சீன அதிபரை அதிமுக அரசு ஏன் விழுந்து விழுது வரவேற்கின்றது?
சீன அதிபரை அதிமுக அரசு ஏன் விழுந்து விழுது வரவேற்கின்றது என்பது தெரியவில்லை ஆனால் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது
தூத்துகுடி மாவட்டம் உடன்குடியில் ஒரு அணல் மின் நிலையம் அமைக்க அதிமுக ஆட்சி முடிவு செய்தது ஒப்பந்தத்தை பெற சீன கம்பெனி வந்தது
அவர்கள் உலகெல்லாம் தொழில் செய்பவர்கள் இங்கும் வந்தனர், தமிழ்நாட்டில் இரு பட்ஜெட்டை பார்த்து குழம்பி இது என்ன இருபட்ஜெட் என கேட்டனர். ஒன்று அணல் மின் நிலையத்துக்கு நாங்கள் கொடுக்கும் தொகை இன்னொன்று அதே அணல் மின் நிலையத்துக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய தொகை என அதிமுக அரசு சொன்னவுடன் ஓடிய சீன அதிகாரிகளை அதன் பின் காணவே இல்லை
அப்படியே கள்ளதோணியில் ஏறி ஓடிவிட்டார்களோ எனும் அளவு அலறி அடித்து ஓடினார்கள், சம்பவம் 2015ல் நடந்தது
மறுபடியும் சீன கம்பெனியினை பார்த்து கண்ணடிக்க போகின்றார்களோ என்னமோ..
சீன அதிபரை ஆளாளுக்கு வரவேற்கின்றார்கள், அதில் முக்கியமானவர் முக ஸ்டாலின். அவரை வரவேற்று அறிக்கை வாசித்துவிட்டு நான்குநேரி திண்ணையில் சென்று அமர்ந்துவிட்டார்
ஒருவேளை வருங்காலத்தில் திமுக ஆட்சியிலும் அணல் மின் நிலையம் கட்டும் கனவு இருக்கலாம் போல…