் வாங்க் 5”, ஆகஸ்டு 22 மாலை 4 மணிக்கு அது வெளியேறியதாக தரவுகள் தெரிவிக்கின்றான்

உளவு இல்லாமல் காவல் இல்லை, உளவுபடையும் அதுகொடுக்கும் தகவலும்தான் ஒரு ராஜ்ஜியத்தை காக்கும் என்பது சாணக்கியனும் வள்ளுவனும் சொன்ன விஷயம், அது அன்றி அரசபடைகள் இல்லை

அவ்வகையில் மனிதவழி உளவு பார்க்கும் கலையினை (human Intelligence) தொழில்நுட்ப காலம் தொழில்நுட்ப உளவு (Signal Intelligence) என உருவாக்கிற்று

இன்று உலகில் மனித உளவு தகவல்கள், தொழில்நுட்ப உளவு தகவல்கள் என இரு விஷயம் உண்டு, இரண்டாம் வகை தகவலை ஆளில்லா தீவுகள், மலைகாடுகள் என பல நாடுகள் செய்யும், செயற்கைகோள் ஊடாக செய்வார்கள், நீர்மூழ்கி வழியாக செய்வார்கள்

சீன கப்பல் வழியாகவும் செய்வார்கள்

அமெரிக்கா முதலான நாடுகள் இவ்விவகாரத்தில் கில்லாடிகள், ஒரு போனோ லேப்டாப்போ தூக்கி கொண்டு எந்த நாட்டிலும் நடந்துகொண்டும் அவர்களால் தகவலை திரட்டமுடியும், இஸ்ரேல் இன்னும் பலபடி மேல்

அப்படிபட்ட உலகில் இந்தியாவினை பல நாடுகள் உளவு பார்ப்பதும் இந்தியா அவர்களை பார்ப்பதும் உண்டு

பொதுவாக இம்மாதிரி உளவு தகவல்களில் வேண்டுமென்றே தவறாக பரப்படும் தகவல்களை எதிரிகள் நம்புவதும் உண்டு, ஒரு தந்திரம் அது

இந்த தந்திரத்தில்தான் இந்தியா 1971ம் ஆண்டு யுத்தத்தில் பாகிஸ்தானை மண்டியிட வைத்தது

இப்பொழுதும் சீன நீர்மூழ்கிகள் இந்திய கடலடியில் சுற்றுவதும் இந்திய உளவு விமானங்களும் நீர் மூழ்கிகளும் அதன் காதை பிடித்து இழுத்து விரட்டியடிப்பதும் அடிக்கடி நடக்கும், சீன செயற்கைகோள்கள் இந்தியாவினை கண்காணிப்பதும் ரகசியம் அல்ல‌

அப்படிபட்ட நிலையில் இலங்கைக்கு உளவு கப்பல் அனுப்பித்தான் உளவு பார்க்கும் அவசியமும் சீனாவுக்கு இல்லை

ஆனால் வந்த கப்பல் இரு நோக்கங்களை கொண்டு வந்தது

முதலாவது இலங்கையில் தங்கள் பிடி எப்பொழுதும் உண்டு என்பதை காட்டுவது, இரண்டாவது தைவானுடன் யுத்தம் தொடங்கினாலும் மேற்கு கடல் வரை தங்களுக்கு தளம் உண்டு என்பதை உறுதிபடுத்துவது

இப்படி அரசியல் காரணங்களுக்காகத்தான் அதன் பயணம் அமைந்திருக்கலாம் என்பது தியரி

இலங்கையில் ராஜபக்சேக்கள் எனும் சீன நண்பர்கள் விரட்டபட்டதும் இலங்கையில் தன் பிடி உண்டு என காட்ட விரும்பிய சீனா தன் கப்பலை இலங்கைக்கு அனுப்பியது

இந்திய எதிர்ப்பால் இலங்கை கொஞ்சம் பின் வாங்கினாலும் சீனாவின் கப்பலை தாமதித்து ஏற்றுகொண்டார்கள் அல்லது சீனா வலிய இறக்கியது

இதனில் இருந்து சீனாவின் அதிகாரம் இலங்கையில் உண்டு என்பதை காட்டிவிட்டு சென்றுவிட்டது கப்பல், இந்தியா நிலமையினை அவதானிக்கின்றது

இலங்கையின் நிலை மிக மோசமாகத்தான் இருக்கின்றது, சொந்தமாக எந்த முடிவினையும் அவர்களால் எடுக்க முடியாது இனி நாகர்கோவில் வடசேரி சந்தைக்கு யார் யாரோ வருவது போல தன் நிலை ஆகிவிட்டது என்பதை உணர்ந்த் தலையில் கைவைத்து அமர்ந்திருக்கின்றது அத்தேசம்

ஆட்டத்தை ஆரம்பித்திருப்பது சீனாவாக இருக்கலாம் இனி ஆளாளுக்கு யாரெல்லாம் வந்து அடிப்பார்களோ, யார் முடித்துவைப்பார்களோ என அஞ்சியபடித்தான் அத்தேசம் திக்கித்து நிற்கின்றது