செருப்பு வீச்சாம்
பழனிச்சாமி மேல் செருப்பு வீச்சாம், உடனே எதிர்கட்சிகளுக்கு கொண்டாட்டம்
இங்கு எந்த அரசியல்வாதி அடிபடவில்லை?
கலைஞர் மேல் கொலைமுயற்சி உண்டு, ஜெயா சட்டமன்றத்திலே அடிவாங்கினார்
ஆனானபட்ட மூப்பனாரும் , சிதம்பரமும் தாக்கபட்ட சம்பபங்கள் நடந்தன
செருப்பு எறிதலும், அழுகிய தக்காளிகளை எறிதலும் தமிழக கலாச்சாரங்கள்
அந்த கலாச்சார பெருமையினை பழனிசாமியும் பெற்றிருக்கின்றார்
டெல்லியில் ஒரு கூட்டத்தில் ப.சிதம்பரம் மேல் செருப்பு வீசபட்டபொழுது கண்டித்தவனெல்லாம் இப்பொழுது பழனிச்சாமி மேல் வீசபடும்பொழுது சிரித்துகொள்கின்றான்
என்ன இருந்தாலும் இது கண்டிக்கதக்கது..