ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது: பிரதமர் நரேந்திர மோடி

ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது: பிரதமர் நரேந்திர மோடி

ஆமாம், பாஜக மத்தியில் ஆளும்பொழுது வன்முறைக்கு இடம் அளிக்க கூடாது

மற்ற கட்சிகள் ஆளும்பொழுது மசூதி இடிக்கலாம், மும்பையில் கொளுத்தலாம், குஜராத்தில் வெட்டலாம்

ஆனால் பாஜக ஆளும்பொழுது மட்டும் வன்முறைக்கு இடமளிக்கவே கூடாது


அடேய் பிஜேபிஸ்

மோடி பற்றி ஏதும் சொன்னால் “நமஸ்தே ஜி”, “தேங்க்ஸ் ஜி”, “பாரத் ஜி” “சூப்பர் ஜி” என ஜிலேபி விற்றுகொண்டிருந்தால் ஒரு கவுன்சிலர் இடம் கூட வெல்ல மாட்டீர்கள்

ஏன் வடமொழியில்தான் பிஜேபி வளர்ப்பீர்களோ? தமிழில் வளர்த்தால் வளராதா?

மாநில தலைவர் பெயர் மட்டும் தமிழிசை என இருந்தால் போதாது, கொஞ்சமேனும் தமிழர் என உணருங்கள்

இல்லாவிட்டால் கடைசி வரை இதே நிலைதான்