டாக்டர் சாந்தா
தமிழகக பெண்களில் மிகபெரும் பிம்பம் அவர், அரசியலுக்கு கலைஞர் என்றால் சந்தேகமின்றி சொல்லலாம் தமிழக புற்று நோய் ஆராய்ச்சிக்கு அவர்தான் மிகபெரும் தொண்டாற்றியிருக்கின்றார்
டாக்டர் சாந்தா
அவரின் குடும்ப பாரம்பரியமே மிக பெரிது, நோபல் பரிசு பெற்றவர்களான சர் சிவி ராமனும், சந்திரசேகரும் அவரின் முன்னோர்கள்
அவர்கள் இயற்பியலில் பிரகாசித்தது போலத்தான் இவரும் பிரகாசிக்க வேண்டும் என வளர்க்கபட்டார். இது குலகல்வி முறை அல்ல, குலபெருமையும் அல்ல மாறாக முன்னோர் சாதித்ததில் சாதிக்க வேண்டும் என்ற ஒரு வைராக்கியம்
ஆனால் இவரின் மனம் ஏனோ இயற்பியலுக்கு செல்லவில்லை, மருத்துவம் பக்கம் திரும்பியது
அரசியல்வாதி குடும்பத்திலிருந்து மருத்துவத்துக்கு திரும்பினாலும் மறுபடியும் அரசியல்வாதியான தமிழிசை போல அல்லாமல் இவரோ மறுபடி இயற்பியலுக்கு திரும்பாமல் மருத்துவத்திலே நின்றார்
தமிழக மருத்துவதுறையில் யாருக்கும் இல்லா சிறப்பு அவருக்கு உண்டு
ஆம் மகளிர் குல திலகம் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியோடு இணைந்து பணியாற்றினார், அவருக்கு பின் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இவர் கட்டுபாட்டிலே வந்தது
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் மருத்துவ வாரிசு இவர்தான்
அன்று மிக சிறிய மருத்துவமனையாக தொடங்கபட்ட அம்மருத்துவமனை இன்று ஆசியாவிலே புற்றுநோய்க்கு மிக சிறந்த மருத்துவமனையாக விளங்குகின்றது என்றால் அதற்கு சாந்தாவின் உழைப்பு மிக முக்கிய காரணம்
ஓரளவு இன்று தமிழகத்தில் புற்றுநோய் கண்டவர்களின் வாழ்நாள் நீட்டிக்கபடுகின்றது என்றால் அதில் டாக்டர் சாந்தாவின் பங்கும் உண்டு
இந்திய அரசின் பத்ம விருதுகளை பெற்றவர், அன்னை தெரசா விருதும் வழங்கபட்டது
உண்மையில் பாரத ரத்னா விருதுக்கு மிக தகுதியானவர் இந்த மருத்துவ தேவதை
இன்று அவருக்கு பிறந்தநாள்
உறுதியாக சொல்லலாம், தமிழகத்தில் 92 வயதில் இருக்கும் மிக பெரும் சாதனையாளர் அவர்
இன்றைய நிலையில் வயதிலும், சாதனையிலும் அவரை இன்னொரு பெண் நெருங்கவே முடியாது, அதுவும் புனிதமான மருத்துவதுறையில் முக்கியத்துவமான புற்றுநோய் ஆய்வில் அவரை நெருங்க வாய்ப்பே இல்லை
உலகமே கவனிக்கும் ஒப்பற்ற பெண்மணி அவர்
ஆனால் தமிழக கட்சிகளோ, ஊடகங்களோ பேசுமா? பேசாது
அட பெண்களின் உரிமையினை காக்க வந்த பெண்ணிய மற்றும் பெரியாரிஸ்ட் இயக்கங்களோ அவரை போற்றுமா என்றால் போற்றாது
காரணம் அவர் ஒரு பிராமணர்
மற்ற சாதிக்காரர்கள் மெழுகுவர்த்தியாக இருந்தாலும் ஓஹோ என கொண்டாடபடுவதும் , பிராமணர்கள் சூரியன் போல மின்னினாலும் கண்டுகொள்ளபடாமல் செல்வதும் தமிழக திராவிட நீதி
அதன் பெயர்தான் இங்கு சமூக நீதி
அன்று இட ஒதுக்கீடு இல்லை, இந்த சாந்தா உருவாகி வந்துவிட்டார்
இன்று இட ஒதுக்கீடு என்ற பெயரில் எத்தனை சாந்தாக்களை விரட்டி அடித்திருக்கின்றதோ இச்சமூகம் என்பதுதான் கவலையான விஷயம்.
இட ஒதுக்கீடு எனும் பெயரில் பலரை வாழவைக்கின்றோம் என சொல்லி பல திறமையானவர்களை விரட்டி விடுகின்றோம்
அதன் விளைவு திறமையானவர்கள் அத்துறையில் உருவாவது இல்லை, அதன் நோக்கமே அடிபட்டு போகின்றது
இட ஒதுக்கீட்டால் அரசியல் செய்யலாம், வாக்குகளை அள்ளலாமே தவிர திறமையான விற்பனர்களை ஒருநாளும் உருவாக்க முடியாது
ஓரளவேனும் திறமையுள்ளோர்க்கு வாய்ப்பு கொடுத்தல் வேண்டும், அல்லாவிடில் ஒன்றும் உருப்படாது
தேசம் கொடுத்த கல்வியினை இத்தேசத்திற்கு மருத்துவ பணியாய் திருப்பி கொடுத்த, தன் செயலை மிக தீர்க்கமாக செய்து அகில உலக அளவில் புகழ்பெற்றுவிட்ட அந்த மருத்துவ தமிழச்சிக்கு, அந்த மூதாட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அவர் ஆயிரம் பிறைகண்டு இன்னும் வெற்றிமேல் வெற்றி பெற வாழ்த்துக்கள்
தமிழகத்தார் அவரால் பெருமையடைகின்றார்கள், அவர் ஒரு தமிழ்ப்பெண் என சொல்லும்பொழுது தமிழக மகளிருக்கு ஒரு மகிழ்ச்சியும் பெருமையும் தானாக வருகின்றது
(அவர் பத்மபூஷன் பெற்ற காட்சியினை மறக்க முடியாது, தமிழர் கலாம் ஜனாதிபதியாக இருந்து தமிழச்சி சாந்தா பெற்ற விருது அது
மிக பெருமையான விஷயம் அது, ஆனால் பல திராவிட பெரியாரிய இன்னும் பல இம்சைகள் எல்லாம் இதில் கள்ள மவுனம் காப்பார்கள்
ஆம் அவர்கள் அரசியலை தாண்டிய தமிழர்கள் டெல்லியில் பெரும் இடம் பெறும்பொழுது கண்ணை மூடிகொள்வது அவர்கள் வழக்கம்..)