சைமன் மேல் ஏன் கோபம்?

சைமன் மேல் ஏன் கோபம் என்றாலோ அவர் ஏன் ஆபத்தானவர் என்றாலோ பதில் இதுதான்

கவனிக்க வேண்டியது சைமனை அல்ல அவன் பிடித்திருக்கும் பிரபாகரனையும் அவனின் சித்தாந்தையும்

புலிகள் ஒருநாளும் இந்தியாவினை நேசித்தவர்கள் அல்ல, சக போராளி குழுக்களுக்கு இந்தியா பயிற்சி அளித்ததையே அவர்களால் தாங்கமுடியவில்லை, அந்த கோபத்தை ஈழம் திரும்பியதும் சக குழுக்களை அழித்துகாட்டினார்கள். அதாவது இந்த குழுக்கள் இருந்தால் இந்தியா ஆதிக்கம் செலுத்தும், இவர்களை ஓழித்துவிட்டால் நாமே தனிகாட்டு ராஜா.

சிங்களனை மிரட்டும் இந்தியா, நாளை ஈழ அதிபராக போகும் தன்னையும் மிரட்டுவார்கள் எனும் அச்சம் பிரபாகரனுக்கு இருந்தது, வலுவான இந்தியாவாக இருக்கும் வரை தன் எண்ணம் ஈடேறாது என்பது அவருக்கு தெரியும். அதனால் இந்திய அமைதியினை குலைக்கும் நடவடிக்கைகளில் புலிகள் இறங்கினார்கள்.

1500 இந்திய வீரர்கள் புலிகளால் கொல்லபட்டனர், மறக்க கூடிய விஷயமா அது?

இந்திய பெரும் எதிரிகளான நகசலைட்டுகளுடன் அவர்களுக்கு தொடர்பு இருந்தது, அதில் தமிழக பிரிவினை தமிழ்க விடுதலை படை என்றே மாற்றி பயிற்சி கொடுத்தார்கள்.

1986லே குடமுருட்டி பாலத்தை தகர்த்து ராஜிவிற்கு குறி வைத்தார்கள், 5 நிமிடம் தாமதித்திருந்தால் அன்றே ராஜிவ் காலி, குண்டு வைத்தது தமிழக விடுதலை படையினர், அதாவது இந்தியரை வைத்தே இந்தியாவினை பிளக்கும் தந்திரம்.

அந்த தமிழர் விடுதலை படையின் தலைவன் தமிழரசனை தூண்டிவிட்டார்கள், மருதையாற்று தண்டவாளத்திற்கு குண்டு வைத்து மலைக்கோட்டை ரயில் கவிழ்து 35 பேர் செத்த கொடுமையும் இங்குதான் நடந்தது மறக்க முடியுமா?

உச்சமாக ராஜிவ் கொலையினை இந்திய தமிழ் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து நடத்தும் திட்டம்தான் புலிகளுக்கு இருந்தது, பின் மாற்றிகொண்டனர் ஆனாலும் நளினியும், பேரரிவாளனும் சிக்கி வாழ்க்கை தொலைத்தனர்,

புலிகளின் போராட்ட தத்துவம் எளிது, அதாவது தமிழ் தேசியம் பேசிகொண்டே அப்பாவி மக்களை கொல்லவேண்டும், பழி எதிர்தரப்பின் மீது விழவைக்க வேண்டும், விசாரணை வழக்கு என அலைக்கழிக்கப்டும் மக்களை இயக்கத்தில் சேர்த்து பழிவாங்க வைக்கவேண்டும், அதாவது மக்கள் பாதிக்கபட படத்தான் இயக்கம் வளரும்.

ஈழம் இப்படித்தான் அழிந்தது.

பிரபாகரனின் ஆரம்பகால வழக்கம் வங்கிகொள்ளை, தமிழரசன் எனும் தீவிரவாதி பொன்பரப்பி வங்கிகொள்ளையினை அடிகும்பொழுதுதான் மக்களால் அடித்தே கொல்லபட்டான்,

அதன் பின் லெனின் எனும் தீவிரவாதியினை உருவாக்கி அலையவிட்டனர் புலிகள், அவனும் கொல்லபட்டான். அதன் பின் மாறன் என்பவன் உருவாக்கபட்டான், இவன் வீரப்பன் காட்டில் அடைக்கலமாகி வீரப்பனை தமிழ்தேசியத்தில் இணைத்து பெரும் அழிவிற்கு திட்டமிட்டான்.

