ஜெயலலிதாவின் வாழ்க்கையினை பற்றி வரும் படங்களில் ரம்யா கிருஷ்ணின் குயின் படமும் ஒன்று
ஜெயலலிதாவின் வாழ்க்கையினை பற்றி வரும் படங்களில் ரம்யா கிருஷ்ணின் குயின் படமும் ஒன்று
நிச்சயம் ரம்யா கிருஷ்ணன் மிக சிறந்த நடிகை, அதுவும் பொறுப்பு மிக்க கனமான வேடங்களை தன் கண் ஒன்றினாலே கடந்து செல்லும் அசாத்திய நடிகை
நிச்சயம் ரம்யா கிருஷ்ணனின் திறமை இன்னொரு நடிகைக்கு சாத்தியமில்லை 1985ல் இருந்து 35 வருடமாக களத்தில் இருப்பதெல்லாம் பெரும் விஷயம்
அந்த கண்களில் எல்லா உணர்ச்சியினையும் அவரால் கொண்டுவரமுடிகின்றது, தமிழக நடிகைகளில் யாருக்கும் இல்லா சிறப்பு அதுதான், அம்மணியின் அடுத்த நல்ல விஷயம் உடல் எடையினை அப்படியே பராமரிக்கின்றார் நீரில் இட்ட நெய்போல மெலிய உடலை பராமரிப்பது என்பது மகா சிரமம்
அப்படிபட்ட ரம்யா கிருஷ்ணன் ஸ்ரீரங்கத்துக்காரர்
ஸ்ரீரங்கம் வாரிசான் ஜெயாவின் கதைக்கு இன்னொரு ஸ்ரீரங்கத்து அம்மணி மிக சரியாக பொருந்துகின்றார்
எல்லாம் சரி, படத்தின் தலைப்புதான் சிக்கல்
ஆம், முன்பு பூலான் தேவியின் கதை படமாக “பண்டிட் குயின்” என வந்து சக்கை போடு போட்டது, இப்பொழுது “குயின்” என ஜெயாவின் கதை வருகின்றது
கருணாநிதி போன்றோர் இருந்தால் இந்நேரம் சம்பல் கொள்ளைக்காரிக்கும் தமிழக கொள்ளைக்காரிக்கும் ஒரே பட தலைப்பு என்பதில் என்ன ஆச்சரியம்? அப்படி இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம் என சீண்டுவார்கள்
நிச்சயம் அதிமுகவினர் இந்த தலைப்புக்கு போராட வேண்டும், பண்டிட் குயின் சாயல் தலைப்பில் எம் தலைவி கொள்ளைகாரியா என சீற வேண்டும்
ஆனால் அவர்கள் இதெல்லாம் தெரியாமல் இருக்கின்றார்களா? இல்லை தெரிந்து “ஆமாம் நம் தலைவி அப்படித்தானே” என மவுனமாக ஒப்புகொள்கின்றார்களா என்பதுதான் தெரியவில்லை

