சென்னை நாள்…
அந்த பகுதி தொண்டை மண்டலம் என்றும் பின்னாளில் பல்லவ பகுதி என்றும் அழைக்கபட்ட இடம், மயிலாப்பூரும் , பூவிருந்த வல்லியும், திருவல்லிக்கேணியும் மிக பழமையான இடங்களாகத்தான் இருந்தன
அவை ஒரே ஊராக இருந்திருக்கவில்லை சுமார் 70 கிராமங்கள் பல்லாயிரம் ஏக்கரில் விரிந்து பரந்திருந்தன, அழகான ஆறுகள் பல ஓடி அதனை செழிப்பாக்கி கொண்டிருந்தன
சோழர்களும் பல்லவர்களும் அதனை வளம் கொழிக்கும் இடமாக மாற்றிவைத்தார்கள், ஏகபட்ட பாக்கங்கள் எனும் நீரும் நிலமும் நிரம்பிய இடமாக அது விளங்கிற்று
நிலத்தால் வாழ்வாங்கு வாழ்ந்த அந்த பகுதிக்கு முதல் அன்னியர் ஊடுருவல் 15ம் நூற்றாண்டில் வந்தது, 15ம் நூற்றாண்டில் எங்கோ போப்பாண்டவரும் துருக்கியின் ஆட்டோமன் சுல்தானும் மோதிகொண்டதில்தான் அப்பகுதி மெட்ராஸ் என வேகமாக வளர மூலகாரணமாயிற்று
ஒரு காலத்தில் சீனாவின் பட்டும், இந்திய மிளகும் பட்டுசாலை எனும் சாலை வழியாக துருக்கி மூலம் ஐரோப்பாவினை அடைந்துகொண்டிருந்தன, அது ஒன்றே பிரதான இணைப்பு.
அலெக்ஸாண்டர் காலம் முதல் போப்பாண்டவர்கள் உச்ச காலம் வரை அது ஐரோப்பியர் கட்டுபாட்டிலே இருந்தது, வியாபாரம் அதன் மூலமே நடந்தது.
இது யார் கட்டுபாட்டில் இருப்பது என்று தொடங்கிய அரசியல் போர், பின் மதச்சாயம் பூசப்பட்டு சிலுவைப்போர் என தொடர்ந்தது, வலுவான துருக்கியர் அனாசாயமாக விரட்டினர், இந்நிலையில்தான் எப்படியோ ஆசியா சுற்றி வந்து , இந்தியாவினை பார்த்து வாயினை பிளந்தான் அவன்
இன்று நாம் ஐரோப்பாவினை ஆஆஆ என பார்கின்றோம் அல்லவா? அப்படி.
உலகின் வரலாற்றை மாற்றி போட காரணமாயிருந்தவன் மார்க்கோ போலோ, இத்தாலிக்காரர்
(இத்தாலியருக்கு இந்தியா என்றாலே ஒரு விருப்பம் போலும் ),
அவன் வியாபாரிதான் ஆனால் இந்தியா, சீனம் என ஆசியாவினை சுற்றிவிட்டு ,செல்வம் இந்தியாவில் குவிந்து கிடக்கிறது என்ற ஐரோப்பியரின் கனவிற்கு, ஆமாம் நானே கண்ணால் பார்த்த சாட்சி என்று சூடமேற்றி சத்தியம் செய்தவர்.
