சென்பகராமன் பிள்ளை எனும் பாரத இளஞ்சிங்கம்..

அந்த சிறுவன் திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்து கொண்டிருந்தான், 1891ல் பிறந்த அவனுக்கு அப்பொழுது 13 வயதாகியிருந்தது

அவன் தந்தை சின்னசாமி பிள்ளை திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் சமஸ்தான பணியில் இருந்தார், அந்த சமஸ்தானம் இன்றைய கன்னியாகுமரி வரை நீண்டிருந்தது, சென்பகராமனின் சொந்த ஊர் திருவனந்தபுரத்து புத்தன் சந்தை பகுதியாகும்

அக்காலத்தில் அல்ல இக்காலத்திலும் கேரளத்தில் பிறந்தவர்கள் சிலம்பம், களறி போன்ற கலைகளை பழகுவது மரபு, சென்பகராமனும் அதில் கற்று தேர்ந்திருந்தார், வர்ம கலையும் அவருக்கு தெரிந்திருந்தது

அவரின் தந்தைக்கும் ஐரோப்பிய கல்வி மற்றும் ஆராய்ச்சியாளரான வால்டருக்கும் தொடர்பிருந்தது, சில ஆய்வுகளுக்காக வால்டர் அடிக்கடி திருவனந்தபுரம் வருவது வழமை

அப்படி 1906ம் ஆண்டு வந்த வால்டரிடம் மேற்படிப்புக்காக சென்பகராமனை ஐரோப்பா அழைத்து செல்ல ஒப்படைத்தார் சின்னசாமி பிள்ளை

அந்த 1906ம் வருடம் இந்தியாவில் கொந்தளிப்பான வருடமாய் இருந்தது, சென்பகராமனோ அவ்வயதிலே மிகபெரிய சுதந்திர வேட்கையுடன் இருந்தார், வங்கம் பிரிந்து தேசம் மிக பெரிதாக கொந்தளித்த காலத்தில் பாதுகாப்பு கருதி அவரை அவர் தந்தை ஐரோப்பா அனுப்பினார் எனும் தியரியும் உண்டு

வால்டர் அவரை ஜெர்மனிக்கு அழைத்து சென்றார், அங்கே பொருளாதாரம் என சுவிட்சர்லாந்தில் தொடங்கிய படிப்பு பல இடங்களில் சுற்றி ஜெர்மனில் பொறியியல் படிப்பில் முடிந்தது

ஜெர்மானிய பொறியியல் என்பது இன்றும் தனிசிறப்பு வாய்ந்தது என்பதால் அன்றே அதற்கு தனி மவுசு இருந்தது, மேலும் அந்நாடு பிரிட்டன் எதிர்ப்பு தேசம் என்பதால் அங்கே தயக்கமின்றி தங்கி பட்டம் பெற்றார் பிள்ளை

மெல்ல மெல்ல அவரின் சுதந்திர தாகம் அவரை போராட்ட களத்துக்கு அழைத்தது, ஐரோப்பாவில் இந்திய விடுதலை ஆதரவு கூட்டங்களை நடத்தினார்

பிரிட்டனுக்கு எதிரான ஜெர்மனியில் அதன் அரசர் கெய்சருடன் அடிக்கடி சந்தித்து பிரிட்டனை வீழ்த்த ஆலோசனை சொல்லும் அளவுக்கு அவருக்கு செல்வாக்கும் இருந்தது

பிரிட்டனை இந்தியாவில் இருந்து வெளியேற்றினால் அதன் பலம் குறையும் என ஜெர்மனியும் கணக்கிட்டது, அத்தோடு துருக்கி ஆப்கன் ஊடாக இந்தியாவினை நிலவழி சாலை அமைக்கும் தன் வியாபார கணக்கினையும் அது இட்டு மகிழ்ந்தது

அக்காலம் ஜெர்மனியில் இதர இந்திய எதிர்ப்பாளர்களும் இருந்தார்கள், குறிப்பாக மேடம் காமா போன்ற அதிதீவிர போராட்ட சிகரங்கள் அங்குதான் இருந்தன‌

