சோபியா விவகாரம்
பொதுவாக விமான பயணத்தில் யாரும் இடைஞ்சல் செய்தால், சர்ச்சைகள் செய்தால் அவர்களை விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைப்பார்கள்
விமான விதிமுறைகள் அதற்கு இடமளிக்கின்றன, காரணம் மற்ற பயணங்களை போல் அல்லாமல் விமான பயணம் சவால் மிக்கது, எல்லோரின் ஒத்துழைப்பும் அவசியம் இல்லாவிட்டால் ஏற்படும் விபரீதம் ஏராளம்
யாராவது பயணி குடித்துவிட்டு கலாட்டா செய்தல், பணிப்பெண்ணிடம் வம்பிழுத்தல், அடுத்திருப்பவனை இம்சை செய்தல் இல்லை ஏதும் மிரட்டல் என்றால் உடனே அவனை பிடித்து விமான நிலைய அதிகாரியிடம் ஒப்படைப்பார்கள்
சோபியா விவகாரத்திலும் இதுதான் நடந்திருக்க வேண்டும்
ஆனால் தமிழிசையினை விட்டால் தன் குரலை யாரும் கேட்கமாட்டார்கள் , இதை விட்டால் வாய்ப்பில்லை என்ற சோபியாவின் கணக்கும்
தனக்கொரு வாய்ப்பு வராதா? வந்தால் தன்னை ஒருமாதிரி கிண்டலடிக்கும் எல்லோர் மேலான கோபத்தையும் காட்ட முடியாதா? எல்லோருக்கும் அது ஒரு பாடமாக இருக்கமுடியாதா என்ற தமிழிசையின் கணக்கும் ஒரே மாதிரி ஆனதுதான் சர்ச்சைக்கு காரணம்
தவறு இருபக்கமும் உள்ளது, தமிழிசையிடமும் உள்ளது.
இதுவே கலைஞரிடம் ஒருவர் இப்படி விமானத்தில் , திமுக ஒழிக என சொல்லி இருந்தால் என்ன சொல்லி இருப்பார் தெரியுமா?
ஏன் தனியாக கத்துகின்றாய், அதோ அந்த பைலட் அறையில் இருக்கும் மைக்கினை வாங்கி தருகின்றேன் சத்தமாக கத்து
இப்படிபட்ட பெண்ணுரிமை குரல்கள் வரவேண்டும் என்றுதான், பெரியாரும் அண்ணாவும் நானும் விரும்பினோம், அது வந்தே விட்டதில் மகிழ்ச்சி
ஆனாலும் திமுக ஒழிக என விரும்புகின்றாய் அல்லவா? அதுதான் வருத்தம். அது ஒழிந்துவிட்டால் அடுத்த தலைமுறை பெண்கள் இப்படி உரிமையோடு கத்தமுடியும் என கருதுகின்றாயா? நிச்சயம் முடியாது”
இதற்கு மேலும் வம்பிழுத்தவள் அழாமல் இருக்க முடியுமா?
என்ன இருந்தாலும், ஆயிரம் சர்ச்சை இருந்தாலும் பெரியாரும், அண்ணாவும் அவர்களிடம் கலைஞர் பெற்ற பயிற்சியும் பல இடங்களுக்கு முன் உதாரமானவை
காரணம் அவர்கள் அடிதாங்கி தாங்கி வளர்ந்தார்கள், சிந்திக்க சொல்லி சொல்லி அடிவாங்கினார்கள்
திமுக இன்றும் பலமாக இருப்பது அதில்தான், கட்சி வளர்ப்பது என்பது அப்படித்தான்
மசூதி இடித்த அகம்பாவத்தில் வளர்ந்த கட்சியிடம் இப்படிபட்ட தன்மையினை எதிர்பார்க்க முடியாது
சோபனா விமானத்தில் சத்தமிட்டது தவறு, அதை தமிழிசை பெரும் விஷயமாக்கியது அதைவிட தவறு
இதற்காக வழக்கு பதிந்து பாஸ்போர்ட்டை முடக்கியது எல்லாம் பெரும் தவறு, சந்தேகமில்லை
ஆனால் இதில் அரசியல் செய்வது எல்லாவற்றையும் விட தவறான முன்னுதாரணம்
தமிழிசை அக்கா கொஞ்சம் நிதானித்து வழக்கினை முடித்தால் அவருக்கும் அவர் கட்சிக்கும் நல்லது
விட்டுகொடுக்காமல் அரசியல் இல்லை
இப்படி தமிழிசை அடம்பிடித்தால் தமிழகத்திற்கு இன்னும் நல்லது, ஆம் பாஜக இங்கு வரவே வராது