சூப்பர் மூன்
தமிழனுக்கு எப்பொழுதும் தனி கவலை
1960களில் திமுக தொடங்கி வைத்த கவலை அது
புரட்சி நடிகன் என்றும் முக முத்து பாசறை என்றும் தொடங்கி தமிழகத்தை திசை திருப்பினார்கள்
அது புரட்சி தலைவன் யார்? தலைவி யார்? என்பது வரை சென்றது
திமுக தலமையும் சளைக்காமல் இதோ கலைஞானி, இதோ புரட்சி கலைஞர், இதோ சூப்பர் ஸ்டார் , இதோ இசைஞானி என ஆளாளுக்கு பட்டம் கொடுத்து வளர்த்தது
காவேரி தந்த கலைசெல்வி எனும் அடைமொழி ஜெயாவுக்கு வந்ததிலும் கலைஞரின் மறைமுக உதவி இருந்தது
சினிமாதுறை நடிகர்களுக்கு பட்டம் கொடுப்பதை தன் இன்னொரு கடமையாக கொண்டிருந்தார் கருணாநிதி
ராமசந்திரன்,ஜெயாவினை வளர்த்துவிட்டவர் பின்பு ரஜினி , விஜயகாந்த் என காத்திருக்கவும் கவலைபடவில்லை
திராவிட கொள்கையின் சாதனை அது
அப்படிபட்ட பெரியார் மண்ணில், அண்ணாவும் கலைஞரும் நடமாடிய மண்ணில் அந்த தார்மீக பாரம்பரியபடி அடுத்த சூப்பர்ஸ்டார் யாரென சர்ச்சை வந்தாயிற்று
தீர்ப்பு சொல்ல, அடைமொழி கொடுக்க கலைஞரும் இல்லை. இவர்களை ஓடவிட்டு அடித்து விஜயினை முழங்காலில் இட ஜெயாவும் இல்லை
முக ஸ்டாலினிடம் கேட்டால் உதயநிதி அகில இந்திய ஸ்டார் சூப்பர் என்பார் என்பதால் கேட்கவே வேண்டாம்
இதனால் அஜித்தின் ஆமை குஞ்சுகளுக்கும் விஜயின் அணில்குஞ்சுகளுக்கும் மோதல் வெடித்துவிட்டது
ரஜினி காலத்துக்கு பின்புதான் அடுத்த் சூப்பர்ஸ்டார் யாரென தெரியும் பொறுங்கள் என சொன்னா? அவர் எங்கே வாக்கிங் செல்வார் என நம்மிடமே கேட்பார்கள்
இந்த திப்பு சுல்தான் படையும் பிரிட்டிஷ் படையும் மோதினால் தமிழகம் தாங்காது
இதெல்லாம் திராவிடசாதனை எனினும், பெரும் மோதலுக்கு இரு தரப்புமே தயார்
இதில் மகளிர்படை ஆதரவு ஆமைபடைகளுக்கு இருப்பதால் வெற்றி அவர்கள் பக்கம் செல்லலாம்
எனினும் காக்கா வலிப்பு அணில்குஞ்சுகளுக்கு எல்.கே.ஜி விஜயண்ணா பிரிவும் பலம்
எப்படிபட்ட அறிவார்ந்த தலைமுறையினை பெரியார் மண் உருவாக்கிவிட்டது பார்த்தீர்களா?
சத்தியமாக ஜாதி இல்லை
ஆம் இரு கோஷ்டியிலுமே எல்லா சாதியும் சமத்துவபுரமாக நிற்கின்றது ஆனால் மொத்தமாக பள்ளத்தில் விழுந்து சாவதில் சாதிபார்க்கவில்லை என்பதில் என்ன பெருமை?
இரு கோஷ்டிகளும் மோதினால் ஒரு பயலும் தப்ப கூடாது, மீறி தப்பி வருபவனை மண்டையில் அடித்து அந்த இடத்திலே கொல்ல வேண்டும்
எப்படியும் போகட்டும்,
எவனும் சூப்பர்ஸ்டாராக இருந்து தொலையட்டும், சூப்பர் நோவா எனப்படும் சூன்யமாகவும் தொலையட்டும்
எத்தனை சூப்பர் ஸ்டார் மற்றும் சூப்பர் நோவா வந்தாலும் சூப்பர் மூன் ஒரே ஒருவர்தான்
அவர்தான் தலைவி குஷ்பு
முக்காலமும் சதா சர்வ நித்திய காலமும் 4 யுகத்திலும் ஈரேழு உலகிலும் அவர் ஒருவர்தான் நிரந்தர “சூப்பர் மூன்”
“அன்று வந்ததும் அதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
என்றும் உள்ளது ஒரே நிலா
சங்கத்து கண்ணுக்கு ஒரே நிலா..”