சீமான் ராஜிவ் கொலைக்கு உரிமை கோருவது ஒன்றும் புதிதல்ல
சீமான் ராஜிவ் கொலைக்கு உரிமை கோருவது ஒன்றும் புதிதல்ல, பாரீசில் ஒருமுறை பேசினார் அங்குள்ள இந்திய தூதரகம் பிரான்ஸ் அரசு மூலம் எச்சரித்தபின் பாரீஸ் பக்கம் அன்னார் செல்லமுடியவில்லை
அடுத்த சம்பவம் கனடாவில் நடந்தது.
அது சீமான் ஈழம் சென்றது போல வியப்பும், திகைப்பும் நிறைந்த பயணமல்ல, அன்னார் கதறிய கதறலை பற்றியது
அதாகபட்டது தேவர்,இம்மானுவேல்,மார்க்ஸ்,சே, பெரியார் என பல டிசர்ட் போட்டுவிட்டு சீமான் பிரபாகரன் டீசர்ட் தேடிய சமயம் அது, 2006களில், அப்படி மாவீரர் தினத்திற்காக கனடாவிற்கு அழைக்கபட்டார்.
புது டீசர்ட் அல்லவா?, கடுமையாக குதித்தார், கும்பாட்டம், குத்தாட்டம், விரலில் கதகளி என என்னவெல்லாமோ ஆடி, உணர்ச்சி வேகத்தில்
“ஆமாம்டா…அமைதிபடை அனுப்பியதற்காக ராஜிவை கொன்னோம்டா, இன்னும் வாலாட்டினா வம்சமே இருக்காதுடா…” என்கின்ற ரீதியில் பேசிவிட்டார், கரகோஷம் அதிர்ந்தது, அண்ணன் முஷ்டி தூக்கி மேடையில் நின்றார்.
அடுத்த 10ம் நிமிடம் இந்திய தூதரகத்தில் அமர்ந்திருதார், எதிரில் ஒரு சீக்கிய அதிகாரி இவரிடம் “ராஜிவ் கொலையினை நியாயபடுத்தீனீர்களா” என கேட்டார், இவரோ பக்கத்தில் ஈழதமிழர் இருந்த தைரியத்தில் “இந்திரா கொலையினை நீர் நியாபடுத்தாமல் இருப்பீரா நீர? சீக்கியனா நீ” என்ற ரீதியில் எகிற அதன் பின் காட்சிகள் கட்.
சம்பந்தமே இல்லாமல் சீமான் பதில் சொல்ல, அவன் என்ன கேட்டு கைதட்ட அந்த சீக்கியன் நாம்தமிழர் மெம்பரா? சீட்டை விட்டு எழுந்திருக்கின்றான்
அதன்பின் இந்திய தூதரகத்தில் ஒரு பெரும் சத்தம் கேட்டதாகவும், அதனை தொடர்ந்து அழுகை சத்தமும், கதறலும் கேட்டதாக தகவல் உண்டு.
சிங்கள உளவுதுறையும் சேர்ந்து, சொல் ஈழம் வந்த கதையினை என பலமணிநேரம் போட்டு காய்ச்சியது. அதோடு நாட்டை விட்டு கிளம்ப நெருக்கடி கொடுத்தது கனடா அரசு.
அரை உயிரோடு அங்கிள் வெளிவந்தாராம். ஈழத்தவர்கள் பத்திரமாக கதவுகளை அடைத்து படுத்துகொண்டனர், வந்தேறிகளா என வெள்ளையன் சீறினால் என்ன செய்வது?
அதன்பின் கண்ணீரை துடைத்தபடியே அங்கிள் எப்படி மன்றாடி தப்பினார் தெரியுமா?
“என்னை தமிழனாக பார்க்காதீர்கள், இந்தியனாய் பாருங்கள், நான் இந்தியன், இந்திய பாஸ்போர்ட் என்னுடையது என சென்னை விமானநிலைய குடிவரவு துறையினை தாண்டும் வரை புலம்பினாராம்.
இதெல்லாம் 2006 சம்பவங்கள், சென்னைக்கு அங்கிள் வந்ததும் இதுபற்றி கேட்டார்கள், அப்பொழுது அங்கிளிடம் நெய்தல் படை, தும்பி படை எல்லாம் இல்லை அதனால் இப்படி சொன்னார்
“என்னை தமிழனாக பார்த்தார்கள் அது தவறு, என்னை ஒரு இந்தியனாக அல்லவா பார்த்திருக்க வேண்டும்?”
இந்த கனடா சம்பவம் அங்கிள் வாழ்வில் மறக்கமுடியாதது, அவரை “நான் தமிழன் அல்ல, நான் இந்தியன்” என கதற வைத்த சம்பவம் அல்லவா??
இப்பொழுது மறுபடியும் அங்கிள் ராஜிவ் கொலைக்கு உரிமை கோரி சிக்கியிருக்கின்றார், ஆக ராஜிவ் கொலையில் “வெப்பன் சப்ளையர்” 28 வருடம் கழித்து சிக்கியிருக்கின்றார்