சீன கப்பல்
சீன கப்பல் இலங்கைக்கு வருவது பற்றி இலங்கை அரசும் சீன அரசும் விளக்கம் அளித்துள்ள நிலையில் இந்தியா தன் கவலையினை வெளிப்டுதும் சம்பிரதாயத்தை செய்திருக்கின்றது
உண்மையில் அக்கப்பல் ஒரு ஆராய்ச்சி கப்பல் என அடையாளபடுத்தட்ட உளவு கப்பல் , பெரிய பெரிய வட்ட ஆண்டனாக்களுடன் வலம் வரும் அக்கப்பல் சீன செயற்கைகோள் நகர்வு இதர தகவல் தொடர்புகளை சரிபார்ப்பதற்காக வரும் கப்பல் என சீன தரப்பில் சொல்லபட்டாலும் அதனால் சுமார் 700 கிமீ தூரம் வரை உளவுபார்க்கமுடியும்
எல்லா வகை மின்னணு சிக்னல்களையும் அதனால் கிரஹிக்க முடியும்
இந்தியா வட எல்லை ஆபத்தானது என்பதால் தன் பல பலமான ரகசிய நிலையங்களை தென்னிந்தியாவில்தான் அமைத்துள்ளது, அங்கு ராணுவ ரகசிய நிலையங்கள் உண்டு அணுவுலைகள் உண்டு ராக்க்கெட் தயாரிப்பு மையம் உண்டு இன்னும் நிறைய உண்டு
இதனால் அங்கு மின்னணு சிக்னல்க்ளை சீன கப்பல் எளிதாக கவர வாய்ப்பும் உண்டு
இந்தியா இது சம்பந்தமாக இலங்கையிடம் கோரியபொழுது அவர்கள் சொன்ன விஷயம் இக்கப்பல் ஆகஸ்ட் 11ம் தேதி இலங்கைக்கு வந்து ஆகஸ்ட் 17 வரை தங்கி இருப்பது எனபது ராஜபக்சேக்கள் கொடுத்த அனுமதி அதை தடுக்கமுடியாது என்கின்றது
இலங்கை ஹம்பாந்தோட்டா சீன உதவி துறைமுகம் என்றாலும் அங்கு ராணுவ கப்பல்கள் வரகூடாது என்பது ஒப்பந்தம், சீனாவோ இது ராணுவ கப்பல் அல்ல விண்வெளி ஆய்வு கப்பல் என கதையினை மாற்றுகின்றது
இந்தியா தன் கண்டனத்தை தெரிவித்த நிலையில் சீன கப்பல் இலங்கை நோக்கி வருகின்றது
நிச்சயம் இந்தியா ஒன்றும் பாதுகாப்பு இல்லாமல் இராது, அதன் ராணுவ நிலையங்கள் எதிரிகள் தங்கள் மின்னணு தகவல்களை ஊடுருவமுடியாதபடி ஏற்பாடுகளை செய்திருக்கும் என்பதால் பெரும் ஆபத்து இல்லை எனினும் இலங்கையின் நரிதந்திரத்தை கடுமையாக கருதுகின்றது இந்தியா
இந்த குழப்பத்திலும் இலங்கை முழுக்க இந்தியா ஆதிக்கம் வந்துவிட கூடாது என்பதற்காக அந்நாடு ஆடும் ஒரு தந்திர விளையாட்டாகவும் இது இருக்கலாம்
இம்மாதிரி கப்பல்கள் சீனாவிடம் உண்டு, இது என்னென்ன செய்யும் என்றால் உரிய காவல் இல்லா இடங்களில் சிக்னலை குழப்பிவிடும், மின்னனு சாதனம் வேலை செய்யாது பெரும் குழப்பம் ஏற்படும்
உதாரணம் பறக்கும் விமானத்தினை இக்கப்பலின் சாதனங்கள் குழப்பினால் திசைகாட்டும் கருவி, போன், வேகம்காட்டும் கருவி, தானியங்கி அமைப்பு என எதுவும் வேலை செய்யாது கண்ணை கட்டிய நிலமைதான்
அப்படி ஆபத்தும் இந்த கப்பலில் உண்டு என்றாலும், இந்த கப்பலுக்கே அந்த சூனியத்தை வைக்கும் கில்லாடி நுட்பங்கள் உலகில் உண்டு
சீனாவுக்கு இந்த கப்பல் வருவதை இலங்கைக்கு தெற்கே இருந்து டீகோ கார்சியா தளத்தில் இருந்து அமெரிக்காவும் பார்த்துகொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை மீதம் அவர்கள் பார்த்து கொள்வார்கள்
கப்பல் சிக்னலை கொண்டுவருமோ இல்லை குழப்பத்தை கொண்டுவருமோ என்பதெல்லாம் தாண்டி ஒரு விஷயம் உண்டு
அக்கப்பல் சிங்கப்பூர் வழியாகத்தான் வரும், அந்நேரம் கோத்தபாய ராஜபக்சே ரகசியமாக ஏறி இலங்கைக்கு யாரும் அறியாமல் வந்து இறங்கினாலும் இறங்குவார் சொல்லமுடியாது.
