சென்னை ஐஐடியில் சமஸ்கிருத இருக்கை

சென்னை ஐஐடியில் சமஸ்கிருத இருக்கை அமைக்கபடுவதாக சில தகவல்கள் சொல்கின்றன‌

சமஸ்கிருதம் வேண்டுமென்றால் தனி பல்கலைகழகம் கூட அமைக்கட்டும் , விரும்பியவர்கள் படிக்கட்டும் யார் தடுக்க முடியும்?

ஆனால் விண்வெளி முதல் அணு ஆராய்ச்சி வரை நடக்க வேண்டிய ஐஐடி எனும் அறிவு கூடத்தில் சமஸ்கிருத இருக்கை எதற்கு?

தமிழுக்கு இடமில்லா ஐஐடியில் ஏன் சமஸ்கிருதம் என எந்த தமிழின உணர்வாளனும் கேட்டதாகவும் தெரியவில்லை.

எவனோ முன்பு இலங்கையில் தமிழ்பெயர் எடுக்கபட்டது என கத்திகொண்டிருந்தான், காலடியில் சென்னையில் நடக்கும்பொழுது அவனை எல்லாம் காணவே முடியாது.

தமிழுக்கு இருக்கை இல்லை , வேறு எந்த மொழிக்கும் இருக்கை இருப்பதாகவும் தெரியவில்லை. இதற்கும் ஐஐடிக்கும் எந்த சம்பந்தமுமில்லை

வரவர பெரும் சர்ச்சைகளில் சிக்குகின்றது ஐஐடி, உலகில் இந்திய மதிப்பினை சொல்லும் நிறுவனம் அதில் வேகமாக சறுக்குகின்றது

விரைவில் பசுமாட்டு தொழுவம் அமைக்கபட்டு அதற்கொரு இருக்கை அமைக்கபடலாம்

ஐன்ஸ்டீனும், ஸ்டீபன் ஹிக்கின்ஸும் புத்தக வடிவில் வலம் வரும் ஐஐடி இனி ஆண்டிகள் மடமாக, மாட்டு தொழுவமாக மாறபோகின்றது

உலகளவில் ஐஐடியின் மதிப்பின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது என்பது மட்டும் உண்மை