சோ கொஞ்சநாள் மிடாஸ் நிர்வாகத்தில் இருந்தது தவறாம்

சோ கொஞ்சநாள் மிடாஸ் நிர்வாகத்தில் இருந்தது தவறாம் . கொள்கையாளன் ஊழல்வாதி ஜெயாவின் ஆலையில் நிர்வாகியாக இருந்திருக கூடாதாம், பகுத்தறிவு கும்பல்கள் ஒரே அழிச்சாட்டியம்

ஈரோட்டு ராம்சாமி என்றொரு நாத்திகர் இருந்தார், கடவுளையோ கோவிலையோ அவர் நம்பவில்லை ஆனால் கொஞ்சநாள் ஈரோட்டு கோவிலில் நிர்வாகியாக இருந்தார்

நீர்தான் கடவுள் நம்பிக்கையற்றவராயிற்றே, எதற்காக இங்கே தர்மகர்த்தா என இருக்கின்றீர் என்ற கேள்வி எழும்பியது , ராம்சாமி இப்படி சொன்னார்

“நம்ம நம்பிக்கை முக்கியமில்லீங்க. நம்மை நம்பி கொடுத்த வேலைய ஒழுங்கா செய்யணுமுங்க , நான் இங்க ஒரு கணக்காளர், வேலைக்காரன், அவ்வளவுதாமுங்க”

ஆக ஈரோட்டு ராம்சாமி செய்தால் அது பகுத்தறிவு புரட்சி, சோ ராமசாமி செய்தால் அது தவறாம்