அவன் காலத்தில் அந்த பகுதி பாண்டிய மன்னன் ஜடாவர்மன் சுந்தரபாண்டியனுக்கு கட்டுபட்ட பகுதியாய் இருந்தாலும் பிரதான கப்பல் செல்லும் இடமாக நெல்லை பகுதி கடற்கரைகள் இருந்திருக்கின்றன
ஐரோப்பாவில் இருந்து நிலம் வழியாக சீனா சென்ற மார்க்கோ போலோ, அங்கிருந்து கப்பல்வழியாக செங்கடலை நோக்கி செல்லும் பொழுதுதான் தென்னக இந்தியாவினை கண்டு வாய்பிளந்து நிறைய எழுதிவைத்தான், எழுதியதை ஐரோப்பாவுக்கு எடுத்தும் சென்றான்
அதுமுதல் “இந்தியா கிறுக்கு” பிடித்து அலைந்தது ஐரோப்பா, தேடினார்கள், முதல்வெற்றி போர்ச்சுகல்லுக்கு வாஸ்கோடகாமா அதை செய்தான் இந்தியாவினை பாபர் வெற்றிகொண்ட நேரம் இந்திய கேரளம் கள்ளிகோட்டைக்கு வந்தான் வாஸ்கோடகாமா
அவன் மதமாற்ற சர்ச்சையில் ஈடுபட்டபொழுது இந்துக்கள் அடித்து கொல்ல அவனை தொடர்ந்து வந்தோர் சூரத் கோவா என கால்பதித்தார்கள்
அப்படியே கிழக்கு கடற்கரை சென்னை பக்கமும் வந்தார்கள், வந்த போர்ச்சுகீசியர்கள் அந்த கடற்கரையில் சிறிய கோட்டை கட்டி ஆண்டார்கள்
அவர்கள் அந்த 15ம் நூற்றான்டில் கோவா பக்கம் செய்த கொடுமைகள் கொஞ்சமல்ல, பிஜப்பூர் சுல்தான் மொகலாயம் என இந்தியா முழுக்க பச்சைகொடி பறந்த காலம் அவை, இதனால் மதமாற்றம் குறிப்பாக அனாதைகளாக்கபட்ட இந்துக்களை மிரட்டி மதமாற்ற போர்ச்சுகீசியருக்கு எளிதாயிற்று
அதுவும் போர்சுகீசிய கொடுமையும் முரட்டு கலாச்சாரமும் தாங்கமுடியாமல் தாய்மதம் திரும்பிய இந்துக்களை பிடித்து அவர்கள் செய்த சித்திரவதை வரலாற்றின் கொடும் பக்கங்களில் ஒன்று, சிவாஜிதான் அதற்கு முடிவு கட்டினார்
அப்படிபட்ட போர்ச்சுகீசியர்கள் தமிழக பக்கம் இலங்கை பக்கம் கால்வைத்தனர், இவர்கள் காலூன்ற மிகபெரிய வாய்ப்பு கடல் கொள்ளையர்கள் அவர்கள் இன்று சோமாலியா கடற்கொள்ளையர் போல் நிறைய இருந்தார்கள், அதனில் அரேபிய ஆப்ரிக்க இஸ்லாமியர் நிறைய உண்டு
இவர்களை அடக்கும் சக்தி மொகலாயர், பாமினி சுல்தான்கள் அன்று தமிழகத்தை ஆண்ட நாயக்கர்களுக்கு இல்லை காரணம் கடல்படை அவர்களிடம் இல்லை
இதனால் அவர்களை கட்டுபடுத்திய கடல்பலமிக்க போர்ச்சுகீசியர் சில சலுகைகளைபெற்று முத்து, சங்கு என பல உரிமைகளை பெற்றனர், கடலோர பகுதிகள் அவர்கள் கைக்கு வந்தது
15ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர்கள் மட்டும்தான் ஐரோப்பாவில் இருந்து வந்து ஆதிக்கம் செலுத்தினார்கள், கடற்கரை மக்களை கும்பல் கும்பலாக மதமாற்றம் செய்துவைத்தது அவர்கள்தான்
அவர்கள் அந்த வடக்கு தமிழக கடற்கரையில் ஆதிக்கம் செலுத்தும்பொழுது ஒரு மாலுமி இறந்தான் அவன் பெயர் மெட்ரூஸ்
மெட்ரூஸை புதைத்த இடத்தை மெட்ராஸ் என சொல்லி அழைத்தார்கள், அது அப்பொழுது சாதாரண இடம் இன்றைய பெசன்ட் நகர் பக்கம் அது இருந்திருக்கலாம்
அப்ப்பொழுதுதான் கடற்கரையில் பல ஆலயங்கள் இடிபட்டுகிறிஸ்தவமயமாயின, பரங்கி முனிவர் தவம்செய்த இடம் பரங்கிமலையாயிற்று
