ஜெயமோகன் இலக்கிய வேர்
ஜெயமோகன் மிக சிறந்த எழுத்தாளர் என்பதெல்லாம் இல்லை, அவரின் இலக்கிய வேர் மலையாளத்தில்தான் உண்டு
மலையாளிகளின் இலக்கிய படைப்புகள் பிரமாதமானவை, அவைகளில் சில படமாக வந்து வெற்றி அடையும், நம் தமிழ்நாட்டில் அவை டப் செய்யபட்டு நம் ஹீரோக்களும் ஹிட் கொடுப்பார்கள்
செம்மீன் முதல் பாபநாசம் வரை நிறைய உண்டு
அந்த மலையாள இலக்கியங்களை, மலையாளம் அறிந்தவர் என்ற முறையில் ஆசான் ஆழபடிப்பார். பின் அதை தமிழுக்கு ஏற்றவாறு கொஞ்சம் வடிவமைப்பார்
தனக்கே உரித்தான சில சொற்களை புகுத்தி புதுமை செய்வார் அவரின் நாவல் ரெடி
அவரின் பெரும்பான்மையான கதைகள் மலையாள தழுவலே
திராவிட கட்சிகள் சோவியத்தின் கம்யூனிச கோட்ப்பாட்டினை ரகசியமாக உருவி அதில் மாற்றம் செய்து கொள்கை ஆக்கியது போன்றது ஆசானின் இலக்கிய உலகம்
அன்னார் ஏன் அடிக்கடி சர்ச்சையில் சிக்குகின்றார் என்றால் விஷயம் எளிது
அன்னாருக்கு உள்ளூர ஒரு பயமும் எரிச்சலும் அதிகம், நகைச்சுவை என்பது மருந்துக்கும் கிடையாது
ஒருவிதமான இறுக்கமான உலகம் அவருடையது, பா.ரஞ்சித் போன்ற சீரியசான மனிதர் அவர்
நகைச்சுவை உணர்வில்லா எந்த எழுத்தாளனும் கலைஞனும் உப்பில்லா பண்டம் போன்றவன் என்பது அவருக்கு தெரியவில்லை
“நயம்பட உரை” எனும் வாக்கியமே அவர் அகராதியில் இல்லை
நகைச்சுவை உணர்வு என்.எஸ் கிருஷ்ணனுக்கு போல் கலைஞருக்கு போல் ரத்தத்திலே வரவேண்டும், இடையில் புகுத்த முடியாது
ஆசான் ஜெயமோகன் மேல் எல்லோரும் புளிச்சமாவினை வீசி அடித்துகொண்டிருப்பது அதனால்தான்
மிக சீரியசான , சிரிக்க தெரியாத மனிதர்களுக்கு எல்லாம் சமூகம் சீரியசாக அடி கொடுக்கும்
ஆசானுக்கும் அதுதான் விழுந்து கொண்டிருக்கின்றது, ஆசானும் வழக்கம் போலவே சீரியசாக அழுது கொண்டிருக்கின்றார்