ஜெர்மனியில் சுற்றல் பயணத்தை முடித்த மோடி, ஸ்பெயினுக்கு சென்றார்

ஜெர்மனியில் சுற்றல் பயணத்தை முடித்த மோடி, ஸ்பெயினுக்கு சென்றிருக்கின்றார்

ஜெர்மன் நிச்சயம் பொருளாதார வல்லரசு, இன்றைய நிலையில் சக்திவாய்ந்த நாடு, என்ன ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது பற்றி தெரியவில்லை, இந்தியாவில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தாராம்

ஜெர்மனியின் எந்திரங்கள் உலகெங்கும் போல இந்தியாவிலும் ஓடுகின்றது, பின் ஏன் அழைப்பு?

ஸ்பெயின் இன்று போர்ச்சுகல், கிரீஸ் போல கொஞ்சம் தடுமாறும் நாடு, அங்கும் மோடி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கின்றார்

மாடுகளை வதைக்காதீர்கள் என கூடுதலாக ஆலோசனையும் சொல்லியிருக்கலாம்

அடுத்ததாக பிரான்ஸ் செல்கின்றார் மோடி, அங்கு பதவிக்கு வந்திருக்கும் புது அதிபரை சந்திப்பாராம்

பிரான்ஸ் விமான நுட்பத்தில் பெயர் பெற்ற நாடு, அவர்களின் போர் விமானங்கள் இந்திய ராணுவத்திலும் உண்டு, மிராஜ், ஜாகுவார் என சீறும் ரகம் அவை, அந்த ஒப்பந்தங்கள் வலுப்படுத்த வேண்டியவை

அதன் பின் மோடி ரஷ்யா செல்வாராம், இந்தியாவின் தவிர்க்க முடியாத நாடு ரஷ்யா, பேசுவதற்கு ஆயிரம் விஷயம் உண்டு, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் திட்டத்திற்கு ஆலோசனை வரை கேட்கலாம்தான்

ஆனால் இருவரும் கூடங்குளத்தில் 8, 9ம் அணுவுலை என சொல்லிவிடுவார்களோ? என்பதுதான் பயம்

பார்க்கலாம்

ஜெர்மனியில் பிரியங்கா சோப்ராவினை சந்தித்த பிரதமர், பிரான்ஸில் குஷ்பூவினை சந்திக்க திட்டமிட்டிருப்பாரோ?

முடியாது, குஷ்பூ இதனை தவிர்க்க சீனா சென்றுவிட்டார்