கெஜ்ரிவாலும் ஆளுநரும் மோதிகொண்ட விவகாரத்தில் நாடே அதிரும்படி தீர்ப்பு

 

டெல்லியில் ஆளுநரின் அதிகார‌ எல்லை குறித்து ஜெஜ்ரிவாலும் ஆளுநரும் மோதிகொண்ட விவகாரத்தில் நாடே அதிரும்படி தீர்ப்பு வந்திருக்கின்றது

அந்த தீர்ப்பில் ஒன்றும் ஆச்சரியமில்லை, வெள்ளையன் காலத்தில் கவர்னர, ஜெனரல் என நியமிக்கபட்டவர்களுக்கு அதிகாரம் இருந்திருக்கலாம்

மக்களாட்சி மலந்தபின் ஜனநாயக இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கபட்டவருக்கே அதிகாரம் அதிகம்

ஜனாதிபதி பிரதமரை விட அதிகமாக‌ ஆளும் அதிகாரம் கொண்டவர் அல்ல என்பது போல முதல்வரை விட ஆளுநர் ஆளும் அதிகாரம் கொண்டவர் அல்ல என்பதுதான் இங்கு சட்டம்

இந்த தீர்ப்பினை புதுவை நாராயணசாமி போன்ற ஆளுநரால் பாதிக்கபட்டவர்கள் எல்லாம் குட்டிகரணம் அடித்து வரவேற்றுகொண்டிருக்கும்பொழுது பழனிச்சாமி மட்டும் என்ன பேசலாம்? என டெல்லியிடமே ஆலோசனை பெற்றுகொண்டிருக்கின்றார்

இது கெஜ்ரிவாலின் வெற்றி, நாட்டுக்கே வழிகாட்டுகின்றார் அவர் என்றெல்லாம் பலர் கிளம்புகின்றார்கள்

இச்சிக்கல் 1967ல் இந்தியாவில் வந்தது, முதலில் சந்தித்த கட்சி திமுக‌

ஆம் இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத மாநில கட்சியாக ஆட்சியினை முதலில் பிடித்த திமுகவே அச்சோதனையினை சந்தித்தது

கலைஞர் முதல்வரான காலத்தில் மாநிலம் மத்திய அரசால் குறிப்பாக ஆளுநரால் சந்திக்கும் சிக்கலுக்கு தீர்வு என அறிக்கை கொடுக்க நீதிபதி ராஜமன்னார் என்பவரை கொண்டு கமிஷன் அமைத்தார்ர்

அந்த கமிஷன் மத்திய அரசு மாநில அரசுக்கிடையில் கவுன்சில் வேண்டும், திட்ட கமிஷன் தனியாக இயங்க வேண்டும், வரிகள் வசூலிப்பதில் சீர்திருத்தம் வேண்டும்
ஆளுநர் தேவையில்லை, மாநில அரசை மிரட்டும் 356ம் பிரிவு ரத்து செய்யபடவேண்டும் என பல பரிந்துரைகளை கொடுத்தது

ஆனால் ஏனோ கலைஞர் அதில் வேகம் காட்டவில்லை

மாறாக பாருக் அப்துல்லா, ஜோதிபாசு, ஹெக்டே, பாதல் போன்றவர்கள் அந்த மாநில சுயாட்சி குரலை போர்குரலாக்கி சில வெற்றியும் பெற்றார்கள், அதனை தொடங்கி வைத்தது திமுக‌

இந்த தீர்ப்பு அன்றே கலைஞர் தொடங்கி வைத்த போர்முரசின் எதிரொலி என்பதை விட சொல்ல ஒன்றுமில்லை

நிச்சயம் தொடங்கி வைத்தவர் அவர்தான். ஆனால் பின்னாளில் ஏன் ராஜமன்னார் பரிந்துரைகளை அவர் முதல்வரானபொழுது பரீசிலிக்கவில்லை என்பது பலருக்கு எழும் கேள்வி

அந்த ராமசந்திரன் பிரிந்து சென்று தலைவலி ஆகாமல் இருந்திருந்தால் கலைஞர் அதே போர்குணத்துடன் இருந்திருப்பார், அந்த பரீசிலனைகளுக்கும் முடிவு வந்திருக்கும்

ராமசந்திரனை சமாளிக்க உள்ளூர் அரசியலில் இறங்கியபின் டெல்லி விஷயங்களில் கொஞ்சம் ஒதுங்கினார் கலைஞர், பல எதிரிகளை உருவாக்க அவர் விரும்பவில்லை. அரசியல் அப்படித்தான்

எனினும் ஆளுநருக்கு மணிகட்டும் இந்த நேரத்தில் கலைஞரும் அவரின் ராஜமன்னார் கமிஷனும் கண்ணுக்குள் வந்து போகின்றன‌


அதிமுகவின் 99% சதவீத தொண்டர்கள் சசிகலாவின் உத்தரவிற்காக காத்திருக்கின்றார்கள் : திருநாவுக்கரசர்

இந்த நபர் தமிழக காங்கிரஸ் தலைவரா? இல்லை தினகரன் அணியின் வட்ட செயலாளரா?

அந்த கட்சி பற்றி பேச, தமிழக காங்கிரஸ் தலைவருக்கு என்ன அவசியம் வந்தது? இவரெல்லாம் தலைவராக இருந்து 4 வோட்டு வருமா?

இது பற்றி சொன்னால் உனக்கு அரசரின் ஆற்றல் தெரியுமா? ராஜதந்திரம் தெரியுமா என சிலர் வருவார்கள்

இந்த நாடோடி தெருநாவுக்கரசர் இருக்கும் வரை தமிழக காங்கிரஸ் உருப்படாது..