சோழனை கண்ட மஹாவலி செல்வன்…
மணிசார் சொன்ன சோழர் கதையான பொன்னி படத்தை குடும்பத்துடன் சென்று பார்த்திருக்கின்றார் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே
சோழர் குடும்பம் போல ராஜபக்சே குடும்பமும் பெரிது, ஒரு வகையில் சோழகுடும்ப சண்டையெல்லாம் அவர் சொந்த வரலாற்றிலும் உண்டு, பாண்டிய தரப்பில் புலிதலைவன் பிரபாகரனை வைத்தால் விஷயம் சரியாக பொருந்தும் என்பதுதான் சுவாரஸ்யம்
படம் லண்டன்வாழ் இலங்கை தொழிலதிபரும் ராஜபக்சே கூட்டாளியுமான சுபாஷ்கரன் தயாரிப்பு என்பதால் ராஜபக்சே செல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம்
படம் பார்த்து வெளிவந்த அவர் “ப்டம் ரொம்ப நல்லாருக்கு.. மெர்சல் ஆய்ட்டேன்” என சொல்லி மகிழ்ந்திருக்கின்றார்
சோழர்கள் இலங்கை காட்டில் தலைமறைவாய் திரிந்தார்கள், நடுகடலில் சாக கிடந்தார்கள் என்பதெல்லாம் ஒரு சிங்களனாக அவரை மிகவும் மகிழவைத்த காட்சியாய் இருக்கும்
இன்னும் கேட்டால் என்ன சொல்வார் தெரியுமா?
ராஜராஜசோழனே இலங்கையின் சிம்மாசனம் சிங்களவர்க்கு என சொல்லியிருப்பதை மணிசார் உறுதிபடுத்தியிருக்கின்றார் அதனால் இது சிங்கள பவுத்தநாடு என சிரித்தபடி சொல்வார்
மகிந்த பொன்னியின் செல்வன் படம் பார்த்த கதை இன்னும் தமிழக சீமானுக்கு தெரியாது போலிருக்கின்றது, தெரிந்தபின் “என்னோடு வாளுக்கு வாள் மோத வருவாயாடா ராஜபக்சே” என சீறுவார் என்பது மட்டும் நிச்சயம்
சரி, படம் ஏன் ராஜபச்கேவுக்கு பிடித்தது?
தமிழர்கள் துன்பத்தில் அவருக்கு எப்பொழுதுமே ஒரு சந்தோஷம் உண்டு என்பது ஒன்றும் ரகசியமல்ல, படம் பார்த்து தமிழர்கள் அதுவும் இந்து தமிழர்கள் கதறும் பொழுது ஒரு சிங்கள பவுத்தராக அவர் மகிழாவிட்டால் எப்படி?

பின்ன படம் நல்லா தான் இருக்கும்… இருவரும் ஒரே இனம்… அப்படி தான் சொல்வார்..