செயல் என்றால் மய்யல் அல்ல மய்யத்தீரே

திருவள்ளூர் பக்கம் கமல் பேசுவதாக ஏற்பாடாம், அதற்காக மய்யத்து மக்கள் பேனர் எல்லாம் வைத்து காத்திருந்திருக்கின்றார்கள்
ஆனால் பக்கத்து ஏரியா வந்த ஆண்டவர், இங்கு வாக்களித்தபடி வராமல் போய்விட்டார். இதனால் காத்திருந்த மய்யத்து மக்களுக்கு பேய் பிடித்துவிட்டது
அவரை போனில் அழைத்து காரணம் கேட்டிருக்கின்றார்கள், ஆண்டவர் என்ன சொன்னாரோ தெரியாது, மய்யமும் மண்ணாங்கட்டியும் என ஆண்டவர் பேனரை எல்லாம் கிழித்துவிட்டு மய்யம் ஒழிக, கமல் நாசமாய் போக என சொல்லிவிட்டு வீடு சென்றுவிட்டார்கள்
அப்படி என்ன கோபம் வந்திருக்கும்?
கமல் வரவில்லை என்பதை விட அதற்கான காரணத்தை தன் பாணியில் புரியாமல் சொல்லியிருக்கலாம், எரிச்சல் தலைகேறிய கூட்டம் ஆண்டவர் பேனரையே கிழித்து எறிந்திருக்கலாம்
அப்படி ஆண்டவர் என்ன சொல்லியிருப்பார்? இப்படி சொல்லியிருக்கலாம்
“வருவேன் என்றால் வரவேண்டும் என்பதல்ல, வரவில்லை என்றால் வரவேமாட்டேன் என்பதல்ல, நான் நாமல்ல, நாம் நானல்ல, மய்யம் பொய்யல்ல, செயல் என்றால் மய்யல் அல்ல மய்யத்தீரே”