இந்தியா பக்கமே வராத தாமஸ் எனும் சீடன் அம்மலைக்கு வந்ததாகவும் அவனை பிராமணர் கொன்றதாகவும் கதைகட்டபட்டது, காரணம் இந்துக்களை மதமாற்ற பிராமணர் பெரும் தடையாக இருந்ததால் அவர்கள் மேல் பெரும் வெறுப்பை போர்ச்சுகீசியர் கொண்டிருந்தனர், அந்த வெறுப்பு கிறிஸ்தவ கைகூலிகளான திராவிட கும்பலிடம் இன்றுவரை உண்டு
உயிர்கொலை புரியா பிராமணர் ஈட்டி ஏந்தி தோமாவினை கொன்றார்கள் என பெரும் புரட்டை போர்ச்சுகீசியர் செய்ததெல்லாம் உச்சகட்ட காமெடி
ஒரு கல்லறையினை தாமஸ் கல்லறை என காட்டி, சாந்தோம் என மாற்றினார்கள்
மிக வேகமாக அவர்களின் மதமாற்றம் மெட்ராஸ் பக்கம் இருந்திருக்கின்றது, ஒரு நாட்டை பிடித்து அதன் கலாச்சாரம் அடையாளத்தை கொடூர்மாக சிதைத்து சிலுவை ஊன்றி முழு கிறிஸ்தவபூமியாக மாற்றுவதில் கைதேர்ந்த போர்ச்சுகீசியர்கள் அந்த மெட்ராஸை முழு கிறிஸ்தவ பூமியாக்க கங்கணம் கட்டி நின்றார்கள்
இலங்கையில் கண்ணகி கோவிலை மடுமாதா தேவாலயமாக அவர்கள் மாற்றிய காலங்களில் மெட்ராஸ் எனும் ஊர் மெல்ல மெல்ல கிறிஸ்துவ ஊராக மாறிகொண்டிருந்தது, தூத்துகுடி குமரி கடற்கரையில் செய்த மதமாற்றங்களை மெட்ரஸ் பக்கமும் அதிகம் செய்ய தொடங்கினார்கள்
ஆனால் வீரசிவாஜி அடித்த அடியில் கோவா பக்கம் அவர்கள் வலுவிழ்ந்தார்கள், அதே நேரம் பிரிட்டனும் பிரான்சும் தங்கள் வியாபார கம்பெனிகளை அனுப்ப போர்ச்சுகீசியருக்கு அடி விழ ஆரம்பித்தது
பொதுவாக பிரிட்டிஷார் வியாபார நோக்கில் கில்லாடிகள், போர்ச்சுகீசியர் மதமாற்றமும் முரட்டு உல்லாசமும் கொண்டவர்கள், இதனால் போர்ச்சுகீசியரை ஆங்கிலெயர் கட்டுபடுத்தியதுடன் நல்ல துறைமுகங்களையும் அடையாளம் கண்டார்கள்
(இந்தியாவின் மும்பை, சென்னை, கல்கத்தா என முக்கிய துறைமுகமெல்லாம் அவர்கள் அடையாளம் கண்டதே)
அப்படிபட்ட வெள்ளையர்கள் 1600களில் சென்னப்ப நாயக்கனிடம் இருந்து நிலம் வாங்கி கோட்டை கட்டினார்கள், ஆச்சரியமாக டெல்லியில் அப்பொழுதுதான் ஷாஜஹான் செங்கோட்டை கட்டி கொண்டிருந்தான்
பின்னாளில் சென்னை கோட்டையில் இருந்து எழும்பிய ஆங்கில கிறிஸ்தவ ஆட்சிதான் டெல்லி செங்கோட்டையினை கைபற்றி இஸ்லாமிய ஆட்சியினை முடிவுக்கும் கொண்டு வந்தது
பிரிட்டிசாரின் வருகை சில நன்மைகளையும் கொடுத்தது மொகலாயரின் ஆட்சியினை முடித்து வைத்த அவர்கள்தான் கட்டாய மதமாற்றம் போன்றவற்றை செய்து குழப்பம் விளைவித்த போர்ச்சுகீசிய கிறிஸ்தவர்களையும் கட்டுபடுத்தினார்கள்
இந்துக்களை தொடாமல் முதலில் கால்பதித்த பிரிட்டிசார் பின்னாளில் இந்துக்களை விரோதித்து நாட்டை இழந்து சென்றார்கள்
எது எப்படியாயினும் அவர்கள் கட்டிய அந்த கோட்டை இந்திய தலைவிதியினை மாற்றியது என்பது நிஜம்
அந்த சென்னை கோட்டைக்கு நிலம் வாங்கிய நாள் இன்று ஆகஸ்ட் 22ல் கொண்டாடும் சென்னை தினமாம், கோட்டை திறக்கபட்டநாளில்தான் சென்னை தினம் கொண்டாடி இருக்கவேண்டும், ஆனால் யாரோ புண்ணியவான் பத்திரம்முடிந்த நாளையே குறித்துவிட்டார்கள், பரவாயில்லை.