மேடம் காமா எனும் பெண்மணிதான் முதல் இந்திய சுதந்திர கொடியினை வடிவமைத்தார், அந்த கொடியினைத்தான் சென்பகராமனும் ஏந்தி நின்று “ஜெய் ஹிந்துஸ்தான்” எனும் வார்த்தையினை சுருக்கி “ஜெய் ஹிந்த்” என முழங்கினார்

ஆம் “ஜெய் ஹிந்த்” என முதலில் முழங்கியது இந்திய வரலாற்றில் சென்பகராமனே, அவரின் பேச்சும் எழுத்தும் தொடங்கும் இடங்களில் அது தொடங்கி அதுவே முடிவு முழக்கமாகவும் இருந்தது

1911ல் “ஐரிஸ்டின் சர்வதேச இந்திய கமிட்டி” எனும் அமைப்பினை தொடங்கினார் பிள்ளை, இதில் சரோஜினி நாயுடுவின் சகோதரர் சட்டோபாத்யா, விவேகானந்தரின் சகோதரரர் பூபேந்திர தத்தா ஆகியோரும் இருந்தனர், காந்தி இந்த இயக்கத்தை ஆதரித்தார்

இந்த இயக்கம் தொடர்ந்து பரவியது, ஐரோப்பாவின் ஆம்ஸ்டர்டாம்ஸ், ஸ்டாக்ஹோம் மற்றும் அமெரிக்காவின் வாஷிங்க்டன் ஆகிய இடங்களிலும் இயக்கம் பரவியது

தொடர்ந்து இந்த கமிட்டியினை மக்களிடம் எடுத்து செல்ல தென்னாப்ரிக்கா, பர்மா, ஜப்பான் என உலகெல்லாம் சுற்றி ஆங்கில அரசின் கொடுமையினை எடுத்து சொல்லி அவரகளை விரட்ட ஆதரவு திரட்டினார்

இந்தியன் ஒருவன் ஜெர்மானிய ஆதரவில் மிகபெரிய செல்வாக்கினை பெறுவதை பிரிட்டிஷ் உளவுதுறையும் பிரான்ஸ் உளவுதுறையும் ஐரோப்பாவில் குறித்து கொண்டு அவரை கண்காணித்தன‌

சில ரகசிய கொலைமுயற்சியும் நடந்தது என்கின்றார்கள், அதில் அவர் தப்பியபின் மிகுந்த கவனமாய் இருந்தார்

1931ல் மணிப்பூரை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்தாலும் அவரின் கனவெல்லாம் தேசவிடுதலையில் இருந்தது

அக்காலத்தில் இந்தியா பற்றி மகா மட்டமான கருத்துக்களை மோசமான இழிவான பிம்பத்தை பிரிட்டன் ஐரோப்பாவில் கட்டமைத்திருந்தது, அதை முதலில் உடைத்தவர் சுவாமி விவேகானந்தர்

அடுத்து அதை கிழித்தெறிந்தவர் சென்பகராமன் பிள்ளை, அவரின் “புரோ இந்தியா” இதழ் இந்தியாவினை பற்றிய பெருமையினையும் ஆங்கில பொய்யினையும் உலகெல்லாம் சுமந்து சென்றது

1914ல் முதல் உலகப்போர் தொடங்க ஜெர்மனி பிரிட்டனுக்கு எதிராக போரில் குதித்தது

அப்பொழுது ஜெர்மனியின் புகழ்பெற்ற கப்பலான “எம்டனில்” போர் வீரராக கலந்து கொண்டார்

சென்பகராமன் பிள்ளை, அந்த கப்பல்தான் சென்னைக்கு வந்து பிரிட்டிஷ் நிலைகள் மேல் குண்டு வீசியது
சென்னை துறைமுகம், சென்னை ஆயில் குடோன், சென்னை நீதிமன்றம் என குண்டு வீசி மிரட்டியது அக்கப்பலே,

அக்கப்பல் கராச்சியிலும் அட்டகாசம் செய்தது

இந்தியாவின் விடுதலைக்கு முதல் ராணுவரீதியான அடியினை சென்பகராமனே தொடங்கினார், சென்னை தாக்குதலுக்கு பின் அக்கப்பலில் இருந்து வெளியேறினார்

