செயல் தலைவர் முயல் தலைவர் ஆகிவிட்டார்
ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த மூவருக்கு தகுந்த பாடம் புகட்டவே ஆர்.கே.நகர் தேர்தல்: நிறைவு பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு
ஓஹோ, அப்படியானால் ஜெயலலிதாவின் தொகுதியினை திமுக கைபற்ற தேர்தல் நடக்கவில்லையா?
திமுகவிற்கு துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டுவோம் என்றல்லவா இவர் சொல்லியிருக்க வேண்டும்
திமுகவிற்கு துரோகம் செய்துவிட்டு சென்ற ராமசந்திரன் வழி வந்த ஜெயாவிற்கு துரோகம் செய்தவர்கள் இவருக்கு நண்பர்களாக அல்லவா இருக்க முடியும்? அரசியல் என்பது அதுதானே
ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்ட இவர் என்ன அதிமுக உறுப்பினரா?
ஏதோ ஜெயா என்பவர் திமுகவிற்கு நிறைய உழைத்தவர் போலவும் அவருக்கு துரோகம் செய்தவர்களை விட கூடாது என்பது போலவும் பேசிகொண்டிருக்கின்றார்.
இவர் திமுக எனும் கட்சிக்கு , செயல் தலைவர் என யாராவது எடுத்து சொன்னால் என்ன?
ஆக செயல் தலைவர் முயல் தலைவர் ஆகிவிட்டார்,
முயல் என்ன செய்தது? ஆமை ஜெயித்துவிடுமா என்ன? எனும் மமதையில் தூங்கியது
இவரும் அதைத்தான் செய்துகொண்டிருக்கின்றார்