அந்த கோட்டையும் அதை சுற்றி எழுந்த குடியுருப்புக்களுமே மதராசபட்டினம் எனும் மாநகரம் உருவாக அடிதளமாயிற்று, அக்கோட்டைஇல்லையென்றால் அப்பட்டனமில்லை
மதராசபட்டினம் எனும் சென்னை இப்படித்தான் உருவானது
அந்த கோட்டைதான் ஆங்கில கிறிஸ்தவ ஆட்சியினை இங்குநிறுவி இந்தியா முழுக்க அவர்கள் கைபற்ற வழிசெய்தது
இக்கோட்டை இங்கு ஆபத்து என எச்சரித்த முதல் வீரன் சிவாஜி மகராஜா, செஞ்சி கோட்டையினை கைபற்றிய காலங்களில் சிவாஜிக்கு சென்னை ஜார்ஜ் கோட்டைமேலும் எச்சரிக்கை வந்தது ஆனால் அதற்குள் அவன் காலம் முடிந்துவிட்டதால் கோட்டை தப்பிற்று
சிவாஜிக்கு பின் ஆற்காடு நவாபின் கைக்கு சென்னை பகுதி சென்றாலும் கோட்டை பிரிட்டிசாரின் கட்டுபாட்டில் இருந்தது
சுருக்கமாக சொன்னால் சென்னை இந்தியாவின் பிரதான நகரமாக மாற அடித்தளமிட்டதே அந்த கோட்டை தான்.
அந்த கோட்டையினை கொண்டுதான் மதராசபட்டினத்தை நிர்மானித்தான் பிரிட்டிஷ்காரன், இத்தாலியின் வெனிஸ் போலவே திட்டமிட்ட நீர்வழிச்சாலையினையும் வெள்ளையர்கள் அமைத்திருக்கின்றார்கள், அந்த சென்னை அப்படித்தான் இருந்திருக்கின்றது, பின்னாளில் எல்லாம் நாசமாய் போய்விட்டது.
கடல் இருக்கும் பொழுது நீர்வழி சாலை எதற்கு என்றால், அது பசுமையும் அழகையும் பாதுகாக்கும் விஷயமாயிற்று
இந்த இடம் கோட்டைக்காக வாங்கும் பொழுதும், அதில் பெரும் லண்டன் கனவான்கள் ஆளும்பொழுதும், நிச்சயம் திருக்குவளை வாரிசும், மைசூர் வாரிசும், ஏன் எடப்பாடியாரும் வந்து சண்டையிடும் என்றெல்லாம் நினைத்திருப்பார்களா?
விதி எப்படி எல்லாம் ஆடுகின்றது.
அக்கோட்டையில்தான் இந்தியாவில் வெள்ளையர் ஆட்சியினை தொடக்கி வைத்த ராபர்ட் கிளைவ் வசித்தான், அந்த மாளிகை இன்றும் கோட்டையில் உண்டு அதன் மாடத்திலிருந்து அன்றைய அழகான கூவம் ஆற்றை ரசித்தபடி அவன் தேநீர் பருகுவானாம், அவனின் திருமணம் கூட சென்னை கோட்டையில்தான் நடந்தது
அப்பொழுது சென்னை பகுதி நதிகள் எல்லாம் ஓடங்கள் ஓடுமாம், அதில் அவனுக்கு பிடித்தமான நதியில் அவன் படகோட்டுவானாம்
அதில் ஒன்று கூவம், இன்று நாறி கிடக்கும் கூவம், விடுங்கள். அக்காலம் அவ்வளவு அழகாய் இருந்திருக்கின்றது.
நிச்சயமாக சென்னைக்கு திருப்புமுனை கொடுத்ததே அந்த கோட்டைதான், அது அமையாவிட்டால் சென்னை இந்த அளவிற்கு வளர்ந்திருக்காது, , அசுரவேகத்தில் கிட்டதட்ட 60 கிராமங்களை விழுங்கி இன்று பிரமாண்டமாய் எழுந்து நிற்கிறது, இன்று கிட்டதட்ட 80லட்சம் மக்கள் வாழும் நகரம், ஆசியாவின் குறிப்பிடதக்க நகரங்களில் ஒன்று
பகை நாடுகளின் பெரும் இலக்குகளில் சென்னையும் ஒன்று, சில நாடுகளின் ஏவுகனைகளின் நுனி சென்னை நோக்கியே திருப்பபட்டு நிற்கிறது. அது அவ்வாறாக இருப்பதில் கொழும்பிற்கும் மகிழ்ச்சி.