இரண்டாம் உலகபோரின் முடிவில் ஆப்கனில் பிரிட்டன் வெளியேறி பிரிட்டன் எதிர்ப்பு அரசு அமைந்தது, அங்கே பிரிட்டனுக்கு எதிரானவர்களெல்லாம் இயங்கினர்

அங்கேதான் சென்பகராமனும் சென்றார், ஜெர்மன் ஜப்பான் ஆதரவில் “சுதந்திர இந்திய அரசு” என ஒரு அரசை நிறுவி அதில் வெளியுறவுதுறை அமைச்சராக இருந்தார்

அந்த சுதந்திர அரசு பின்னாலில் ஆப்கனில் சிக்கல் வரும்பொழுது மறுபடியும் ஜெர்மனுக்கு இடம் பெயர்ந்தது
அப்பொழுது காட்சிகள் மாறின, முதல் உலகபோரில் ஜெர்மன் தோற்று அந்நாடு சிக்கலுக்குள்ளானது கெய்சர் அரசு பதவி இழந்தது, ஆட்சியில் குழப்பமும் கம்யூனிச குழப்பங்களும் ஏற்பட்டன‌

அந்நேரம்தான் நாசிகட்சி வளர ஆரம்பித்தது, ஹிட்லர் மக்கள் அபிமானம் பெற்று வளர்ந்து கொண்டிருந்தான், அந்த ஹிட்லருக்கு இருந்த பிரிட்டிஷ் வெறுப்பு மற்றும் கம்யூனிச எதிர்ப்பினை கணக்கிட்ட அமெரிக்கா அவனுக்கு அன்று ரகசிய உதவிகள் செய்தது

அந்த ஹிட்லருடன் கூட்டணி சேர்ந்தார் பிள்ளை, அதற்கு முன்பே கெய்சர் படையில் ஹிட்லர் சிப்பாயாக இருந்தபொழுதே இருவருக்கும் பழக்கம் இருந்தது

ஹிட்லர் மக்கள் ஆதரவினை வென்று தலைவனாக உருவான காலங்களில் கெய்சருக்கு இருந்த திட்டம் ஹிட்லருக்கும் இருந்தது

அதாவது இந்தியாவில் இருந்து பிரிட்டனை வெளியேற்ற வேண்டும் என்பது, ஹிட்லர் ஒரு படி மேலே போய் ஜெர்மன் இந்தியாவினையும் ஆளவேண்டும் என கனவில் இருந்தான்

பிள்ளையோ இந்தியர் தன்னாட்சியாக வாழும் தகுதி கொண்டவர்கள் என்ற நிலையில் இருந்தார்

இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு இருந்தாலும் நண்பர்களாகவே இருந்தனர், காரணம் பொது எதிரி பிரிட்டன்

ஹிட்லருக்கு இந்தியா பற்றி பெரும் அபிமானம் இல்லை அவன் கருத்தில் நியாயமும் இருந்த்து அவன் பிள்ளையிடம் சொன்னான்

“செம்பக் (சென்பகராமனை அப்படித்தான் ஜெர்மனில் அழைத்தார்கள்), உன் நாட்டில் 30 கோடி மக்கள் உண்டு ஆனால் பிரிட்டிசார் வெறும் 1 லட்சம் கூட தேறமாட்டார்கள்

இந்தியர் கொஞ்சம் அறிவும் உணர்ச்சியும் இருந்தால் இந்த சொற்ப பிரிட்டிசாரை நசுக்க எவ்வளவு நேரமாகும்? ஆனால் செய்யாமல் அடிமையாய் இருக்கின்றார்கள். இந்த மனநிலை அவர்களின் தேசம் பற்றிய அக்கறை இன்மையினை ஒருமாதிரி மந்தபுத்தியும் சுயநலத்தையும் காட்டுகின்றது

இம்மக்களுக்கு ஜனநாயகம், நாட்டின் அருமை எல்லாம் தெரியாது. நாட்டை கொடுத்தால் நாசமாக்குவார்கள் ஒரு இரும்பு தலமை தேவை

