டால்மியா கோட்டை
டால்மியா என்பவர் மிகபெரும் சக்தி, அவர்குழுமம் தமிழ்நாட்டில் கல்லகுடியினை டால்மியாபுரம் என மாற்றியபொழுது தன்மானத்தோடு பொங்கி எழுந்தது தமிழகம், உபயம் திமுக
இன்று டெல்லி செங்கோட்டையின் பராமரிப்பு பொறுப்பை டால்மியாவிடம் மோடி அரசு கொடுக்கின்றதாம், பிண்ணணி காரணம் அந்த டால்மியா விஸ்வ ஹிந்து பரிஷத் அனுதாபியாம்
கல்லகுடியில் டால்மியாவினை விரட்டிய திமுக எங்கே? பெரும் பாரம்பரியமிக்க செங்கோட்டையினை இனி டால்மியா கோட்டை என மாற்ற துடிக்கும் பாஜக எங்கே?
இனி செங்கோட்டையினை விற்ற கட்சி என்ற அவப்பெயரை சுமக்க தயாராகின்றது பாஜக
கல்லகுடியில் இழந்ததை மதவாத சக்தி மூலம் செங்கோட்டையில் பெறுகின்றது டால்மியா குழுமம்
அது இனி டால்மியா கோட்டை என மாற்றம்பெற்றாலும் ஆச்சரியமில்லை, தண்டவாளத்தில் தலைவைத்து போராட அங்கு கலைஞரா உண்டு?