சூதாட்டம் என்பது மாபெரும் தீமை

சூதாட்டம் என்பது மாபெரும் தீமை, ஒரு மனிதனுக்கு இருக்க கூடாத வழக்கங்களில் மாது, மது, சூதாட்டம் முதன்மையானது என்கின்றது சங்க இலக்கியம்

அந்த இலக்கியத்தில் பரத்தை தன் மகளிடம் தீயவர் செல்வம் ஒழிய “நம்மையும் கள்ளையும் சூதையும் நான்முகன் படைத்தாவாறே” என சொல்வதில் தெரிகின்றது சூதாட்டத்தின் வலி

அந்த சூதாட்டம் ஆசியாவின் நோயாய் இருந்திருக்கின்றது, இங்கு அதை ஒழிக்க சூதாட்டத்தின் கொடுமையினை மகா பாரதமே விளக்குகின்றது

பாரத காவியத்தின் அடிநாதமே சூதாட்டத்தால் எழும் தீமையினை குறித்ததே

இங்கு இந்துமதமும் அதன் தாத்பரிய தத்துவங்களும் மக்களின் மனங்களை ஆலயம், தமிழ்சபை, தெருகூத்து என இங்கு ஆட்சி செய்த காலங்களில் சூதாட்டம் இங்கு சமூக தீமையாக கருதபட்டிருக்கின்றது

மதுபழக்கமும் அவ்வாறே சமூக தீமையாய் இருந்திருக்கின்றது,

பாவத்தை கண்டு அஞ்சுவது போல் மது சூது இரண்டையும் கண்டு இங்குள்ள சமூகம் ஒதுக்கும்படி இந்து தர்மம் நல்வழி காட்டியிருந்திருக்கின்றது

ஆசியாவில் சீனாவில் புத்தமதமும் இன்னும் பல குழப்பங்களும் வாழ்க்கை தர்மத்தை அவர்களுக்கு போதிக்கவில்லை, புத்தமதம் ஒரு மதமாக சொல்லபட்டதே தவிர அதில் புராண கதையோ சம்பவங்களோ எடுத்துகாட்டோ எதுவுமில்லை

இங்கு சூதாடினால் தர்மனை போல் திரிவாய் என்றோ, பெண் ஆசை கொண்டால் ராவணன் போல் அழிவாய் என்றோ சொல்ல புத்தமதத்தில் எடுத்துகாட்டு இல்லை

விளைவு சீனசமூகம் சூதாட்டத்தை தொடர்ந்தது, அதை செல்லுமிடமெல்லாம் தூக்கி திரிந்தது

இன்று அவர்களின் மக்காவ் தீவு சூதாட்டத்தின் சொர்க்கபுரியாக திகழ்கின்றது, மிக மிக ஒரு சிலரே அதில் விதிவிலக்கு மற்ற சீனர்களுக்கு சூதாட்டம் என்பது டீ குடிப்பது போன்ற வாடிக்கை

சும்மாவே சூதாட்டபுரியாக இருந்த தென் சீனத்து மக்காவு தீவினை போர்த்துகீசியன் வந்து கோவா கலாச்சாரத்தை புகுத்தி அதை என்னவோ செய்து வைத்திருக்கின்றான்

அத்தீவு அப்படியே இருக்கட்டும் என்பதுதான் சீன கம்யூனிச அரசின் ஆசையும் கூட‌

மாபெரும் தீயபழக்கமான சூதாட்டம் கடும் உழைப்பாளிகளான சீனர்களின் மிகபெரும் பலவீனம், அதில் அவர்கள் இழக்கும் பனம் ஏராளமாயினும் தொடர்ந்து வரும் பாரம்பரியம் அவர்களை இயக்குகின்றது, இதனால் அவர்கள் இழப்பது ஏராளம்

இன்றே இப்படி என்றால் அக்காலத்தில் எவ்வளவு இழந்திருப்பார்கள்?

இந்து தர்மம் அதிலிருந்து இந்நாட்டு மக்களை காத்திருக்கின்றது, குடியில் இருந்தும் தள்ளி வைத்திருக்கின்றது. அந்த இந்தியா உலக வியாபாரிகள் எல்லாம் ஓடிவரும் செல்வபுரியாய் சொர்க்கபுரியாய் இருந்திருக்கின்றது

தமிழகத்தில் திராவிட கட்சிகள் இந்த இரண்டையும் திறந்தன, மதுவும் லாட்டரியும் அவர்களால் அறிமுகமாயின‌

கடவுளே இல்லை என சொல்லும் கோஷ்டி எதை சிந்திக்கும்? எந்த மக்கள் நலனை தேடும்? அவர்களின் சொந்த நலன் போதாதா?

வள்ளுவன் கள்ளுண்ணாமை என அதிகாரம் இயற்றும் அளவு அன்றே குடிபழக்கம் சீரழித்திருக்கின்றது

நெருப்பை நெய்யால் அணைத்தேன் என குடிபற்றி கம்பன் கூட ராமயணத்தில் சொல்கின்றான்

இங்கு லாட்டரிம் எனப்படு சூதாட்டத்தின் ஒரு பிரிவினை ஜெயலலிதா ஒழித்து கட்டினாலும் மதுவினை ஒழிப்பதில் அவருக்கு தயக்கம் இருந்தது, அதையும் ஒழித்திருந்தால் மிக சிறந்த முதல்வராக அவர் இருந்திருக்க கூடும்

இந்துமத பாத்திரங்கள் பக்தியில் கலைகளில் கலந்து எல்லா வீடுகளையும் தொட்டகாலத்தில் குடியும் சூதாட்டமும் கட்டுபடுத்தபட்டிருக்கின்றன‌

பிற்கால பகுத்தறிவு காலத்தில் இந்துமதத்தை புறக்கணிக்க தொடங்கியபொழுது சமூக சீர்கேடு தொடங்கிற்று

குடி இன்று சமூக கடமையாகிவிட்டது, இன்னும் அறம் அறியா ஆட்சிகள் வருங்காலத்தில் வந்தால் சூதாட்டமும் இங்கு சமூக கடமையாகலாம், ஏன் தாய்லாந்து காட்சிகளும் அரங்கேறலாம்

ஒழுக்கமான கட்டுகோப்பான சமூகமாக வாழ அன்றே பல தத்துவங்களை போதித்ததுதான் இந்துமதம் என்பது சீனர்களின் சூதாட்ட விடுதியினையும் தமிழக டாஸ்மாக்குகளையும் பார்த்தால் நினைவுக்கு வருகின்றது

அம்மதம் விஞ்ஞானமும், வாழ்க்கை தத்துவமும், உளவியலும் கலந்த மானிட வாழ்வுக்கு மிக நெருங்கிய மதமாய் இருக்கின்றது என்பது உலகை சுற்றி பார்த்தால் புரிகின்றது