நான் இங்கே பிரிட்டனை வீழ்த்தும்பொழுது இந்தியா தானாக சுதந்திர நாடாகும், நீ என் பிரதிநிதியாக அதை ஆண்டுகொள்”

ஆனால் சென்பகராமனுக்கு இது நரிக்கு தப்பி புலியிடம் வீழ்வது போல் இருந்தது, ஹிட்லர் ஆட்சியில் இந்தியா ஜெர்மனோடு அடுத்த யுத்தம் நடத்தும் அவசியம் வருமோ என யோசித்தார், ஆனால் ஜப்பான் முதலிய கூட்டணி நாடுகள் இருப்பதால் காட்சி மாறும் எனும் யோசனையும் இருந்தது

எனினும் வெளிகாட்டவில்லை, இருவரின் திட்டமும் முதலில் பிரிட்டனை வீழ்த்துவதாய் இருந்தது, இணைந்துதான் செயல்பட்டார்கள்

முதலில் பிரிட்டனை ஒழித்துவிட்டு அதன் பின் சுதந்திர இந்தியா பற்றி யோசிக்கும் திட்டம் அவர்களுக்குள் இருந்தது

ஹிட்லர் அப்பொழுதே போர் வியூகம் வகுத்திருந்தான், ஆம் ஆட்சிக்கு வரும் முன்பே அவனிடம் பெரும் திட்டம் இருந்தது

அப்பொழுது சென்பகராமனும் ஜப்பான் மற்றும் இதர இந்திய படைகள் ஜெர்மன் ஆயுதங்களுடன் இந்தியாவில் அடிக்க வேண்டிய பிரிட்டன் நிலைகளை குறித்தார்

இந்த விவரம் பிரிட்டிஷ் உளவுதுறைக்கு தெரிந்தது, அவர்கள் ரகசியமாக விளையாடினார்கள்

ஹிட்லருக்கும் பிள்ளைக்கும் பிணக்கு இருந்ததாக கதைபரப்பினார்கள், அப்படியே பிள்ளைக்கு மெல்ல கொல்லும விஷம் கொடுத்து பழியினை நாசிக்கள் தலையில் இட்டார்கள்

உண்மையில் ஹிட்லர் சென்பகராமனை கொல்ல நினைக்கவில்லை, பிரிட்டனை வீழ்த்தியபின் இந்தியாவில் இருந்து தனக்கு பல விஷயங்கள் வர அவரை பயன்படுத்தி ஒரு ஆட்சியினை அவர் தலமையில் கொடுக்கத்தான் விரும்பினான்

ஆனால் பிரிட்டிஷ் உளவுதுறையின் ஆட்டத்தில் காட்சிகள் மாறின‌

1931ல் ஜெர்மனியில் உடல் நலிவுற்று இறந்தார் சென்பகரமன், உண்மையில் நாசிபடையும் ஹிட்லரும் அவரின் இறப்பில் மனம் வருந்தி அஞ்சலி செலுத்தின‌

ஆனால் ஹிட்லர் ஒருவேளை இந்தியாவினை கைபற்ற கூடும் என கருதிய பிரிட்டிஷ் உளவுதுறை ஹிட்லர் பிள்ளையினை கொன்றதாக கதை கட்டிவிட்டது

அப்படி ஹிட்லர் வெறுப்பை இந்தியாவில் பரப்பிவிட்டது அந்த கதை இன்றுவரை நிலைத்துவிட்டது

சென்பகராமனின் தியாகமும் அவன் மரணத்தின் உண்மை தன்மை அறிந்துதான் பின் நேதாஜி அதே ஜெர்மன் சென்று ஹிட்லரை சந்தித்து ராணுவ உதவி கோரினார்

ஆம், சென்பகராமன் நேதாஜிக்கு வழிகாட்டி இருந்தான்

மிக இறுக்கமானவனும் உணர்ச்சிகளை வெளிகாட்டாதவனுமான ஹிட்லர் நேதாஜியிடம் பிள்ளைக்கு நடந்த கொடுமையினை சொல்லி, தான் அவனை நண்பனாக நடத்தியதையும் எதிர்கால இந்தியாவின் சர்வாதிகாரியாக அவனுக்கு முடிசூட்ட இருந்ததையும் சொன்னான்

