ஜெயா சொத்து.. ஓபிஎஸ் குமுறல்
அண்ணாமலை பல்கலைகழகம் இன்னும் சில விவகாரங்களில் குழப்பம் வந்தவுடன் அரசு ஓடி சென்று கையகபடுத்தியது, எம்ஏஎம் செட்டியார் சொத்து விவகாரத்தில் கூட அரசின் கரங்கள் உண்டு.
குழப்பமான சொத்துக்களை அரசு ஏற்றுகொள்வது ஒன்றும் புதிதல்ல
அப்படியான தமிழக அரசு, போயஸ் கார்டனில் வெட்டு குத்து என நிலமை எல்லை மீறி செல்லும்பொழுது அதனை அரசுடமை ஆக்கினால்தான் என்ன?
அதிமுக ஜெயா சொத்துக்கு ஒரு நீதி? செட்டியார் சொத்துக்களுக்கு ஒரு நீதியா?
எதற்கு பொறுக்கவேண்டும்? முன்னாள் முதல்வரின் வாரிசில்லா சொத்தான அந்த நினைவுசின்னம் அரசுடமை என தமிழக அரசு அறிவித்துவிடலாம்,
அதன்பின் தீபா, ரிபப்ளிக் டிவி என்ன? எல்லோரும் செல்லலாம், பழனிச்சாமியே தான் குனிந்து நின்ற வரலாற்று சிறப்புமிக்க இடத்தினை அடிக்கடி பார்த்து அழுதுவிட்டு வரலாம்
தமிழகத்தில் நடக்கும் ஆட்சி கேவலமாக,அசிங்கமாக இருக்கிறது: ஓபிஎஸ்
அது ஜெயா ஆட்சியாக இருக்கும்பொழுதும் அசிங்கமாக இருந்தது, உங்கள் ஆட்சியில் மகா அசிங்கமாக இருந்தது, இப்பொழுது கேவலமான மகா அசிங்கமாக இருக்கின்றது
என்று அது நன்றாக இருந்தது? என்றுமே அது அசிங்கமான ஆட்சிதான். அதுவும் வளர்ப்புமகன் திருமண காலம், ஆசிட் வீச்சு காலம், ஜெயா சிறைகாலங்கள், சசிகலாவின் மீதான தீர்ப்புகாலங்கள் எல்லாம் மகா அசிங்கமான காலங்கள்
இவர் உள்ளே இருந்ததால் அது இவருக்கு தெரியவில்லை, இப்பொழுது வெளிவந்ததால் அதன் அசிங்க தோற்றம் இவருக்கு நன்றாக தெரிகின்றது