ஜெயாவின் நைட்டியா பிரச்சினை?
ஜெ., சிகிச்சையின் போது நைட்டி அணிந்திருந்ததால் வீடியோவை வெளியிடவில்லை: தினகரன்
நேற்றுதான் சித்தி சசிகலாவே ஜெயலலிதாவினை பார்க்கவில்லை என்றார், இன்று ஜெயலலிதா நைட்டி அணிந்திருந்தார் அதனால் காட்டவில்லை என்கின்றார்
மிஸ்டர் தினகரன் , ஆனானபட்ட ராமசந்திரனையே தொப்பியும், பல்செட்டும் இல்லாமல் அமெரிக்காவின் புரூக்ளின் ஆஸ்பத்திரியில் இருந்து படமெடுத்து ஊரெல்லாம் காட்டிய கட்சி அது
ஜெயாவின் நைட்டியா பிரச்சினை?
அரசு மருத்துவமனையில் ஜெயலலிதாவை அனுமதிக்காதது ஏன்?’ – சீமான் கேள்வி
நாளைக்கே தலைவலி என்றால் அரசு மருத்துவமனைக்கு போக இவர் தயாரா?
முன்பு ராமசந்திரா மருத்துவமனையில் ஜெயா சிகிச்சை பெற்ற பொழுது இந்த கேள்வியினை கேட்டிருந்தால் என்ன?
மிஸ்டர் சைமன், கடந்த ஒருவருடமாக பிரபாகரனின் பங்கரிலா ஒளிந்திருந்தீர்?
காவி மயமாக்குவதில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்து பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துக: கி.வீரமணி
இவர் பெரியார் கொள்கையினை வளர்க்க முடியாமல்தானே சொத்து மதிப்புகளை வளர்த்துகொண்டிருக்கின்றார்
அப்படி பொருளாதாரத்தை வளர்க்க முடியாத அரசு, காவியினையாவது வளர்த்துவிட முடியுமா என பார்க்கின்றது
இருவருமே அவர்களுக்கு எது வராதோ அதனை விட்டுவிட்டு, எது வருமோ அதனை வளர்க்கின்றார்கள்
இதில் வீரமணி அவர்களுக்கு ஆலோசனை சொல்கின்றாராம்