சென்னையும், அதற்கு காரணமான ஜார்ஜ் கோட்டையும் பல ஆபத்துக்களை கடந்துள்ளன், பாண்டிச்சேரி பிரென்ஞ் கவர்னர் டூப்ளேவிற்கு அதன் மீது ஒரு கண், பதிலுக்கு வெள்ளையர் அவர் முதுகை உடைத்துவிட்டார்கள்
ராபர்ட் கிளைவ் எத்தனையோ போர்களுக்கு அங்கிருந்துதான் திட்டமிட்டான், உத்தரவு கொடுத்தான்.
மருதநாயகம் அங்குதான் பிரெஞ்ச் படைகளை விரட்டி அதனை மீட்டு தான் தன் வீரத்தினை நிரூபித்துகாட்டினான்.
முதலாம் உலகப்போரின் போது உலகை மிரட்டிய ஜெர்மனியின் நீர்மூழ்கி எம்டன் சென்னை கோட்டையை குறிவைத்து தாக்கியது,(அந்த கல்வெட்டு இன்றும் உண்டு), முதலும் கடைசியுமாக சென்னை மீது நடந்த ராணுவ தாக்குதல் அது, அதன் பின்னர் ஆபத்தில்லை
இரண்டாம் உலகபோரில் பிரதான ஆலோசனைகள் அங்குதான் நடந்தன
எம்டன் கப்பலை தவிர சென்னைக்கு மிரட்டல் வந்ததிலைஆனால் ஆபத்து மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் பொழுது எழுந்தது, சென்னை எங்களுக்கு சென்னை வேண்டும் அல்லது சண்டிகர் போல பொதுநகராக இருக்கலாம் என போராடினர் தெலுங்கர்கள்
கிட்டதட்ட அவர்களுக்கு சாதகமான சூழல், அன்றேல்லாம் ஐதராபாத் சிறு நகரம், விசாகபட்டினம் தூத்துக்குடி அளவிற்கே இருந்தது, விடமாட்டோம் என பிரளயம் செய்தனர் தெலுங்கர்கள்.
“எங்க இருந்தா என்ன இந்தியாவில தான இருக்குண்ணேன்??” என காமராஜர் சிந்திக்க, “வெங்காயம் அப்படியும் அது திராவிடநாட்டிலதான இருக்கு” என்று பெரியாரும் ஒதுங்கிகொண்டனர்,அண்ணாவுக்கே அவரின் எதிர்காலம் தெரியா நிலை, கருணாநிதி அன்று கலைஞர் அல்ல, ஆனால் அறியபட்ட வசனகர்த்தா, அவர் என்ன ஆகபோகின்றார் என்பது அவருக்கே தெரியாத காலம், போராட யாருமில்லை,
ஒரே ஒருவரை தவிர அவர் ம.பொ.சிவஞானம், தமிழரசு கட்சி நிறுவணர்.
பலர் தமிழியக்கம் நடத்தினர் அவரில் சிலப்பதிகாரத்தை கரைத்து தெளித்த “சிலம்பு செல்வர்” என அறியபட்ட ம.பொ.சி பிரசித்தம், அவரை விட அவர் மீசை பிரசித்தம், அண்ணாவின் மயக்கும் தேன் தமிழில் சற்று மங்கிபோனவர் ம.பொ.சி.
ஆனால் தமிழரின் எல்லையை காத்த போராட்டம் இவரால் மட்டும்தான் நடைபெற்றது, அவரின் எழுச்சியான போராட்டத்தில் சென்னை தமிழகத்திற்கு வந்தது, திருத்தணியும் வாங்கிகாட்டினார், திருப்பதி முதல் திருஅனந்தபுரம் வரை தமிழரின் எல்லை என முழக்கமிட்டார்.
