சென்னை அண்ணா சாலையில் 10 அடி நீளத்திற்கு விரிசல்: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
சென்னை அண்ணா சாலையில் 10 அடி நீளத்திற்கு விரிசல்: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
இந்த சுரங்கபாதைகளின் சாதகம், பாதகம் என்றொரு ஆய்வு முன்பு ஐரோப்பாவில் நடந்தது
போக்குவரத்து, இடநெருக்கடி இன்னபிற வசதிகளுக்கு சுரங்க பாதை பெரும் சவுகரியம் எனவும், வெள்ள காலத்தில் சிக்கல் எனவும் சொல்லபட்டது, யுத்த காலத்தில் சுரங்க பாதையி வெடிவைத்தால் நகரமே அழிந்துவிடும் எனவும் அது எச்சரித்திருந்தது
இப்பொழுது சென்னையில் சுரங்கபாதை வந்தபின், யுத்தகாலம் இல்லாமையே சாலைகள் பிளக்கின்றன, இதுதான் தமிழகம்
என்ன யுத்தம்? காண்ட்ராக்டருக்கும் அரசுபிரநிதிகளுக்கான கமிஷன் யுத்தமாக இல்லாதவரை நல்லது..
மவுண்ட்ரோடாக இருந்தாலாவது வெள்ளையன் சாலை என சொல்லிவிடலாம், நாமோ அண்ணா சாலை என மாற்றிவேறு வைத்துவிட்டோம்
இப்பொழுதெல்லாம் அண்ணா பெயருக்கு கடும் சோதனைகள்
அண்ணா நினைவு வளைவு இடிப்பு, அண்ணா நூலக சர்ச்ச ஜெயா கல்லறை வந்தபின் அண்ணா கல்லறை மதிப்பிழப்பு, அண்ணா சாலை பிளவு என எங்கும் அண்ணா பெயர் இருக்குமிடமெல்லாம் சிக்கல்
அப்படியே அந்த அண்ணா திமுகவிற்கும் ஆயிரம் சிக்கல்….
அண்ணா நாமம் வாழ்க என சொல்லியே கட்சி நடத்தினார் ராமசந்திரன், அவரின் நூற்றாண்டுவிழாவில் அண்ணா நாமம் இருக்குமிடமெல்லாம் சிக்கல்…