அதுவரை மான்கறி, குயில்கறி, கடத்தல் என ஜாலியாக இருந்த வீரப்பன் அதன் பின்முடித்தே தீரவேண்டியவன் ஆனான், முடித்துவிட்டார்கள். இப்படி தமிழகத்தை எப்படியாவது அமைதி குலைத்து பெரும் ரத்தகளறி மாநிலமாக்கி, அதன் இளைஞர்களை ஈழத்து ஸ்டைலில் பலிகொடுக்க துணிந்த இயக்கம்தான் புலிகள், அவர்களால் ராமேஸ்வர மீணவர்கள் பட்டபாடு கொஞ்சமல்ல, இன்று புலிகள் இல்லை, ராமேஸ்வர துப்பாக்கி சூடு இல்லை.

இந்த இந்திய எதிர்ப்பு புலிகளின் சித்தாத்தை தமிழரசன், கலியபெருமாள், லெனின், மாறன், கொல்லபட்ட நாம்தமிழர் முத்துகுமார் என வரும் வரிசையில்தான் சீமானும் வருகின்றார், அதனால்தான் அவரால் யாசின் மாலிக்கோடு உறவாட முடிகின்றது, சக தமிழர்களை வடுக வந்தேறி என சொல்லமுடிகின்றது, இவருக்கு முதலமைச்சர் ஆசை வெறு.

இந்த பழைய அபாயங்களை, குடமுருட்டி ஆற்று பாலம், மருதையாற்று பாலம், கொடைக்கானல் டவர் குண்டு வெடிப்பு என சிறிதும் பெரிதுமாக இவர்கள் நடத்தியது 80க்கு மேற்பட்ட குண்டு வெடிப்புகளை, மறைமுகமாக 70 பேர் கொல்லபட்ட நிகழ்வுகளை, ராஜிவ் கொலை என நடந்த கொடூரங்களை எல்லாம் நினைவு கூர்ந்தால், எவ்வளவு பெரும் அபாயம் தமிழகத்தில் நடைபெற இருந்தது என்பதும், அதிலிருந்து தெய்வாதீனமாக தமிழகம் தப்பியது என்பதும், ராஜிவ் உயிர்கொடுத்து தமிழகத்தை காத்தார் என்பதும் தெரியும்

எதற்காக புலிகளை விமர்சிக்கின்றோம் என்பதும் புரியும், அவர்கள் எவ்வளவு பெரிய இந்திய எதிரிகள் என்பதும் புரியும்.

இந்த கொடூரங்களை எல்லாம் நினைத்து பார்த்தால் வீரப்பனை ஏன் அங்கிள் கொண்டாடினார் என்பது தெரிய வரும், சீமான் சொல்லிகொண்டிருப்பது எவ்வளவு பெரும் ஆபத்தின் விதை என்பதும் தெரியவரும்.

அப்படி தெரியவந்தால் நிச்சயம் எம்மை எல்லாம் நீங்கள் குறை கூறமாட்டீர்கள், மாறாக சீமானை வேறுமாதிரி பார்ப்பீர்கள். உண்மையான இந்தியனாக இருந்தால் நிச்சயம் சிந்திப்பீர்கள். அப்பொழுது பிரபாகரனின் சுய உருவம் உங்கள் கண்களில் தோன்றும்.

சில வெறுப்புக்களும், அரசு மீதான கோபமும், சமூக அமைப்பும் இளைஞர்களை மிக விரைவாக தீவிரவாதத்தின் பக்கம் இழுத்துவிடும்,

கட்சிகளின் அரசியலும், சமூக ஏற்றதாழ்வும் இன்னும் பல காரணங்களும் இளைய தலைமுறையினை வெகு வேகமாக தீவிரவாதம் போன்ற அறிவுகெட்ட சிந்தனையற்ற கடும் போக்குக்கு எளிதில் இழுத்து செல்லும்

அதிலிருந்து நமது இளைஞர்களை காத்தல் வேண்டும், உண்மையினை உணர வைக்க வேண்டும் அந்த சமூக பொறுப்பு இருக்கின்றது.

அந்த பொறுப்பு இல்லாதவர்களுக்கு என்ன அக்கறை இருக்க முடியும்?