ஜெ.விடம் ஓ.பன்னீர்செல்வத்தை சிபாரிசு செய்தது பெரிய தவறு: டி.டி.வி. தினகரன்

ஜெ.விடம் ஓ.பன்னீர்செல்வத்தை சிபாரிசு செய்தது பெரிய தவறு: டி.டி.வி. தினகரன்

சசிகலாவினை ஜெயலலிதாவிற்கு அறிமுகபடுத்தியதுதான் மிகபெரும் தவறு என தன் ஆசிட் வடுபட்ட கன்னத்தை தடவி கொண்டே சந்திரலேகா ஐ.ஏ.எஸ் சொல்லமாட்டாரா?

நடராஜனை வைக்கவேண்டிய இடத்தில் வைக்காதது பெரும் தவறு என ஆர்.எம் வீரப்பன் சொல்லமாட்டாரா?

என்னவோ அது விசுவாசத்திற்கு பெயர் போன கட்சி போல பேசிகொண்டிருக்கின்றார்..

இந்த குடும்பம் ஜெயிடம் எப்படி வந்தது என யாரும் யோசிக்க கூட மாட்டார்களா? என்ற சிந்தனை கொஞ்சமும் இல்லை

மொத்த தமிழக மக்களையும் அந்த 122 பேர் போலவே எண்ணிகொள்வார்கள் போல….