ஞானசித்தன்

பாரதி என்பவன் வெறும் கவிஞன் அல்ல, வெறும் தேசாபிமானி அல்ல, சில கட்டுரைகளையும் புத்தகமும் பாடல்களும் எழுதி வயிறுவளர்க்க துணிந்தவனும் அல்ல‌அவன் ஒரு சித்தன், இந்து மரபில் வந்த ஞான சித்தன், அவனின் பாடல்கள் தேசாபிமானிகளுக்கும், கண்ணனின் பக்தர்களுக்கும் காளியின் பக்தர்களுக்கும் இன்னும் வீரசிவாஜியினை தேடுவோருக்கும் விவேகானந்தரை தேடுவோருக்கும் மட்டுமல்ல, அது வாழ்வில் நிம்மதியும் ஞானமும் தேடுவோருக்கும் பயன்படும்திருமூலரும், பட்டினத்தாரும், ஒளவையாரும் பாடிய பாடல்களின் தத்துவங்களை தன் ஒரே பாட்டில் சொல்லி சென்ற பெரும் சித்தன் அவன்வாழ்வின் நிலையாமையும் , உறவுகள் எனும் மாயையினையும், குடும்பம் குழந்தைகள் எனும் பற்றினையும் அவன் துறந்ததையும் வெகு எளிதாக தன் பாடலில் அவன் மறைமுகமாக சொல்லியிருந்தான்பற்றற்ற வாழ்வினையும் மாய வாழ்வின் காட்சிகளையும் மிக சுருக்கமாக அதே நேரம் நெற்றியில் அடித்தாற்போல் சொல்லியிருந்தான்அது அவனின் வாழ்வின் கடைசிகாலங்கள்சம்பாதிக்க தெரியாதவன், பித்து பிடித்தவன், வாழ தெரியாதவன், வெற்று வேட்டு, அரைகிறுக்கன் என பல வகையில் அவன் புறககணிக்கபட்டிந்த காலம் அது.பிள்ளைகள் பாசம் அறியாத பித்தன், மனைவிக்கு மல்லிகை பூ கூட கொடுக்காத மடையன், பெண் பிள்ளைகள் இரண்டு இருந்தும் இரு அணா கூட சேர்க்கா ஊதாரி என சொந்தமும் பந்தமும் இனமும் காரி துப்பிய நேரம்அவன் “நல்லதோர் வீணைசெய்தே நலங்கெட புழுதியில் எறிவாயோ.. சொல்லடி சிவசக்தி” என அவன் தன் விதியினை நொந்து அழுது அழுது அதிலும் விரக்தியாகி ஞானம் எட்டியிருந்த காலம்அப்பொழுது அவனின் காலம் நெல்லை மாவட்டம் கடையத்தில் கழிந்தது, கொஞ்ச நாள் மாமனார் ஊரில் மனைவி வாழ்ந்திருக்க அவன் அப்பகக்ம் சுற்றி கொண்டிருந்தான்தன்மானமிக்க ஒருவனால் மாமனார் வீட்டில் வாழ்தல் முடியாது, பாரதியின் வறுமை அப்படி அவனை தள்ளியிருந்ததுஊரும் உலகமும் அவனை செய்த ஏளனமும், வசவுகளும் இன்னும் அவனை நோகடித்திருந்தன‌அந்நிலையில்தான் அவன் பாடினான்அவன் இளமைகால எட்டயபுர வாழ்வு நினைவுக்குவந்தது, அந்த பெற்றோர் படமாய் நின்றார்கள்அவன் படித்த படிப்பு நினைவுக்கு வந்தது, கற்றதை எல்லாம் நினைத்து பார்த்தான், தன் கற்றதில் பெற்ற கருத்தையும் நினைத்தான்அப்படியே அவன் குடும்பமும் குழந்தைகளும் நினைவுக்கு வந்தார்கள், கண்முன் நடமாடும் குழந்தைகளையும் மனைவியினையும் கண்டான்அப்படியே வானத்து பறவைகளையும் கண்டான், ஓடியாடும் கால்நடைகளை கண்டான், மரங்களை கண்டான்மனதுக்குள் அவன் வீட்டில் படமாய் நிற்கும் தந்தையும், நடமாடும் குழந்தைகளும், பிற்காலத்தில் அவன் விட்டுவிடபோகும் ஆவியும் நினைவுக்கு வருகின்றன‌தான் சந்திக்கும் அவமானங்களோடு அதே நேரம் பெரும் ஞானத்தோடு பாடுகின்றான்உலகமாந்தர் எதெல்லாம் பெருமை கவுரவம் வாழ்வு என கருதுகிறார்களோ, அதையெல்லாம் மாயை என உணந்து பாடுகின்றான்அவன் கல்வியில் கரைகண்டவன் பெரும் வாழ்வும் பணமும் கொண்டாட்டமும் பெற்றிருக்கமுடியும், ஆனால் தர்மத்துகாய் அதனை இழந்தவன் இம்மானிடரின் மாயையினை அறிந்து, அதனை அவர் உணராமல் இருப்பதை அறிந்து பாடுகின்றான்”நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம்சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ?கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,நீங்க ளெல்லாம்அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,நீங்களெல்லாம்கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ?கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்கோலமும் பொய்களோ?-அங்குக் குணங்களும் பொய்களோ?சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லைகாண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்”ஆம் , வாழ்வின் நிலையாமையினை இதனைவிட யார் சொல்லமுடியும்?இங்கு காணும் எல்லாம் மாயை, இங்கு ஆழகற்றது கூட மாயை, எல்லாம் மாயை என உணர்ந்துபாடும் பாரதிநின்றதும் நிற்பதும் மாறும், வருவதும் மறையும் என தொடங்கும் பாடலில் வானமும் மாயை காணும் எல்லாமும் மாயை என பாடும் பாரதி இன்னும் ஆழமாக செல்கின்றான்கண்ட காட்சி கண்ட உறவுகள் அது கொடுக்கும் குணங்கள், சிரிப்பு பாசம் அழுகை கண்ணீர் வஞ்சகம் பொறாமை அன்பு சண்டை என எல்லாமும் மாயை என உணர்ந்து மானிட வாழ்வை சோலைக்கு ஒப்பிட்டு பாடுகின்றான்சிறிய விதையில் இருந்து மரங்கள் வருவதும் மரங்களில் இருந்து விதைகள் வருவதும் மாயை , இந்த உயிர்கள் தொடர்ச்சியே மாயை என அவனே ஞானசிரிப்பு சிரிக்கின்றான்மறுபடியும் ஆழத்துக்கு செல்கின்றான்சென்றவர்கள் இனி வரமுடியாது, வந்ததும்தங்கமுடியாது என்பதை உணர்ந்து சென்றது பொய்யான உலகம் இது , பொய்யான வாழ்விது என உணர்பவன் கடைசியாக பெரும் தத்துவத்தோடு முடிக்கின்றான்”காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லைகாண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்”காண்பதெல்லாம் உறுதி என நம்புகின்றோம் அது அல்ல காண்பது எதுவுமே உறுதியானது அல்ல, நாம்காணும் காட்சி எல்லாமே அன்னை சக்தி போட்டு காட்டு கோலங்கள், அவளின் இயக்கம், அதுதான் நித்திய உண்மை என முடிக்கின்றான்இந்த உலகம் அன்னை சக்தி மாய காட்சிகளால் ஆடும் இடம், அன்னை சக்தி ஒன்றே நிலையானவள், அவள் உலகை இயக்கும் காட்சியில் மானிடர் மயங்கிகொண்டிருக்கின்றனர் என நிம்மதி கொள்கின்றான் பாரதி”சொல்லடி சிவசக்தி” என அழுதவன் , “காண்பது சக்தியாம்” என இப்பாடலில் ஆறுதல் கொள்கின்றான்ஒவ்வொரு மனிதனுக்கும் ஆறுதல் தரும் பாடல் இதுவாழ்வின் ஒவ்வொரு கட்டத்தில் இருக்கும் மனிதனுக்கும் பெரும் ஞானநிம்மதி தரும் பாடல் இதுதாயும் தகப்பனும் படமாக நிற்கும் பொழுது, குழந்தைகள் ஓடி ஆடி விளையாடும் பொழுது, ஒரு நாள் நாமும் இவ்வுலகை நீங்கி படமாக நிற்போம் எனும் பொழுதுபெரும் தோட்டமும் அந்த இளமைகால நினைவுகளும் விளையாட்டும் சந்தித்த மனிதர்களும் பழைய நினைவுகளும் மேலோங்கும் பொழுது இந்த பாடல் நினைவுக்கு வராமல் போகாதுபந்தபாசம் என்பது மாயை, எல்லாமே மாயை என்பதை இப்பாடலை தவிர விளக்க முடியாதுவெறும் மயக்கங்களிலும் புரிந்துகொள்ளமுடியா வலிகளிலும் இன்னும் பல அவமானங்களிலும் வேதனைகளிலும் பிரிவுகளிலும் அழுகையிலும் இப்பாடல் எப்பொழுதுமே துணை நிற்கும்அவ்வகையில் ஒவ்வொரு மனிதனின் ஆன்மாவுக்குமான பாடலை எழுதி வைத்தான் அந்த ஞானசித்தன்