அதன் தொடர்ச்சியாக நேதாஜியினை இந்திய சர்வாதிகாரியாக முடிசூட உதவுவதாக சொன்னான், இந்தியாவுக்கு ஜனநாயகம் ஒரு காலமும் பொருந்தாது என்பதில் சரியாக இருந்தான் ஹிட்லர்
நேதாஜி சென்பகராமன் வழியில் ராணுவ உதவி மட்டும் கோரினார்

ஹிட்லர் அப்பொழுதுதான் சென்பகராமனோடு தான் 1930லே உருவாக்கிய திட்டங்களை காட்டினான், தான் இந்தியாவினை ஆள ஆசைபடவில்லை என்பதையும், ஆசிய நாட்டு நிலைகள் ஜப்பானை சார்ந்தது என்றும் அதற்காக ஜப்பானில் பிள்ளை செய்த ஏற்பாடுகளையெல்லாம் சொன்னான்

சென்பகராமனின் மிக அர்பணிப்பான முன்னேற்பாடுகளையும் திட்டங்களையும், ஜப்பானியர் உதவியோடு சிங்கப்பூர் மலேயா பர்மா வழியாக மக்கள் பலத்தோடு முன்னேறி அசாம் வழியாக வங்கத்தை அடைந்து ஒரு வழியாகவும்

சிங்கப்பூரில் இருந்து கப்பல் வழியாக அந்தமானை அடைந்து சென்னையினை தாக்கும் இன்னொரு தாக்குதலாகவும்

மேற்கே துருக்கி வழியாக ஆப்கனை ஹிட்லர் படைகள் அடைந்து நிலைகொள்ளும் பொழுது அங்கிருந்து இன்னொரு தாக்குதலாகவும்

ஆக மும்முனை தாக்குதலில் பிரிட்டன் படைகளை இந்தியாவில் இருந்து விரட்டி நாட்டை சுதந்திரமாக்க திட்டம் வைத்திருந்தார் பிள்ளை

மெல்ல 1910ல் சென்பகராமன் சுற்றிய இடங்களையெல்லாம் மனதில் ஓடவிட்டார் நேதாஜி

அதில்தான் தென்னாப்ரிக்கா, ஜப்பான், பர்மா, ஆப்கன் என மாறி மாறி பிள்ளை ஓடிய காட்சிகள் தெரிந்தன, தென்னாப்ரிக்க தமிழரிடம் இருந்து படைதிரட்டி அந்த படையோடு ஆப்கனில் இருந்து பாயவும், பர்மா மலேயாவில் படைதிரட்டி அங்கிருந்து கிழக்கு வழியாகவும் தாக்க பிள்ளை செய்த போர்தந்திரம் புரிந்தது

ஆம், தென்னாப்ரிக்கா, பர்மாம், மலேயா, ஜப்பான், ஆப்கன் என பெரும் யுத்த கண்ணுடனே பிள்ளை சுற்றினார், 1914லே சென்னை கோட்டையினை அடித்து நாடி பார்த்தார் என்பதெல்லாம் புரிந்தது
எவ்வளவு நுணுக்கமான போர் வியூகத்தை, எவ்வளவு அழகாக மக்களை திரட்டும் வியூகத்தை பிள்ளை திட்டமிட்டார் என நினைத்து கண்கள் கலங்கினார் போஸ்

அவரோடு கலங்கினான் ஹிட்லர்

உண்மையில் பிள்ளையின் திட்டம் அபாரமானது

ஆப்கன் வழியாக நிலமாகவும் அல்லது தென்னாப்ரிக்க இந்தியரை திரட்டி கப்பல் படையாகவும் கராச்சி வழியாக புகுந்தால் ஆப்கானிய முரட்டு வீரர்களோடு, வீரமிகு பஞ்சாபியரின் ஆதரவோடு பெரும் படையாக டெல்லிக்கு வரலாம்

ஒரு பகுதி மும்பை பக்கம் செல்லலாம்

பர்மா வழியாக புகுந்தால் வங்க மக்களின் பேராதரவோடு டெல்லிக்கு வரலாம்

தெற்கே சென்னையினை அந்தமானில் இருந்து வந்து தாக்கினால் மும்முனை அடியில் வெள்ளையன் நகர முடியாது

