டிக் டோக்

டிக் டோக் என்பது கோமாளிகளின் கூடாரம் என்பது போய் பலரின் வாழ்வினை கெடுத்து நடுதெருவுக்கு இழுத்துவரும் சீர்கேடாகவும் மாறிற்று

டிக் டோக்கில் சில பெண்களின் ஆட்டம் சகிக்கமுடியாது, அதை பார்த்தபின்புதான் ஏன் ஒரு காலத்தில் பெண்களை அடக்கி வைத்தார்கள் என்ற சிந்தனையே ஏற்பட்டது

அந்த அளவு தங்கள் திறமையினை வெளிகாட்ட கிடைத்த வாய்ப்பாகவே அதை கருத தொடங்ககிவிட்டார்கள்

இந்தில் ரெவிடி பேபி சூர்யா என்பவர் பிரபலமானார், அது விஷயமல்ல. அவருக்கான ரசிகர் கூட்டம் ஏற ஏற அவரின் ஆடை குறைந்துகொண்டே வந்ததுதான் சிக்கல்

இவர் போலவே முத்து என்றொரு ஆண் கோமாளி இருந்தார், இருவரும் மோதினார்கள், ஊர் வேடிக்கை பார்த்தது.

பொதுவாக பிரபல குரங்கு கிடைத்தாலே அவர்களை வைத்து காசுபார்க்கும் ஊடகம் இருவரையும் வைத்து நிகழ்ச்சி எல்லாம் செய்தது

விளைவு என்னவெல்லாமோ நடந்திருக்கின்றது, அவள் குடும்பம் பிரிந்திருக்கின்றது

அம்மணி இப்பொழுது தனிமரமான பின் ஏராளமான டிக்டாக் ரோமியோ பறவைகள் கூடுகட்ட வந்திருகின்றன, சில தோளில் அமர்ந்திருக்கின்றன. சில தலையில் உருண்டிருக்கின்றன, சில கிளி போல பேசியிருக்கின்றன‌

கிளி என்றால் கிளிக்கு கூடு கட்ட தெரியாது மாறாக.. வேண்டாம்…..சபை நாகரீகம் முக்கியம்

இப்பொழுது தனிமரமான அம்மணி தனக்கு பாலியல் தொல்லை என நடந்தது நடக்காது, கிழிந்தது கிழியாதது தைத்தது தைக்காதது என எல்லா கதையினையும் சொல்லி டிக் டாக்கில் அழுது கொண்டிருக்கின்றது

அந்த அழுகையினை காண சிரமாயிருக்கின்றது, எல்லாம் வீணாக தேடிகொண்ட சிக்கல்

பெண்ணுரிமையின் எல்லை என்பது இதுதான், ஆணின் பாதுகாப்பு அவசியம் என்பதை இவரின் வாழ்வு அறுதியிட்டு சொல்கின்றது

ஆண் எனும் வேலி இல்லா பெண் பயிர் எப்படி எல்லாம் மிதிபடும் , எப்படி எல்லாம் வளைக்கபடும் என்பதெல்லாம் அந்த கண்ணீரில்தான் புரிகின்றது

ஆக டிக்டாக் போதை ஒரு குடும்பத்தை பிரித்து ஒரு பெண்ணை திசைமாற்றி விட்டது

இது பகிரங்கமாக அம்மணி சொன்ன செய்தி, அதையும் டிக்டாக்கில்தான் சொன்னது

அம்மணி தன் ரசிகர்களை நம்பியிருக்கின்றது, நம் ரசிகர்களா? அவர்கள் சில்க் ஸ்மிதா சாவினையே கண்டுகொள்ளாமல் சென்றவர்கள், இவரையெல்லாம் கண்டுகொள்வார்களா?

இப்படி ஏராளமான டிக்டாக் பெண்களின் சோகம் உண்டு, எல்லாம் விட்டில் பூச்சியாக பெண்கள் சிக்கி பாதை மாறிய கதைகள்

மது, கஞ்சா, அபின் மட்டும் போதை அல்ல, போதையில் கொடும் போதையாக டிக் டாக் மாறி வருகின்றது

வீட்டு பெண்களை டிக்டாக் போதையில் இருந்து மீட்பது குடும்பத்தார் கடமை