சைனா கையினை பிசைந்து நிற்கின்றது
பசிபிக் கடலில் அமெரிக்கா நுழைந்தால் சும்மா விடமாட்டோம் என முதலில் சொன்னது சைனா
தென் சீன கடலுக்கு வந்தால் விடவே மாட்டோம் என்றதும் அதுவே
தைவான் விஷயத்தில் அமெரிக்கா தலையிட்டால் சும்மா விடமாட்டோம் என சவுடால் விட்டதும் அதுவே
ஏய் தைவானே ஒழுங்காக என்னுடன் இணையாவிட்டால் மாபெரும் போர் என மிரட்டியதும் அவர்களே
மிரட்டல் என்றால் கடுமையான மிரட்டல்
ஆனால் தைவான் எங்களின் கூட்டாளி, நிறைய ஆயுதங்களை வாங்குகின்றது ஆனால் பாவம் அவற்றை இயக்க தெரியவில்லை அதனால் அதனை இயக்க சொல்லி கொடுக்க வந்திருக்கின்றோம் என தைவானில் தன் மிகபெரிய போர்கப்பல் சகிதம் வந்து நிற்கின்றது அமெரிக்கா
சைனா கையினை பிசைந்து நிற்கின்றது, சத்தமே இல்லை
என் ஊருக்கு வாடா, என் தெருவுக்கு வாடா, என் வீட்டுக்கு வாடா என சவால்விடும் வடிவேலு காமெடி போல இருக்கின்றது சீன தைவானிய காட்சிகள்
உலகில் பெரும் நாடுகளின் அருகில் இருக்கும் சிறு தீவுகள் அரசியல் ஆபத்து நிறைந்தவை
கியூபா முதல் ஜப்பான் வரை சிறிய தீவுகளை வளைத்து அதில் இருந்து பெரும் வல்லரசுகளுக்கு தொல்லை கொடுப்பது ராணுவ மிரட்டலில் சகஜம்
அப்படி தைவானை சீனாவுக்கு எதிராக நிறுத்துகின்றது அமெரிக்கா
இலங்கை இந்தியா எனும் மாபெரும் நாட்டின் காலடியில் இருப்பதால்தான் இந்த பாடு பட்டுகொண்டிருக்கின்றது என்பதும் வேறு விஷயம்
தீவாக ஒரு நாடு அமைந்தாலும் வல்லரசுகள் பக்கம் மட்டும் அமைந்துவிடவே கூடாது