ஜூன்மாதம் இறுதி விசாரணை

ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க போவது யார் , ஜூன்மாதம் இறுதி விசாரணை : செய்தி

அம்மணியின் சட்டவிரோத சொத்துகுவிப்புக்கும் முறையற்ற வகையில் சேர்த்தற்கும் அந்த போயஸ் கார்டன் வீட்டின் ஒரு பகுதி தவிர இதர சொத்துக்கள் எல்லாம் அரசுக்கே செல்லவேண்டும்

ஐதரபாத் திராட்சை தோட்டமும் போயஸ் கார்டனின் ஒரு பகுதியுமே அவர் அரசியலுக்கு வரும் முன் இருந்த சொத்து

அதன் பின்பு குவித்ததெல்லாம் முறையான வருமானம் அல்லவே அல்ல..

பல நாடுகளில் அரசியல் கொள்ளையர் முதல் பல கொள்ளையரின் சொத்து நாட்டுக்குத்தான் வந்திருக்கின்றது

இது நல்ல நாடு என்றால் ஜெயாவின் சொத்துக்கள் அரசுக்கே திரும்பட்டும், அதுதான் சரி

ஜெயா உயில் ஏதும் எழுதாதாலும், இன்னும் பல வகையான சட்ட வசதிகளாலும் அச்சொத்து நாட்டுடமைத்தான் ஆக வேண்டும்