பிரிட்டன் ஐரோப்பாவில் ஹிட்லரோடு மோதும்பொழுது பிரிட்டனால் இந்தியாவில் தாக்குபிடிக்க முடியாது
(இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம், ஏன் இந்தியாவில் உள்ளே படைதிரட்டவில்லை

அதற்கு வெள்ளையன் விடமாட்டான், அவனுக்கு அஞ்சி இந்தியர்கள் படையாக திரளவும் மாட்டார்கள்
திரண்டாலும் காந்தியும் நேருவும் விடவேமாட்டார்கள், காந்தி அஹிம்சை என சொல்லியே படையினை கலைப்ப்பார்

அதே நேரம் இத்தாலிய படைகள் ஆப்ரிக்காவினை கைபற்றி, ஜப்பானிய படைகள் கிழக்காசியாவினையும் கைபற்றினால் அங்கிருந்து சுதந்திர போருக்கு இந்தியர்களை திரட்டுவது எளிது)

பிள்ளையின் இந்த அழகான வியூகத்தைத்தான் நேதாஜி கையில் எடுத்தார்

ஆனால் பிள்ளையின் திட்டத்துக்கு ஆப்பு வைக்கும்படியோ என்னமோ காந்தி தென்னாப்ரிக்காவில் “அமைதி” நிலைநாட்டினார்

காந்தி கால்பட்ட இடத்தில் நேதாஜிக்கோ பிள்ளைக்கோ ஆதரவு எழாது

ஏன் என்றால் அதுதான் பிரிட்டன் திட்டம், காந்தி சர்ச்சைகுரிய நபராக சந்தேகிக்கபட இதுதான் காரணம்
தென்னாப்ரிக்காவில் இருந்து படைதிரட்டும் விஷயம் காந்தியால் நாசமாக அவர் காலடி படாத பர்மா, மலேயா பக்கம் கண் வைத்தார் நேதாஜி

ஹிட்லர் ஜப்பானிடம் சொல்லி நேதாஜிக்கு பெரும் வழி செய்தான்

நேதாஜி அந்த பிள்ளையின் தீர்க்கமான முழக்கத்தை முழங்கியபடி “இந்திய தேசிய ராணுவத்தை” தொடங்கினார்

“ஜெய் ஹிந்த்” என்ற அந்த உணர்ச்சிபிழம்பான வார்த்தை இரண்டாம் பிள்ளையான நேதாஜியிடமே எழும்பியது
காந்தியும் நேருவும் இந்த வார்த்தையினை பயன்படுத்தியாரும் பார்த்திருக்க முடியாது

1940ல் இரண்டாம் உலகபோர் தொடங்கும் நேரம் , 1914லே பிள்ளை இட்ட திட்டபடி நேதாஜி போர் தொடங்கினார்

வெற்றிமேல் வெற்றி பெற்று வங்கத்தின் அருகில் வந்தார், டெல்லி கைபற்றும் தொலைவில் இருந்தது
ஆனால் ஹிட்லரின் ரஷ்ய சிக்கல் ஜப்பான் மேல் அணுகுண்டு வீச்சு என காட்சிகள் மாறியது, காந்தியின் துரோகத்தில் நேதாஜியும் தற்கொலை செய்து கொண்டார்

பிள்ளை வழியிலே நேதாஜியும் துரோகமாக சரிக்கபட்டாலும் அவர்கள் வழியில்தான் பிரிட்டனை ஹிட்லர் தோற்கடித்து இன்னும் பல விஷயங்களால் இந்திய விடுதலை சாத்தியமாயிற்று

1911 முதல் 1931 வரை இருபது ஆண்டுகள் இந்திய சுதந்திரத்துக்கு உயிரை கொடுத்து போராடி உயிரையும் விட்டவன் அந்த பிள்ளை

அவனின் 33 வயது வாழ்வில் 20 ஆண்டுகள் தேசத்துக்கு வாழ்ந்தவன் அவன்

இந்தியாவுக்கு வலுவான ராணுவம் வேண்டும், வலுவான ராணுவமே இந்தியாவினை காக்கும் என முதலில் திட்டமிட்டவன் அவனே