திருப்பதியும் உங்களுக்கா என தெலுங்கள் பொங்கி தற்கொலை முயற்சி வரை சென்றனர், “தேவுடா” தமிழகம் வர மறுத்தார் அங்கே தங்கிவிட்டார், கொஞ்சம் தமிழகம் போராடியிருந்தால் திருப்பதி கிடைத்திருக்கும்,இந்து அறநிலையதுறை அமைச்சருக்கு போரே நடந்திருக்கும்.( பல ஊழலும் நடந்திருக்கும் ),
நல்ல வேளையாக கிடைக்கவில்லை அதுவும் நல்லது.
தந்திரமாக கேரளம் முந்திகொண்டு திருவனந்தபுரம் எங்கள் தலைநகர் என்றது, நிச்சயமாக அன்று அது அவர்கள் தலைநகராக இருக்க சம்பந்தமில்லாதது, அரசியலில் முந்திகொண்டார்கள், அதுவும் பரவயில்லை, இல்லை என்றால் பதமநாபசாமி கோயில் என்ன ஆகியிருக்குமோ, சுரங்கம் அமைத்து தூக்கியிருப்பார்கள், மணலையே விடாத தமிழகம் இது.
பத்மநாபா சாமி ஆலயம் தமிழக இந்து அறநிலையதுறையிடம் சிக்கியிருந்தால் என்னாயிருக்கும்? அதுவும் நல்லது
சினிமா ஸ்டூடியோக்கள் கூட சென்னையை நம்பாமல் சேலத்தில்தான் அக்காலத்தில் கட்டபட்டன, முதன் முதலில் துறைமுகமாக மட்டும் அறியபட்ட சென்னை கொஞ்சம் கொஞ்சமாக எல்லா தொழிலின் சந்தையாக மாறிற்று, இன்று சென்னையின் நிலை வேறு, தமிழகத்தின் எல்லா கிராமங்களிலிருந்தும் அதனோடு நேரடியாகவோ இல்லை மறைமுகமாகவோ தொடர்பில்லாதவர் யாருமில்லை.
மக்கள் தொகை பெருக,பெருக சில பிரச்சினைகளும் பெருகும், அதனில் சென்னை சிக்கி இருக்கலாம், ஆனால் சில சிறப்புக்கள் சென்னைக்கு எப்போதும் உண்டு.
சாதிய கலவரமோ, இல்லை மத,இன ரீதியான வன்முறைகளிலோ சிக்காத இந்திய நகரங்களில் சென்னையும் ஒன்று, கல்கத்தா,மும்பை என பெருந்தீ எழும்பி தாண்டவமாடிய நகரங்கள் உண்டு, சென்னை அப்படியல்ல, அதன் மக்களும் அப்படியல்ல,
ஒருமுறை இந்து ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் குண்டுவைத்து தகர்க்கபட்டு 11 பேர் செத்த நிலையிலும் அமைதி காத்தது சென்னை, ஏனென்றால் அதுதான் சென்னை
இதுதான் சென்னை இக்காலம் வரை பதித்திருக்கும் முத்திரை.
(எனினும் அந்த சென்னயில் புலிபயங்கரவாதிகள் நிகழ்த்திய படுகொலைகளும், ராஜிவ் கொலை திட்டமும் மறக்க முடியாதது )
மயிலாப்பூர் கோயில், கபாலீஸ்வரர் ஆலயம், சாந்தோம் ஆலயம், தாமஸ் மலை,விக்டோரியா ஹாலும் அதிலுள்ள ரவிவர்மனின் ஓவியங்கள், எழும்பூர் மியூசியம், பல தலைவர்கள் வாழ்ந்த இல்லம், விவேகானந்தர் தங்கிய இல்லம், ரோஜா முத்தையா நூலகம், அழகான கடற்கரை, சமாதிகள், ரயில் நிலையங்கள், காமராஜரை தவிர எல்லா முதல்வர்களையும் தமிழகத்திற்கு தந்த ஏ,வி.எம் ஸ்டூடியோ, போயஸ் கார்டன் நாடக பள்ளி என இன்னமும் ஏராள பெருமை கொண்டிருந்தாலும்
முதல் அடையாளம் அந்த கோட்டையே.
