ஜாலியன் வாலாபாக் படுகொலை வருத்தம்
பிரிட்டிசார் பெரும்பாலும் உயர்ந்த மனநிலையில் இருந்தவர்கள் இருப்பவர்கள்
தாங்கள் உயர்ந்த நாகரீகம் கொண்டவர்கள் எது செய்தாலும் சட்டபடிதான் செய்வோம் அதன் விளைவுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்ற இருமாப்பில் இருப்பார்கள்
இதனால் கேட்க வேண்டிய பல மன்னிப்புகளை கேட்கவே இல்லை
அதில் முக்கியமானது ஜாலியன் வாலாபாக் படுகொலை
அது நடந்த காலத்தில் உலகத்தின் மிகபெரும் வல்லரசு பிரிட்டன் , அவர்களுக்கு அடுத்து பிரான்ஸ் .
ஸ்பெயினும் ஜெர்மனும் 3ம் இடத்திற்கு மோதிகொண்டிருந்தது
அமெரிக்கா அப்பொழுது இப்போதைய கனடா நியூசிலாந்து போல அமைதியான நாடு
ரஷ்யா ஐரோப்பாவின் பின் தங்கிய நாடு, சீனா மிக மிக பின் தங்கிய நோயாளி நாடு
பிரிட்டனுக்கு சமமான வல்லமை கொண்டது அன்றைய ஆட்டோமன் துருக்கி இஸ்லாமிய சாம்ராஜ்யம் எனினும் அது உலக அரசியலில் இல்லை
ஜாலியன் வாலாபாக் படுகொலை உலகை அலறவைத்தாலும் பிரிட்டனை கேள்வி கேட்பார் இல்லை, அது தவறு என பிரிட்டனுக்கு தெரிந்தாலும் அதன் கவுரவம் அதை தடுத்தது
கேவலம் இந்தியரிடம் மாபெரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் மன்னிப்பு கேட்பதா? என்ற மகோன்னத மனப்பான்மை இருந்தது
பிரிட்டிஷ் அரச குடும்பம் இதுபற்றி வாய்திறக்காது, இந்தியா வந்த சார்லஸ் கூட அதை பற்றி பேசியதில்லை, ஆம் அங்கு அஞ்சலி செலுத்தினாலும் மன்னிப்பு பற்றி பேசமாட்டார்
வரலாற்றில் முதல் முறையாக பிரிட்டன் பிரதமர் தெரசே மே பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்த ஜாலியன் வாலாபாக்கின் 100ம் ஆண்டு நினைவு நாளுக்கு வருத்தம் தெரிவித்திருக்கின்றார்
நன்றாக கவனியுங்கள் மன்னிப்பு அல்ல வருத்தம்
அதாவது தங்கள் நாடு செய்த கொலைக்கு மன்னிப்பு கேட்டால் எப்படி எனும் அதே கவுரவ சிக்கலுடன் வருத்தம் தெரிவிக்கின்றாராம்
வருத்தம் யாரும் யாருக்கும் தெரிவிக்கலாம்
ஆக இன்னும் மன்னிப்பு கேட்காமல் வருத்தம் தெரிவிக்கும் அளவுக்கு வெள்ளை இனவெறியும் பிரிட்டிஷாரின் மகோன்னத உயர்ந்த கவுரவ வெறியும் அப்படியே இருக்கின்றது