அவன் ஆசைபடிதான் நேதாஜி வந்தார்

அவனும் நேதாஜியும் அன்று தோற்கடிக்கபட்டாலும் இன்று உண்மையான விடுதலை வீரர்கள் என தேசம் அவர்களைத்தான் கைகாட்டுகின்றது

இன்று அந்த சென்பகராமன் பிள்ளையின் நினைவு நாள்

அவன் 1931ல் மறைந்தாலும் அவன் விருப்பபடி அவன் அஸ்தி 1966ல்தான் அதுவும் நேரு இறந்தபின்புதான் இந்தியாவுக்கு கொண்டுவரபட்டு திருவனந்தபுர நதியில் கரைக்கபட்டு மீதி சாம்பல் நாஞ்சில்நாட்டு வயல்களில் தூவபட்டது

அவனின் சாம்பலை இந்தியாவுக்குள் கொண்டே வரகூடாது என வெள்ளையனும் நேருவும் கங்கணம் கட்டி நின்றது பின்னாளில்தான் புரிந்தது, சாஸ்திரி காலத்தில்தான் அவன் அஸ்தி இந்தியாவுக்குள்ளே வந்தது


அவனுக்காவது அஸ்தியாவது வந்தது, நேதாஜிக்கு அதுவுமில்லை அந்தோ பரிதாபம்

தேசத்துக்கு உண்மையாய் பாடுபட்டு பின் போலி சுதந்திர வீரர்களால் மறைக்கபட்ட வீரர்கள் இவர்கள்


இன்று அந்த மாவீரன் சென்பகராமனுக்கு நினைவு நாள்

எதிரி பலமாகியிருக்கும் பொழுது அவனை வெல்ல பலமில்லாதபொழுது அவனிடம் கெஞ்சி கொண்டிருப்பதைவிட அந்த எதிரிக்கி எதிரி யாரோ அவனை நண்பனாக்கி எதிரியினை அடி என்பதுதான் சாணக்கிய நீதி

அந்த இந்திய ராஜதந்திரத்தைத்தான் செயல்படுத்தினார் பிள்ளை

தேசம் அந்த மாவீரனுக்கு அஞ்சலி செலுத்தியபடி இன்று மிக பலமான பாதுகாப்பை அவன் விரும்பியடி கொடுக்கும் இந்திய ராணுவத்தை கம்பீரமாக பெருமையாக பார்த்து கொண்டிருக்கின்றது

அந்த சென்பகரமன் இந்திய ராணுவ அடையாளத்தில் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பான், அந்த ராணுவத்தில் இருக்கும் ஒவ்வொரு வீரனுக்குள்ளும் அவன் ஏற்றிய தீ எரிந்து கொண்டே இருக்கும்

(இந்தியாவின் மோடி அரசு காங்கிரஸ் கால கள்ள பொய்களை களைந்து தேச உண்மையான வீரர்களை அடையாளபடுத்தும் காலமிது

அவ்வகையில் நேதாஜிக்கு அந்தமானில் சிலைவைத்தார்கள், ஆனால் இந்த முன்னோடி சென்பகராமனை ஏனோ மறந்துவிட்டார்கள்

விரைவில் திருவனந்தபுரத்தில் அந்த மாவீரனுக்கு மாபெரும் நினைவு சின்னம் அமைப்பார்கள் என தேசம் எதிர்பார்க்கின்றது

இந்திய கப்பல்படை கப்பல் பிரிவுக்கு அவன் பெயரை இட்டால் அது மிகசிறந்த அஞ்சலியாக அமையும், தமிழக பாஜகவினர் இதை மோடிக்கு எடுத்து சொன்னால் நல்லது)

ஜெய்ஹிந்த்…ஜெய்ஹிந்த்

அந்த மாவீரனின் முழக்கத்தை அவன் நினைவோடு “ஜெய்ஹிந்த்” என சுதந்திர இந்தியனாக சொல்லும் பொழுது ஒரு கம்பீரமும் அதே நேரம் மனம் கலங்கி கண்களும் மனமும் தழுதழுக்கின்றன