சுஷ்மா சுவராஜ்

இந்திய அரசியல் பெண்மணிகளில் மிக அறியபட்ட முகமாய் இருந்த சுஷ்மா சுவராஜ் நேற்று காலமாகிவிட்டார், அவர் இனி இல்லை

சுதந்திரத்தின்போது லாகூரில் இருந்து ஹரியானாவுக்கு குடிபெயர்ந்த குடும்பத்தின் வாரிசு அவர். அந்த சோகமோ என்னமோ அவர் இரத்ததில் அரசியலும் தேசபற்றும் கலந்திருந்தது

25 வயதிலே வழக்கறிஞராகிவிட்டு அரசியலுக்கு வந்து தேவிலாலின் ஹரியானா ஜனதாதள அரசிலே அமைச்சருமாயிருந்தார்

மிக இளவயதில் அமைச்சரானவர்களில் அவரும் ஒருவர், அந்நாளில் அவரை இந்தியா திரும்பிபார்த்தது.

ஜனதா பின்னாளில் சிதறி அது பாரதீய ஜனதாவாக வளர்ந்தபொழுது டெல்லியின் முதல் பெண் முதல்வராக அமர்ந்தார் சுஷ்மா

வடக்கில் பெரிய இடத்து பெண்களே ஆதிக்கம் செலுத்திய அரசியலில் சாமான்யபெண்ணான அவரை பாஜக கைதூக்கிவிட்டதையும் சொல்லியாக வேண்டும், அக்கட்சியின் இயல்பு அது

பின்பு மத்திய அமைச்சர்பதவி அவரை தேடிவந்தது, பல துறைகளில் அசத்தினார், குறிப்பாக வெளியுறவு துறையில் அவர்முத்திரை பதித்தார்

சில நேரம் பொறுப்பு பிரதமராகவும் பதவி வகித்திருந்தார்

அவர் காலத்தில்தான் தமிழ்மீணவர்கள் மேலான இலங்கை துப்பாக்கிசூடு நின்றுபோனது குறிப்பிடதக்கது.

கடந்த வருடமே அவர் உடல்நிலை மோசமானது எனினும் தொடர்ந்து பணியாற்றினார்

இம்முறை அவர் அமைச்சர் ஆகவில்லை என்பதே பலத்த சந்தேகங்களை எழுப்பியது அதற்கான விடை கிடைத்தாயிற்று

அது என்ன சாபமோ தெரியவில்லை மகாஜன், பாரிகர் , சுஷ்மா போன்ற பெருமுகங்கள் பாஜகவில் தொடர்ந்து மரணிப்பது வருந்ததக்கது.

அது இனி தொடராமல் இருக்கட்டும்

சுஷ்மா எதில் நிற்கின்றார் என்றால் எதில் தனித்தி தெரிகின்றார் என்றால், எதில் அவரின் கட்சி அபிமானமும் நாட்டுபற்றும் தெரிகின்றதால் அது நிச்சயம் வாழ்த்துகுரியது

சுஷ்மா தன் கடைசி காலங்களை உணர்ந்தபொழுது அதை நிரப்ப தகுதியான நபரை அதுவும் பெண்ணை தேடினார்

கவனியுங்கள், தன் குடும்பத்தாரையோ கணவனையோ மகனை மகளையோ ஊர்காரரையோ தேடவில்லை

யாரிடம் அதற்கான தகுதி உண்டோ அவரை தேடினார்

தேடி கண்டடைந்தார், ஆம் அந்த நிர்மலா சீத்தாராமன் எனும் பள்ளி ஆசிரியின் ஆற்றலை உணர்ந்து தேசத்துக்கு அழைத்து வந்தார் சுஷ்மா

நல்ல தலைவி செய்ய வேண்டியது இதுதான்

அதில் காந்தி, காமராஜர் வரிசையில் வந்தார் சுஷ்மா

இளவயதிலே தேசத்துக்காக உழைக்க வந்து இனம் மதம் தாண்டி இந்தியரை அரவணைத்து இந்நாட்டு மகளிரின் மிகபெரும் முகமாக சுடரிட்டு பிரகாசித்து வரலாற்றில் நிலைத்துவிட்ட அந்த மாதரசிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

பிற்போக்கானது என்றும் பெண்களை அடக்கி வைக்கும் பத்தாம் பசலியான கட்சி எனவும் சொல்லபட்ட பாஜகவில் அதை எல்லாம் இல்லை, பாஜகவில் ஆண்பெண் பேதமில்லை அதில் வாரிசு அரசியல் இல்லை என உரக்க சொல்லி நிரூபித்தும் சென்றவர் சுஷ்மா

தேசத்தின் தவிர்க்கமுடியா அந்த வீரமங்கைக்கு இரண்டாம் ஜான்சி ராணிக்கு தலை தாழ்ந்த அஞ்சலிகள்

பொதுவாழ்வில் நேர்மை, தூய்மை அரசியல் நாகரிகம், பணிவு, தேசபற்று இதெல்லாம் கலந்த பிம்பமாக அவர் விளங்கினார், மங்கையருக்கு வழிகாட்டியாய் இருந்தார்

ஒரு குற்றத்தை கூட அவர் மேல் அரசியல்வாழ்வில் யாரும் சுமத்தியிருக்க முடியாது

அவர் கண்ட கனவுபடி, அவரின் அயரா உழைப்புபடி தேசம் தலைநிமிரட்டும் அதுதான் அவருக்கான உண்மையான அஞ்சலி