சீன புத்தாண்டு 2018 கொண்டாட்டங்கள்

https://youtu.be/Qh1k-mRWIDs 

சீன புதுவருடமாம், சொர்க்கத்தில் இருப்பவர்களுக்கு பணம் அனுப்ப வேண்டுமாம். சில பிரத்யோக சீட்டுகளை வாங்கி எரிக்கின்றார்கள், அப்படி எரித்தால் அந்த பணம் வானலோகம் சென்று உரியவர்களுக்கு அடையுமாம்

கீழ்வீட்டிலிருந்து சீனர் கிளப்பும் புகை மட்டும் மேலே வருகின்றது, மனிதர் அவர்கள் சமூக கணக்கில் பல கோடிகளை எரித்து ஆனந்த கண்ணீர் சிந்துகின்றார்

மூட நம்பிக்கை என்பது உலகின் எல்லா இனங்களிலும் இருக்கின்றது.

இதற்கு பதில் அந்த சீட்டு வாங்கும் பணத்தை அப்படியே மேலே நேரடியாக சொர்க்கம் நோக்கி எறிய சொல்ல வேண்டும், சட்டென பிடித்துகொண்டால் விடுமுறை செலவுக்கு சரியாக இருக்கும்

அதனால் இன்று பகுத்தறிவு பேசிவிடும் சிந்தனையில் சங்கம் மிக தீவிரமாய் யோசித்துகொண்டிருக்கின்றது