சொதப்பல்
சிலப்பதிகாரத்தின் வழக்குரை காதையில் அந்த பாடல் வரும்
“சான்றோரும் உண்டு கொல்?” என தொடங்கும் அப்பாடல் கண்ணகி நீதிகேட்டு வரும்பொழுது வரும்
“சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்?
தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்?
வை வாளில் தப்பிய மன்னவன் கூடலில்
தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்?’
என்று இவை சொல்லி அழுவாள் கணவன்-தன்”
அதாவது இங்கு சான்றோர்கள் உண்டோ? தெய்வமும் உண்டோ என அவள் கேட்கும் கேள்வி அது
கொல் என்பது தவறு கொல்? என வினவுவது சரி என்கின்றது இலக்கணம்
கொலு போன்ற வார்த்தையின் பாடலது , சான்றோர்கள் இங்கு கொலுவீற்றிருக்கின்றார்களா என அவையினை கண்ணகி கேட்கும் காட்சி அது
மிக உருக்கமான காட்சி, மிக நயமான சொல்லாடல்
அந்த அற்புத சிலப்பதிகாரத்தை
இங்கோ “சான்றோரும் உண்டு கொள்” என மதுரை கோனார் கடைக்கு சான்றோர்களை சாப்பிட அழைக்கின்றார் கலைஞரின் மகன்
எப்படிபட்ட இலக்கியவாதி கலைஞர், மபொசியின் சிலம்பு பற்றிய கேள்விகளுக்கு எப்படி எல்லாம் பதிலளித்தார்?
பூம்புகார் என அவர் எழுதிய சிலப்பதிகார வசனம்தான் எப்படிபட்டது
இவரோ கோனார் கடைக்கு உண்டு கொள் என அழைக்கின்றார்
அதை சொல்லும்பொழுது குதி வேறு, அவரின் கையினை பாருங்கள், உணர்ச்சி கொந்தளிக்கின்றதாம், மண்ணாங்கட்டி
இந்த மாபெரும் சிலப்பதிகார படுகொலையினை உணர்ச்சியாக பேசுகின்றாராம் கர்மம்
அது போக நரேந்திரமோடி நீதி தவறாத ஆட்சி வேறு நடத்துகின்றாராம்
சொதப்பல்களில் எல்லாம் பெரும் சொதப்பல்
“சான்றோர் உண்டு கொள்”, எந்த கடையில் உண்ண வேண்டும் என்றும் சொல்லி தொலையவில்லை
மற்றொரு சொதப்பல் கண்ணகி மதுரையில் பிறந்தாளாம், எப்படி இருகின்றது திமுகவின் புதிய சிலப்பதிகாரம்?