சுகோய் 30 விமானம் விபத்துள்ளாகிவிட்டது
சுகோய் 30 விமானம் விபத்துள்ளாகிவிட்டது, பைலட்டுகள் இருவரும் உயிர்தப்பிவிட்டனர் என்றாலும் இது அதிர்ச்சியளிக்கும் செய்தி
காரணம் மிக் ரக விமானங்களே அடிக்கடி விழுந்து நொறுங்கும் அவை பழைய ரகம் என்பதால் பெரிதும் அஞ்ச ஒன்றுமில்லை ஓரமாக வைத்துவிட்டால் தீர்ந்தது விஷயம்
ஆனால் சுகோய் 30 இந்தியாவின் துருப்பு சீட்டு, அவை இப்படி விழுவது சரியல்ல.
அதுவும் இது இப்படி விழும் 10வது சுகோய் 30 என்பதுதான் ஒரு மாதிரி யோசிக்க வைக்கின்றது, பயிற்சியிலே இப்படி என்றால் நாளை யுத்தம் எப்படி இருக்கும்?
இந்திய விமானபடையின் விமானங்களை கவனித்தால் ரஷ்ய தயாரிப்பினை விட பிரான்ஸ் தயாரிப்பு விமானங்கள் பாதுகாப்பாக திகழ்கின்றன
அந்த மிராஜ், ஜாகுவார் ரக விமானங்கள் ஒன்று கூட பழுதானதாக தெரியவில்லை
விற்பனைக்காக ரஷ்யா தரம்குறைந்த நுட்பத்தினை கொடுக்குமோ என்னமோ என்ற அய்யம் மேலெழுகின்றது
மிக அவசரமாக நடவடிக்கை எடுத்து இந்த ரஷ்ய நுட்ப கோளாறை எல்லாம் சரிசெய்ய வேண்டிய நேரமிது இல்லாவிட்டால் மற்ற ஐரோப்பிய நாட்டு நுட்பங்களே சிறந்தது என்ற முடிவுக்கு வந்துவிட வேண்டியதுதான்