இன்று சென்னை நாள் கொண்டாடபடுகின்றது
இன்று திருவிழா கொண்டாடும் தமிழக தலைநகர மக்களுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம்,
உண்மையில் சென்னையினை மதமாற்றம் நோக்குடன் கால்பதித்தது போர்ச்சுகீசியர்தான் அவர்களை விரட்டி வெள்ளையர்கள் கால்வைத்து கோட்டை கட்டினார்கள்
உண்மையில் முதலில் சென்னையினை காத்தவன் ராபர்ட் கிளைவ், அவன் இல்லாவிட்டால் சென்னை பிரெஞ்ச்காரன் அல்லது போர்த்துகீசியர் வசம் ஆகியிருக்கும்
பாண்டிச்சேரி, கோவா போல ஒரு மாதிரி ஊராக அது மாறியிருக்கும், கிளைவ் அதனை காத்தான், பின்னாளில் முழு நகராக சென்னை மாற பிரிட்டிசாரின் அடித்தளமே காரணம்
நிச்சயம் மும்பையினை மீறி வளர்ந்திருக்க வேண்டிய நகரம் சென்னை. கல்கத்தா எனும் அக்கால நவீன நகரை கம்யூனிஸ்டுகள் நாசமாக்கியது போல சென்னையின் பெரும் வளர்ச்சி யாரால் தடைபட்டது என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை
சென்னைக்கு தேவை மிக பெரிய திட்டங்கள், மிக பெரிய விமான நிலையம் முதல் துணை நகரமொன்றை உருவாக்கி அதில் ரயில் பேருந்து நிலையம் என ஏகபட்ட தேவைகள் உண்டு
ஆனால் அதெல்லாம் செய்வதற்கு நெடுங்காலம் ஆகும் போல் தோன்றுகின்றது, அதுவரை சென்னையின் வாழ்வு நெரிசலும் மாசுபாடும் இன்னும் பல சிக்கல்களை கொண்டதாகவேதான் தொடரும்
வெள்ளையன் கட்டிய ஒரு கோட்டையால் உருவான அந்ந நகருக்கு, இனி வளமான எதிர்காலம் என்பது ஆற்றங்கரையில் இருந்து கடற்கரைக்கு நகர்கின்றது என்பதை அன்றே சொன்ன சென்னைக்கு இன்று பிறந்தநாள்
ஹேப்பி பெர்த்டே சென்னை சிட்டி
ஏ சென்னை நகரமே..
தேசத்தின் விடுதலைபோரில் உன் பங்கு அளப்பறியது.
பாரதி, திலகர், காந்தி, வ.உ.சி என மிகபெரிய தலைவர்களெல்லாம் உன்னிடம் வந்தே சுதந்திரகணல் எழுப்ப்பினர்
விவேகானந்தரே வந்து வணங்கிய புண்ணிய பூமி நீ..
வெள்ளையன் உனக்கு கோட்டை கட்டி உருவாக்கினான், விக்டோரியா ராணியின் சொத்தாக நீ இருந்தாய், அவள் பெயர் உன் தெருக்களெங்கும் ஒலித்தன, பிரிட்டானியரும் உனக்கு நன்மை செய்தனர்
பின் வந்த காங்கிரசார் உனக்கு எவ்வளவோ திட்டங்களை தந்தனர்
ஆனால் திராவிடம் உனக்கு 4 கல்லறைகளை மட்டும் தந்து உன்னை சுடுகாட்டு நகரமாக்கிற்று, இன்னும் உன் சோகம் தொடர்ந்து நகரே சுடுகாடு ஆகிகொண்டிருக்கின்றது
ஒரு மழைக்கு கூட தாங்கா மிக பலவீனமான சென்னையாய், ஒரு விமான நிலையம் கூட இடிந்து விழும் ஏழை வீடாய் உன்னை ஆக்கி வைத்தது அதே திராவிடம்
4 கல்லறை மட்டும் உனக்கு தந்த அந்த திராவிடம், உன்னை அரை சுடுகாடாய் ஆக்கிய திராவிடம், சென்னை எனும் உன்னை முழு சுடுகாடு ஆகும் முன் பரம்பொருள் உன்னை காப்பாற்றட்டும்

அண்ணா வெகு நாட்களாக அபிராமி அந்தாதி காப்பு மற்றும் நான்காவது பாடலுக்கான உங்களின் விளக்கத்துக்காக வணங்கி காத்திருக்கிறேன்..கொஞ்சம் எனக்காக திரும்ப எழுத்த வேண்டுகிறேன்.. அண்ணா.. நன்றிகள்..