சோழனுக்கு சிலைகண்ட கலைஞருக்கு நாளை பிறந்தநாள்
கலைஞருக்கு பூம்புகார், பாஞ்சாலங்குறிச்சி, வள்ளுவன் அவதரித்த வள்ளுவ நாடு கொண்ட கன்னியாகுமரி போலவே தஞ்சை கோவிலின் மேலும், ராஜ ராஜ சோழன் மீதும் தனி கவனம் இருந்தது, தேடல் இருந்தது
பூம்புகார் நினைவு சின்னங்கள் அவராலே அந்த கடற்கரையில் நிறுவபட்டது
தஞ்சை பற்றியும் அந்த ஆலயம் பற்றியும் சிற்பம் பற்றியும் அவர் எழுதியது ஏராளம், அவரின் உளியின் ஓசை படம் கூட அதை சுற்றித்தான் வரும்
அப்படிபட்ட கலைஞருக்கு ராஜராஜ சோழனுக்கு சிலைஎடுக்கும் ஆசை வந்தது, அந்த கற்காவியத்தை கட்டிய மன்னனுக்கு கோவிலுக்குள்ளே சிலை வைக்க ஆசை கொண்டார்
கோவிலில் இன்றும் மிக சிறிய சோழனின் கற்சிலை உண்டு, இந்த ஐம்பொன் சிலையினை அப்பொழுதே தேடினார்கள் ஆனால் ஒரு துப்புமில்லை
கலைஞர் ஆலயத்தின் உள்ளே சிலை நிறுவ விரும்பினார், ஆனால் மத்திய அரசு அது தொல்பொருள் கட்டுப்பாட்டு இடம் அது இது என அனுமதி மறுத்தது
முடிந்தமட்டும் பார்த்துவிட்டு முடியாமல் ஆலயத்தின் வெளியே சிலை வைத்தார்
சும்மா வைக்கவில்லை
மத்திய அரசு அனுமதி மறுத்த காரணத்தால் சோழனின் சிலை ஆலயத்திற்கு வெளியே நிறுவபடுகின்றது என கல்லில் எழுதியும் வைத்துவிட்டார்
அச்சிலை இன்றும் அங்கு உண்டு
இப்பொழுது ஐம்பொன் சிலைகள் மீண்டு வந்திருக்கின்றன, கல்கி எழுத்தில் வந்த் பழுவேட்டரையரை போல தமிழகம் பொன் மாணிக்கவேல் அவர்களை நன்றியோடு பார்கின்றது
சோழனுக்கு சிலைகண்ட கலைஞருக்கு நாளை பிறந்தநாள்
தமிழகத்து அரசனின் சிலை வந்தது போல, காவேரி வந்தது போல , சோழநாடு கொடுத்த கலைஞரும் அதே காவேரி வெள்ளம் போன்ற தமிழோடு திரும்ப வரட்டும்