சீனாவுக்கு புதிய தலைவலி ஆரம்பமாகியுள்ளது

சீனாவுக்கு தலைவலி கொடுக்க அமெரிக்கா அந்நாட்டை சுற்றி வைத்திருக்கும் விஷயம் ஜப்பான் தென் கொரியா மற்றும் தைவான்

இங்கெல்லாம் அமெரிக்க முகாம்கள் இன்னும் பல அமெரிக்க கோட்டைகள் உண்டு, தைவன் சீனாவின் ஒரு பகுதி என சீனா சொல்லும், தைவான் அதை ஏற்க மறுக்கும் , சீனா எச்சரிக்கும் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கும்

இந்த ஆட்டம் இன்னும் ஓயவில்லை, கீரியும் பாம்பும் வைத்து வித்தைகாட்டுபவன் காட்சி போல நடந்துகொண்டே இருக்கின்றது

இந்நிலையில் ஹாங்காங்கை சீனாவின் தலைவலியாக மாற்ற மேற்குலகம் முடிவு செய்துவிட்டது, நேற்று ஹாங்காங் தொடர்பான சட்டத்தை டிரம்ப் நிறைவேற்றியிருக்கின்றார்

அதில் ஹாங்காங்கில் மனித உரிமை மீறபடுவதாகவும் இதனால் அதன் மேல் தடை விதிக்கபட ஆலோசிப்பதாகவும் சொல்லிவிட்டார்

சுயாட்சி எனினும் சீனாவின் முக்கிய பகுதியில் அமெரிக்கா மூக்கை நுழைப்பதை சீனா விரும்பவில்லை அது எச்சரிக்கின்றது

ஆனால் ஹாங்காங்கை முன்பு கையில் வைத்து லாபம் பார்த்த மேற்குலகம் மறுபடியும் அதை கையில் எடுக்க திட்டமிடுகின்றன‌

சீனாவுக்கு புதிய தலைவலி ஆரம்பமாகியுள்ளது, ஜின்பெங் கடும் கோபத்தில் சீறிகொண்டிருக்கின்றார், விரைவில் சீன ராணுவம் ஹாங்காங்கில் நுழையும் போல் தெரிகின்றது